இன்றென் வயதோ அறுபது
எனினும் மனமோ இருபது
செய்ய நினைத்ததில் ஒருசிறு பகுதியும்
செய்யாப் பொழுதே பெரும்பொழுது! -
காலம்
பைய நடந்தது, வயிறு வளர்ந்தது,
பயணப் பயனோ வெறும்பழுது! – (இன்றென்
வயதோ
நன்றென்ன செய்தேன்? என்று நினைந்தால்
நகைப்பே மிஞ்சும்! பகைமிஞ்சும்!
– சில
நன்றென எண்ணிய சில,பின் னாளில்
நஞ்சென மாறிய தொகைவிஞ்சும்! - (இன்றென்
வயதோ
நல்லஎன் துணைவி நல்லஎன் பிள்ளைகள்
நண்பர்களாலே இருக்கின்றேன் –
இனி
அல்லஇவ் வுலகில் ஆயிரம் தழும்புகள்
அனைத்தும் கடந்தே நடக்கின்றேன் - (இன்றென் வயதோ
பாரதி, பட்டுக் கோட்டையர் போட்டநல்
பாதையில் தான்என் பயணவழி – எம்
சாரதி மார்க்சுடன் பெரியார், அம்பேத்கர்
சார்ந்தே தொடரும் மரணம்வரை - (இன்றென்
வயதோ
ஆவியைக் கண்டு,அதை “வெளிச்ச“ உலகினுள்
ஆற்றுப் படுத்திடும் “பைரவி“கள்
– பல
பாவியைக் கொண்டும் பதறா உலகில்என்
பலதிறன் கண்டது வெறும்பதர்கள்! -
(இன்றென் வயதோ
சாதி மதங்களில் சுயநலப் பேய்களின்
சாகச நாடகப் பொழுதுகளில் –என்
ஆதி மொழித்திறன் ஆற்றிய தென்?என
ஆழ்ந்து நினைந்தால் பழுதுகளே! - (இன்றென்
வயதோ
இன்னும் சிலபல வருடமிருந்தால்(?)
ஏதேனும் சில செய்வேன்நான் – என
எண்ணும் இன்றே புதிதாய்ப் பிறந்தேன்
இனியன செய்தே உய்வேன்நான்! - (இன்றென் வயதோ
நல்ல கல்வியொடு நல்ல வாழ்வினை
நாடு நலம்பெற உழைத்திடுவேன் –
இனி
உள்ள நாள்களை யேனும் உருப்படி
ஆகப் பயனுறப் பிழைத்திடுவேன்! - (இன்றென் வயதோ
ஐந்தில் வளையா உளத்தை வளைத்தே
அறுபதில் வளைக்க முயல்கின்றேன் –
இனி
நைந்து முடங்கும் உடலைப் பேணிடும்
நல்வழி உழைப்பே அயர்கில்லேன்! -
(இன்றென் வயதோ
நன்றி நன்றி!என் பிழைகளை மறந்த
நட்பால் உயிருடன் இருப்பதனால் –
இனி
என்றும் மறவாப் பண்பொடும் பணிகளை
இனியும் தொடர்வேன் இருபதென! –
((இன்றென் வயதோ
அறுபது கடந்தென்ன ஆயிரம் வந்தென்ன
பதிலளிநீக்குஎன்றும் இளமையுடன்
என்றும் தமிழ் பரப்பிப் பேணும் அறிஞராக
நன்றே நல்லறிவை ஊட்டி
நன்றே நன்மைகள் பல செய்தே வாழ
எல்லாமும் பெற்று
எல்லா வேளையும் புன்சிரிப்போடு
எல்லோர் உள்ளத்தையும் வென்று
நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து
தமிழ்ப் பணி செய்து வாழ
இறைவனை வேண்டுகின்றேன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா!
நன்றி நண்பரே.
நீக்குதங்கள் வாழ்த்துரையில் சொன்னது போல் பணியாற்ற என்னைத் தகுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறேன்.. மீண்டும் நன்றி
அறுபது வயது முடித்த உங்களுக்கு நூறு வயது வரைக்கும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி அய்யா.
