எட்டாம் ஆண்டு புதுக்கோட்டை புத்தகத் திருவிழா - 2025

எட்டாவது ஆண்டாக நடக்கும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நான் இந்த ஆண்டு முழுஈடுபாட்டோடு இல்லை. (உடல்/மன நிலை ஒரு காரணம், தமுஎகச மாவட்ட மாநாடுகள், மாநில மாநாட்டு - மலர் பணிகள் மறு காரணம்)  இதை அறிவியல் இயக்க நண்பர்களிடமும் தெரிவித்து விட்டேன்.

நான் பொறுப்பெடுத்து நடத்திய முந்திய ஆண்டுகளில் மற்ற பேச்சாளர்களை, தமிழறிஞர்களை, அறிவியல் அறிஞர்களை அழைத்துப் பேச வைத்தேன். விருதுநகர், முகவை, சிவகங்கை புத்தக விழாக்களில் என் தலைமையில் நடத்திய இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றத்தைப் புதுக்கோட்டை புத்தகவிழாவில் இதுவரை நான் நடத்த முன்வைத்ததில்லை.

இந்த ஆண்டு அந்தப் பொறுப்பில் இல்லாததால், எனது தலைமையில் பட்டிமன்றம் நடத்தித்தரக் கேட்டபோது தட்ட முடியவில்லை! 

விழாவின் இறுதி  நாளில் 12-10-2025 - அன்று நமது 

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம் நடக்கிறது : 

பேச்சாளர்களை இறுதிப் படுத்தி அழைப்பிதழ் அச்சிடுவது எனும் எனது பொறுப்பை இந்த ஆண்டு ஏற்று, என்னைவிடவும் பல சிரமங்களைச் சந்தித்து, என்னை விடவும் சிறப்பாகச் செய்து வருகின்ற, எழுத்தாளரும் தமுஎகச மாவட்டத் தலைவரும் புத்தகவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான தோழர் ராசி.பன்னீர் செல்வம் கேட்டபோது தயக்கத்தோடுதான் ஒப்புக் கொண்டேன்

இதோ அந்த நிகழ்வு - 

(இந்தப் பதாகை உள்ளிட்ட உதவிகளை உடனுக்குடன் செய்துதரும்
ஆலங்குடி தோழர் அறிவொளி கருப்பையா போலும் 
ஈடுபாட்டை எப்படிப் பாராட்டுவது? நன்றி தோழா
)

அடுத்து நம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் நடக்க உள்ள சுழலும் கவியரங்கம் எனும் புதுமையான நிகழ்வையும் 

நீங்கள் அவசியம் கண்டு கேட்டு மகிழ வேண்டும்! 

வருக! வருக!!

எல்லாருமே நம்ம ஊர்ப் பேச்சாளர்கள்தாம்!

நம்ம ஊர்க் கவிஞர்கள்தாம்! என்பதே 

புதுக்கோட்டையின் பெருமை! 

பத்துநாளும் பல்வேறு அறிஞர்கள், கலைஞர்கள், சிறப்புப் பேச்சாளர்கள் கலந்து கொண்டாலும் இது எனக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது – வாய்ப்போர் வாருங்கள்!

------------------------------------- 

விழாக்களின் இடையில்  நேற்று நடந்த

தங்கை மைதிலிகஸ்தூரிரங்கன்  எழுதிய 

"அன்பே அலெக்ஸா"

கவிதைநூல் அறிமுகமும் சிறப்பு!


இடையில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு:  

அய்யா ஆர்.பாலகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் 

------------------------------------------------------------

அழைப்பிதழ் 

முதல்நாள் முதல்பக்கம் இது:

 

நிறைவு நாள் 

நிறைவு நிகழ்ச்சியின் பக்கம் இங்கே -


(இடையில் நடந்த தம்பி சோலச்சியின் நூல்வெளியீட்டுக்கு 

நான் இருக்க முடியாமல் சிவகங்கை மாவட்ட 

தமுஎகச மாநாட்டுக்குச் 

செல்ல வேண்டிய நிலை மாதிரி நிறைய..)

----------------------------

நேற்று, (3ஆவது நாள்) 

அறிவியல் இயக்கத் தலைவர் 

தோழர் சுப்பிரமணியன் அவர்கள் 

காலை நிகழ்விலும்

அய்யா ரெ.பாலகிருஷ்ணன் இஆப.

