எனது 3 நூல்கள் வெளியீட்டுவிழா - அழைப்பிதழ் சமூக-கல்வி-இலக்கிய ஆர்வலர்கள் வருக!

எனது 3 நூல்கள் வெளியீட்டுவிழா 
அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன் 

சமூக-கல்வி-இலக்கிய-ஆர்வலர்கள் 
நண்பர்களோடு வருக! 

பின்வரும் அழைப்பிதழில் கண்டுள்ளவாறு, 
எனது நூல்களின் வெளியீட்டுவிழா 
புதுக்கோட்டையில் நிகழவுள்ளது.

நாள்-05-10-2014 ஞாயிறு - மாலை6-00மணி 
நகர்மன்றம் வடக்கு ராஜவீதி
புதுக்கோட்டை  

உண்மையான மக்கள் கலைஞன் 
நெல்லை கரிசல் குயில் கிருஷ்ணசாமி யின் 
அற்புதஇசை நிகழ்ச்சி பார்க்க 
முன்னதாகவே வரவேண்டும்.
என
அன்புடன் அழைக்கிறேன்
அன்புடன்,
தோழமையுள்ள - 
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
அலைபேசி எண்-94431 93293
------------------- இதோ உங்களுக்கான அழைப்பிதழ் --------------- 


அழைப்பிதழில் உள்ள தேதி மட்டும் 
எங்கள் ஊர் நகராட்சித் தேர்தல் காரணமாக 
அக்டோபர்-05ஆம் தேதி 
என  மாற்றப்பட்டுள்ளது.
வேறு எந்த மாற்றமும் இல்லை.

நூல்களுக்கான அட்டை ஓவியங்கள் 
1,3-ஓவியர் மருது அவர்கள், சென்னை
“கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ -
 அட்டை ஓவியம் திரு குமார், சிவகாசி
அழைப்பிதழ் வடிவமைப்பு-
எம்எஸ்ஆர் டிஜிடல்ஸ், புதுக்கோட்டை.






அழைப்பிதழை அஞ்சலில் பெற விழையும் நண்பரகள் 
எனது மின்னஞ்சலுக்கு 
உங்கள் முகவரியைத் தெரிவிக்குமாறு 
அன்புடன் வேண்டுகிறேன் - 
-எனது மின்னஞ்சல்-
muthunilavanpdk@gmail.com
--- மற்றவை நேரில்... நன்றி வணக்கம் ---
---------------------------------------------------------- 