நீக்குஒரு சிறு திருத்தம். இன்றுதான் எனக்கு 59முடிந்து 60தொடங்குகிறது (60முடிந்தால்தான் தொடர்வண்டியில் அரைச்சீட்டாமே? அப்பறம்தான் “மூத்த குடிமகன்“ஆவேன்!)
தமிழ்மணத்தின் முகப்பில் ’’இன்றென் வயதோ அறுபது... ’’ என்ற உங்கள் வலைத்தளத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், அன்றைய மறக்க முடியாத இலங்கை வானொலியில் ஒலி பரப்பான “பிறந்த நாள்! இன்று பிறந்த நாள்! நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்! ” – என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குவயது அறுபதிலும் இருபது வயது இளமையோடு வாழவேண்டும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்!
இந்த ஆண்டு புதுக்கோட்டையில், உங்கள் தலைமையில் தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு சீரிய முறையில் நடைபெற வேண்டும்.
த.ம.2
நன்றி அய்யா.
நீக்குநடத்துவோம் அய்யா, திண்டுக்கல் தனபாலன் அய்யாவுடன் அதுபற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறேன். உறுதியாக நடத்துவோம். நன்றி
நீங்க ஸ்வீட் சிக்ஸ்டீன் அண்ணா! சிக்ஸ்டி இல்லை,சரியா:)
பதிலளிநீக்குநீங்க பண்ணுனதே ஒண்ணுமில்லை என்றால்!!!! அப்போ நாங்கெல்லாம் என்ன பண்றது!!!
இன்னும் பன்நெடுங்காலம் நோய்நொடி இன்றி உங்கள் சாதனைகள் தொடரட்டும் அண்ணா!
பிறந்த நாள் வாழ்த்துகள்!
என் பேத்திக்கான உன் வாழ்த்துக் கவிதையில் இதயம் நிரம்பி வழிகிறது தங்கையே! நன்றிடா. பேத்தி செம்மொழி பற்றிய கவிதையை -இப்போது துபையில் இருக்கும்- என்மகன் நெருடா பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன்.
நீக்குஅந்த கவிதையை படைத்தவருக்கு இந்த கவிதை இனிக்குமா தெரியவில்லையே அண்ணா!;) நன்றி அண்ணா!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
என்றென்றும் இருபது... அறுபது இல்லை...நான் நேரில் கண்ட சாயல்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா..
கவிதை அருமையாக உள்ளது ...பகிர்வுக்கு நன்றி த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். இருபதாய்ச் செயல்பட அறுபதின் அனுபவம் பயன்பட வேண்டும். முயற்சி செய்வேன். மீண்டும் நன்றி
நீக்குதமிழ் வாழ நீவிரும் வாழ..இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா
பதிலளிநீக்குநன்றி என் இலக்கியத் தங்கையே!
நீக்குஎன் இனிய வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்குநன்றி வலைச்சித்தரே
நீக்குஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதம +1
நன்றி கரந்தையாரே! நேற்றிரவே தங்கள் குறுஞ்செய்தி வாழ்த்தும் கிடைத்தது. (முகநூலில் தகவல் கிடைத்ததோ? முகநூல் உள்பட என் பிறந்த நாள் குறிப்புகள் அனைத்தும் சரியானவைதான்) நன்றி
நீக்குமிக மகிழ்ந்தும் மிக நீண்டும் வாழ வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்குநன்றி எட்வின். தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னதை உன் அண்ணி சொன்னார். உன் வாழ்த்தில் மிகவும் மகிழ்ந்தேன். நன்றி
நீக்குஇன்று அறுபது காணும் தாங்கள்... மீண்டும் இருபதிலிருந்து தொடங்கி ... முதலிருந்து தொடங்கி அறுபது மீண்டும் காண... நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்...!