சிறார் இலக்கியச் சிற்பி விஷ்ணுபுரம் சரவணன்

தோழர் ஸ்டாலின் சரவணன் 

ஆகிய மூவரும் பேசிய 

மாலை நிகழ்வுகளின் ஒளிப்பதிவு –

நன்றி – புதுகை வரலாறு நாளிதழ் – திரு சிவா

https://www.youtube.com/live/wDTCylYLTWE?si=9uL_lyzd6HRrP3pe 

கண்டு கேட்டு கருத்துகளைப் பகிருங்கள்

-----------------------------

பாரதி தம்பியின் அருமையான வலையொளி - வாருங்கள், பாருங்கள் நண்பர்களே!

தனது சமூக உணர்வுமிக்க எழுத்துகளால் 

ஏற்கெனவே பத்திரிகையாளராகவும் 

அறியப்பட்ட திரு பாரதி தம்பி தற்போது 

தொடங்கியிருக்கும் வலையொளி (யூட்யூப்) காண வருக!

எடுத்த எடுப்பிலேயே முதல் பதிவிலேயே 

இந்திய மக்களை வஞ்சிக்கும் ஒரு பெரும் 

ஊழலைப் பற்றிக் 

கார சாரமாகப் பேசியிருக்கிறார்

நண்பர்கள் அனைவரும் பார்ப்பதோடு,

வலையொளியைப் பின்தொடரவும் 

அன்புடன் அழைக்கிறேன்

வலையொளி இணைப்புக்குச் சொடுக்குக – 

https://youtu.be/GIE4axStuRY?si=3DMcRCF0N8k1n_4p  

-------------

இவரது நூல்கள் சிலவற்றை 

நண்பர்கள் படித்திருக்கக் கூடும்

படிக்காதவர்கள் இவற்றை வாங்கிப் 

படித்துவிடுங்கள்! 






-------------------------------- 

அச்சு ஊடகப்பயணத்தில்

நேர்மையும் கூர்மையுமாகப் பணியாற்றிய

திரு பாரதி தம்பி

தனது புதிய வலையொளிப் பயணத்தில் 

ஊடகச் சிகரங்களைத் தொடர

உளமார வாழ்த்துகிறேன்.

---------------------

நண்பர்கள் பார்ப்பதுடன்

பணிகள் தொடர வாழ்த்துவதுடன்

நண்பர்களுக்கும் அனுப்பித் தொடர

வாழ்த்துவோம்!

இவர் எங்கள் புதுக்கோட்டை மாப்பிள்ளை

என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி!

----------------------------- 

நாமக்கல் புத்தகத் திருவிழாவில் எனது உரை

தலைப்பு 

 "நான் வீழ்வேன் என நினைத்தாயோ? -

-இப்படிக்கு, தமிழ்"


இணைய இணைப்பில் இணைய, சொடுக்குக:

https://www.youtube.com/watch?v=6n5EWjhPEWQ

காணொலிக்கு நன்றி:

மாவட்ட நிருவாகம், பள்ளிக் கல்வித்துறை, 

பொது நூலக இயக்கம், புத்தகத் திருவிழாக்குழு

நண்பர்கள் - நாமக்கல்

மற்றும்

"தென்றல் தமிழ் வலைக்காட்சி"  

முனைவர் மகா.சுந்தர்

புதுக்கோட்டை

-----------------------------------------------------------------------

வெங்கடேஸ்வரா பள்ளியில் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தேன்

அரசுப் பள்ளியோடு போட்டியிடும் அளவுக்கு,  மாணவர் மையமாகவே பள்ளியை நடத்தும் தங்கம் மூர்த்தி, எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்பவர் என்று பல்லாண்டுகளாகப் பெயர்பெற்றவர். 

எந்தப் பள்ளி அரசு – ஆசிரியர் – மாணவர் என்னும் முக்கோணக் கல்வி முறையில் மாணவரை மையமாகக் கொண்டு நடக்கிறதோ அந்தப் பள்ளி தான் சிறந்த பள்ளி என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை.

மாநில, ஒன்றிய அரசுகளின் சிறந்த ஆசிரியருக்கான விருதையும், டெல்லியில், ஒரு சிறந்த பள்ளிக்கான விருதையும் பெற்றவர் மூர்த்தி.

