நான்
எழுதிய முதல்சிறுகதை கல்கியில் இரண்டாம் பரிசுபெற்றது! அந்தப் போட்டியில் “சிபிகள்”எனும்
அற்புதக் கதைக்காக முதல்பரிசு பெற்றவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி! அதற்கு
முன்னரே நானும் அவரும் தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில்
இணைந்து பணியாற்றி வந்ததால் நல்ல அறிமுகம் உண்டு! அதற்குப் பின்னர் நல்ல
நெருக்கமான தோழர்களும் ஆனோம்!
பின்னர்
இவரது சிபிகள் தொகுப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்க்குப்
பாடநூலான போது, எனது கவிதைத்தொகுப்பு “புதியமரபுகள்” அதே பல்கலையில் பாடநூலானதும்
வாழ்த்துரைத்தார்!
கிட்டத்தட்ட
40ஆண்டுக்காலப் பழக்கம்!