த.ம. 7
அட அட உங்கள் கணக்கு அழகு! (60க்கு மேல்தான் சில அனுபவ அறிவு கிடைக்கும் என்பதை அனுபவித்தால்தான் தெரிகிறது) நன்றி அய்யா. ( தமிழ் இளங்கோ அய்யாவை இன்னும் ஓரிரு நாளில் மாலையில் சந்திப்போம் நீங்கள் வருவதானால் நண்பர் விஜூவுடன் சேர்ந்து செல்வோம்)
நீக்குஊக்கும் உமதுள உறுதிகள் பற்றி
பதிலளிநீக்குஉதித்தவர் உலகினி லாயிரமே - மெய்
நோக்கு மும்விழிப் பார்வைக ளாலே
நிமிர்ந்திட வேண்டுந் தமிழினமே!
அறுபதி லாகு மனுபவத் தாழியுள்
அறிவெனுந் தேறல் இனிக்கு மன்றோ?- பின்
இருபதை வெல்லும் இளமையின் துள்ளல்
இருந்ததற் கேங்கிட லியல்பு மன்றோ?
நல்லவர் வாழ நன்மைகள் கூட
நினைப்பது மோர்வகை சுயநலமே! - எனில்
அல்லது காட்ட செவ்வழி யோட்ட
அன்னவர் வாழ்வது பொதுநலமே..!
நீடூடி வாழ வேண்டும் ஐயா!
த ம கூடுதல் 1
நன்றி.
ஐயா வணக்கம்.
நீக்குநீடூழி எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
நன்றி
தமிழ்க்கவிதையில் வாழ்த்துப் பெற்றது என் தவப்பயன். அதுவும் நான் பெரிதும் மதிக்கும் என் நண்பர் விஜூவிடமிருந்து! நன்றிகள்
நீக்குஎன்றும் இளமையுடன் இயங்கும் இதமன்றோ என் அண்ணாவின் இதயம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.
பதிலளிநீக்குநன்றிம்மா. செயல்கள்தான் உண்மையில் நம் உயிர்நாடி.
நீக்குஇதுவரை, சர்க்கரை இருந்தும் நான் நடை பயில்வதில்லை. எதையாவது செய்து இயங்கிக் கொண்டே இருப்பதால். நன்றிம்மா
உலகம் சுற்றும் வாலிபராக இருந்து கொண்டு எங்கே நடைபயில நேரம் தங்களுக்கு...
நீக்குஎங்களுக்காவது இனிப்பு உண்டா ?
அறுபது நூறாக அன்புடன் வாழ்த்துகிறேன்!
பதிலளிநீக்குஅய்யா வணக்கம்.
நீக்குஉங்களின் நூறாவது பிறந்தநாளன்று நேரில் வந்து வணங்கி வாழ்த்த விரும்புகிறேன் அய்யா.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா !
பதிலளிநீக்குஎண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறவும்
இன்பங்கள் அனைத்தும் சூழவும் பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன் ...!
நன்றி தங்கையே! உங்களைப் போலும் அன்புள்ளங்களின் வாழ்த்துகளால் இனியாவது நல்லன செய்ய நம்பிக்கை வருகிறது. நூறாண்டுப் பேராசையெல்லாம் இல்லை. இருக்கும் வரை இயன்ற உதவிகளை அனைவருக்கும் செய்யத்தான் ஆசை.. அதைவிட யாருக்கும் தொந்தரவு தராத வகையில் வாழ்ந்து முடிந்தால் போதுமென்பதும் முக்கியமானது.
நீக்குஉங்கள் தளத்தில் இப்போதுதான் இணைந்தேன். முன்னொரு முறை முயன்று தோற்று, இப்போதுதான் மீண்டும் கவனித்து இணைந்திருக்கிறேன், இனித் தொடர்வேன். நன்றி சகோதரி.