ஏற்கெனவே 15ஆண்டு முன்பே  “மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் - புத்தகமில்லா நாள் கொண்டாடும் ஒரு நல்ல பள்ளியின் தாளாளர் என் நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி”  என்று எனது தினமணிக் கட்டுரையில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியைக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். எனது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலிலும் குறிப்பிட்டதோடு, அவரிடமே அந்த நூலுக்கு முன்னுரையும் வாங்கி வெளியிட்டதை எனது வாசகர்கள் அறிவார்கள்.

இப்போது, பள்ளியிலேயே ஒரு புத்தக விழாவை நடத்தியிருக்கிறார்.

பாருங்கள் – படங்களே இந்த வரலாற்றைக் குறித்துப் பேசும்:

















            கல்வியாளரும் படைப்பாளியும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் 

கல்வி சிறப்பாகப் பயன்படும் என்பது என் கருத்து.

கல்வியாளரே படைப்பாளியாக இருந்தால்..

அந்தச் சிறப்புக்குரியவர்தான்

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் 

மேனிலைப்பள்ளியை நடத்திவரும்

என் அருமை 

கவிஞர் தங்கம் மூர்த்தி
_________________________________________________

தமுஎகச -16ஆவது மாநில மாநாடு - வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம்

                                          எனது பொதுவாழ்வுக்கு வயது -50

என் உயிரோடும் உணர்வோடும் கலந்த

தமுஎகச வுக்கும் வயது 50

சொல்லப் போனால்

தமுஎகச அமைப்பு மதுரையில்

              நமது முன்னோடிகளால் அமைக்கப்பட்ட              

1975ஆம் ஆண்டில்

திருவையாறு அரசர் கல்லூரி மாணவன் நான்!

அப்போதே

திருவையாறு நகரில் தமுஎச கிளை தொடங்கி

அதன் செயலராகச் செயற்பட்டு,

கவிஞர் தணிகைச் செல்வனை அழைத்து

கவியரங்கம் நடத்தினேன்!

அவர் முழங்கினார் -

"முந்தாநாள் மழையில்

முளைத்தெழுந்த காளான்கள்

ஐந்தம்சத் திட்டத்தை

அரற்றுகின்ற காலமிது"

அப்போது அதன் முழுமையான 

பொருள் எனக்குப் புரியவில்லை

பிறகு புரிந்தது -

பள்ளி, கல்லூரி கற்றுத்தராத

உலக அறிவுக் கல்வியை 

தமுஎகச கற்றுத் தந்தது!

பிறகு 1978இல் புதுக்கோட்டை வந்து

முதல் கிளையை அமைத்த பிறகு

மாவட்டம் முழுவதும் 16 கிளைபரப்பி

மாவட்டச் செயலரானேன்.

1982இல் பாரதி நூற்றாண்டு விழாவை

தசுலுச (TELC) பள்ளியில் 

இரண்டு நாள் நடத்தினோம்

தோழர் கே.முத்தையா வந்திருந்தார்.

1984இல் கந்தர்வன் மாவட்டத் தலைவரானார்..

பிறகு 1991இல் மாநிலத் துணைச்செயலர்..

பிறகு மாநிலத் துணைத்தலைவராக...

காலம் விரைவாக ஓடுகிறது!

இதோ... இப்போது...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்

50ஆவது ஆண்டில் தஞ்சையில் நடக்கவுள்ள

16ஆவது மாநில மாநாட்டுக்கான

வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் 

இன்று மாலை தஞ்சையில் நடக்கிறது

மாநில மாநாடு தஞ்சையில் வரும் டிசம்பரில்!

வரவேற்புக்குழு அழைப்பிதழ் இதோ 

வாய்ப்புள்ளோர் தஞ்சை நகருக்கு வருக


 

--------------------

எங்கள் ஒவ்வொருவர் பேச்சிலும்

நந்தலாலா இருப்பான்!

கரிசல் பாடிக்கொண்டிருப்பான்!

நாறும் பூ மணம் வீசுவார்!

உங்கள் பணிகளை

நம் தோழர்களோடு கைகோத்து

தொடர்வோம் தோழர்களே!!!

-------------------------------- 

‘கலைஞரும் சமூக நீதியும்” மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் எனது உரை – காணொலிப் பதிவுடன்

 கலைஞரும் சமூக நீதியும்”  

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் 

எனது உரை – காணொலிப் பதிவுடன் 

07-08-2025 வியாழன் முற்பகல்


அழைப்பிதழ் 



உலகத் தமிழ்ச் சங்கத்தின் புதிய இயக்குநர்

முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா அவர்கள்
--------------------------------------------------------- 


( ஏற்கெனவே எனது நூல்களைத் தந்துவிட்டதால் ) 

இயக்குநர் பொறுப்பில் 'இனிய உதயமாக' வந்திருப்பதால்,

எனது கட்டுரை வந்திருக்கும்

ஆகஸ்டு2025 "இனிய உதயம்" 

இலக்கிய மாத இதழைத் தந்து மகிழ்ந்தேன்.

அவர்கள் எனது நீண்டகால மேடைத் தோழர் என்பதால்

அவர்களது புதிய பொறுப்புக்கு எனது 

இனிய வாழ்த்துகளையும் 

தெரிவித்து மகிழ்ந்தேன்
-------------------------------- 

நிகழ்ச்சியைச் சிறப்பாக வடிவமைத்திருந்த

மதுரை - உலகத் தமிழ்ச் சங்கத்தின்

ஆய்வு வளமையர்  முனைவர் ஜ.ஜான்சி ராணி,

ஆய்வறிஞர்  முனைவர் சு.சோமசுந்தரி

ஆகியோர்க்கு எனது இதய நன்றி

-------------------------

இனி விழாப் படங்கள்


மதுரை தொல்காப்பியர் மன்றத் தலைவர் 
அய்யா இருளப்பன் நூல்தந்து மகிழ்ந்தார் - மகிழ்ந்தேன்.



மேனாள் இயக்குநர்
முனைவர் பசும்பொன் அவர்களுடன் 



கலந்துகொண்ட ஆர்வலர்கள், மாணவர்கள்



கவிஞர் கவிதாசன், அய்யா இருளப்பன்,
கவிஞர் சோழ.நாகராஜன்,
உடன் எழுத்தாளர் தக்கலை 
 உறலீமா அவர்கள்
(எனது மரபுக் கவிதை வகுப்பு மாணவர் கவிதாசன்!!!)
 


மதுரை தமுஎகச தோழர்கள்
செ.தமிழ்ராஜ், சோழ.நாகராஜன்,
எழுத்தாளர் தக்கலை உறலீமா உடன்



உ.த.ச. நூலகத்திற்கு
நமது நூல்களைத் தந்தேன்




அன்புத் தோழர், நல்ல கவிஞர் பா.மகாலட்சுமி
தனது 2,3ஆவது கவிதை நூல்களான 'கூழாங்கற்கள் உருண்ட காலம்', இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம் இரண்டையும் தந்தார்



பார்வையாளர்களில்  அண்ணன் மூரா.

------------------------------------------- 

(காணொலி காண - கேட்க, 

அடுத்த வரியை அழுத்துங்கள்,

அல்லது வெட்டி தேடுபொறியில் ஒட்டுங்கள்)



மேலுள்ள இணைப்பை வெட்டி ஒட்டி
எனது உரையைக் கேட்டுவிட்டு
உங்கள் கருத்துகளைப் பகிர வேண்டுகிறேன்

எனது உரை -
சரியாக 17ஆவது மணித்துளியில் தொடங்கி,
ஒருமணி நேரம் 
-------------------------------------------- 
விழாவுக்கு வந்து சிறப்பித்த நமது தோழர்
இளங்கோவன் கார்மேகம் அவர்களையும்,
இந்த அழைப்பிதழையே தனது முகநூலில் 
எப்போதும்போல
எடுத்துப் பதிவிட்ட அருமை நண்பர்
கவிஞர் இரா.இரவியைச் சந்தித்தது மகிழ்ச்சி
--------------------------------------

முக்கியமான நன்றி : 
(1) திருமங்கலம் அரசுக் கல்லூரி மாணவ மாணவியர்,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வளர்மதி,
(2) உ.த.ச. காணொலி, புகைப்பட நண்பர்க்கு
-------------------------------------