நீக்குமனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஎதிர் வரும் 100 வது பிறந்த நாளுக்கும் நான் வந்து கருத்துரையும், தமிழ் மண வாக்கும் இட ஆசை வாழ்த்துகளுடன் - கில்லர்ஜி
பதிலளிநீக்குதமிழ் மணம் 11
அட அட.. என்ன பேராசை.! அதற்குள் இந்தத் தொழில் நுட்பம் எப்படியெல்லாம் வளர்ந்திருக்குமோ? அதில் நுழைந்தும் வருவோம்.. பேசுவதைத் தானே எழுதிக்கொள்ளும் தொழில் நுட்பம் வளர்ந்து, நினைப்பதை நினைத்தவாறு வரைந்து காட்டும் கணித்தமிழ் நுட்பம் வரலாம்.. வரணும்ல..? நன்றி
நீக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி ரமணி அய்யா. (எங்கள் ஊரில் வலைப்பதிவர் திருவிழா நடத்தத் திட்டமிடும்போது உங்களை அவசியம் கலந்து பேசி முடிவெடுப்போம்.. இன்றைய அம்மா தீர்ப்பில் தேர்தல் விரைவில் வந்தால்தான் நம் திட்டம் மாறக்கூடும்)
நீக்குவாழ்த்த மனம் இருந்தாலும் ,வயதில்லை ,வணங்குகிறேன் :)
பதிலளிநீக்குதங்கள் அன்பிற்கு மிக்க நன்றி பகவானே!
நீக்குஅதுசரி.. அன்பிற்கு வயது ஏதய்யா? தங்களின் நகைச்சுவை உணர்வுக்குத் தங்களை நான் வணங்குவதுதான் முறை! நன்றி
நிகழ்வின் மகிழ்வு இன்னும் மிச்சம் இருக்கிறது...
பதிலளிநீக்குபாடலின் சீரியஸ்னஸ் படத்தினால் இலகுவாகிறது...
மிக்சிங் சரியாத்தான் இருக்கு...
தம +
நிகழ்வின் மகிழ்வின் தொடர்ச்சியைத்தான் என் தங்கை உலகறிய எழுதிவிட்டாரே... பெரியவளைப் பார்க்க வேண்டி ஒருநாள் நாங்கள் வந்து நிற்போம்.. அப்ப வச்சிக்கலாம்..
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇன்று போல் என்றும் வாழ்க. தமிழ் தொண்டு தழைத்தோங்க நீவீர் வாழ்க பல்லாண்டு சகோ.
தங்களின் அன்பான வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நீக்கு//இன்றென் வயதோ அறுபது
பதிலளிநீக்குஎனினும் மனமோ இருபது//
உண்மை உண்மை .
இருபதை மிஞ்சும் வேகம் உங்கள் செயல்பாடுகளில்.வாழ்த்துகள் ஐயா!
இந்தப் பாவகையின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்
வாழ்த்துக்கு நன்றி முரளி.
நீக்குஇது பாவகை இலக்கணத்துள் வராது. ஓசை அடிப்படையிலான கண்ணி (ஓசை ஒத்துவரும் ஈரடி மடக்கு), தனிச்சொல் பெற்று வரக்கூடிய இவ்வகைளை கலிங்கத்துப் பரணி -தனிச்சொல் பெற்றும் பெறாமலும்-, பாரதி, பாரதிதாசனின் பாடல்களில் பரக்கக் காணலாம். தளைவகையில் அடங்குவது பாவகை. ஓசையில் தொடர்வது சிந்து, கண்ணி என்பார்கள்.
இனிய வாழ்த்துகள் சார்!
பதிலளிநீக்குதங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பரே
நீக்குஅன்புநிறை வாழ்த்துக்கள் அய்யா.
பதிலளிநீக்குதங்களின் அன்பான வாழ்த்துக்கு எனது நன்றி நண்பரே
நீக்குஐயா பிறந்த நாள் வாழ்த்துக்கள். தாங்கள் இப்பூமியில் நீண்ட நெடுநாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்லது மீண்டும்..... மீண்டும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.♥♥♥♥♥❇❇❇❇♥♥♥♥♥♥
பதிலளிநீக்குநீண்டநாளெல்லாம் வாழக்கூடாது. நம்வேலையை நாமே செய்துகொள்ளும்வரை வாழ்வதுதான் நமக்கும் பிறர்க்கும் நல்லது - அது யாராயினும். வாழ்த்துக்கு நன்றி
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர் சுரேஷ் அவர்களே!
நீக்கு