தீரர் சத்தியமூர்த்தி பிறந்தநாள் - கல்லூரிவிழா சிறப்புரை

நாட்டுக்காக மட்டுமல்ல, பாரதி பாட்டுக்காகவும் 
போராடியவர் தீரர் சத்தியமூர்த்தி!
புதுக்கோட்டை-ஆகஸ்ட்.19. நாட்டுக்காக மட்டுமல்லாமல், மகாகவி பாரதியின் பாட்டுக்காகவும் போராடியவர் திருமயம் தந்த தீரர் சத்தியமூர்த்தி என்று அவரது பிறந்தநாள் விழாவில் புகழாரம் சூட்டினார் கவிஞர் நா.முத்துநிலவன்.
மாட்சிமை தங்கிய மன்னர்கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை நடத்திய தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்தநாள் விழாவுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மீ.வீரப்பன் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது-
நூற்றி இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன், இன்றைய நமது திருமயத்தில் பிறந்த சத்தியமூர்த்தி, சென்னைக் கிறித்துவக்கல்லூரியில் வரலாறும், சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்துவிட்டு, தமிழக வரலாற்றை மாற்றப் பாடுபட்டவர்.
தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராசரைத் தலைவராக்கி அழகுபார்த்தது மட்டுமலல், அவரது தலைமையின்கீழ்  செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகும்! அவர் சென்னை நகர மேயராக இருந்தபோதுதான் இன்றைய பூண்டி நீர்த்தேக்கத்தை, ஆங்கில அரசுடன் வாதாடி அமைத்தார். ஆனால், அந்தப் பணிகள் நிறைவடைவதற்குள் அவர் காலமானதால், பின்னர் காமராசர் அந்த நீர்த்தேக்கத்திற்கு சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம்என்றே பெயரிட்டார்.
நாட்டுக்காகப் பாடுபட்டதோடு, பாரதி பாட்டுக்காகவும் அவர் போராடினார். பர்மா அரசு, நமது பாரதி பாடல்களைத் தடைசெய்ததோடு, பாடல் நூல்களைப பறிமுதல் செய்யவும் ஆணையிட்டதைக் காரணம் காட்டி அன்றைய நம் சென்னை ராஜதானிபாரதி பாடல்களைத் தடைசெய்து, பறிமுதலும் செய்ய சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தது. அதை எதிர்த்து முழங்கிய தீரர் சத்தியமூர்த்தி, “நீங்கள் தாராளமாக எங்கள் பாரதியின் பாடல்களைத் தடைசெய்து கொள்ளலாம், பாரதியின் பாடல் நூல்களையும் பறிமுதல் செய்து எரிக்கவும் செய்யலாம்... எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லைஎன்று தன் பேச்சைத் தொடங்கினார்.
எல்லாரும் அதிர்ந்து போனார்கள்... தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் அது வெட்டி வேலை. ஏனெனில், பாரதி பாடல்கள் அனைத்தும் எங்கள் தேசபக்தி மிக்க தமிழர்களுக்கு மனப்பாடம்! நாங்கள் ஊர்ஊராகப் பாரதியைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவோம்.. மனப்பாட சக்தியைப் பறிமுதல் செய்யும் புதிய எந்திரம் எதையும் நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், உங்களால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. அதனால் நீங்கள் பாடல்களைத் தாராளமாகத் தடைசெய்து கொள்ளவோ எரிக்கவோ கூட ஆணையிடலாம்...ஆனால் அது வீணான வேலை என்பதை கனம் சர்க்கார் புரிந்து கொண்டால் நல்லது”  என்று முழங்கினார். பின்னர் பாரதி பாடல்களைத் தடைசெய்யும் முயற்சியை அன்றைய சென்னை மாநில அரசு கைவிட்டது என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை.
பதவிகளைத் துறந்து தனிநபர் போராட்டங்களில் ஈடுபட்டு, “வெள்ளையனே வெளியேறுஎன்னும் போரை இந்திய விடுதலை இயக்கத்தினர் நடத்திய போது, சிறைப்பிடிக்கப் பட்ட தீரர் சத்தியமூர்த்தி, தனது ஐம்பத்தைந்தாம் வயதிலேயே உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிறைக் காவலர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காலமானார். அந்த வகையில் சிறைவாசத்தின்போது காலமான சத்தியமூர்த்தியின் தியாகம் மிகப்பெரிது.
அவரது பேச்சு வன்மையினாலேயே ரவுலட் சட்டம் மற்றும் மண்டேகு செம்ஸ் போர்டு சட்டங்களைப் பற்றி விவாதிக்க இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டார். அவரிடம் அரசியல் பாடம் படித்த காமராசர், இந்தியா விடுதலை பெற்றபோது முதல் தேசியக் கொடியைத் தனது குருவின் வீட்டிலேயே ஏற்றிவைத்தார். முதலமைச்சரானதும் அந்த மாவீரரின்  துணைவியாரிடமே முதல் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டார்
அவரோடு, தேவதாசி ஒழிப்பு மசோதாவின்போது சட்டமன்றத்தில் வாதிட்டு வென்ற அன்னை முத்துலட்சுமியும் இதே மாமன்னர் கல்லூரியின் அந்நாள் மாணவி என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றைய வரலாற்றுத் துறை மாணவ-மாணவியர் நாளைய வரலாற்றில் இடம்பெறுவோராகவும், எழுதுவோராகவும் இருக்க வேண்டும்
மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார். அடுத்து உரையாற்றிய பாரதி இலக்கியக் கழகத்தின் அமைப்பாளர் ஜெயச்சந்திரன், சத்திய மூர்த்தியின் தேச பக்தியையும் தியாக வாழ்க்கையையும் மாணவ-மாணவியர்க்கு எடுத்துரைத்தார்.
விழாவிற்கு வந்திருந்தோரை வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் இரா.குமரன் வரவேற்றார். இணைப்பேராசிரியர்கள் முனைவர்ச.நந்தீஸ்வரன் அறிமுகவுரையும், துணைப்பேராசிரியர் முனைவர் செ.பனிதாசன் நன்றியுரையும் வழங்கினர்.
மன்னர் கல்லூரிக் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறையின் முன்னாள் துறைத்தலைவர் முனைவர் விஸ்வநாதன், தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன் உள்ளிட்ட பேராசிரியர் பலருடன், இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.  
-----------------------------------------------
(செய்திக்குநன்றி-திரு.இரா.மோகன்ராம், தினமணி செய்தியாளர்            வெளியீட்டுக்கு நன்றி- தினமணி-திருச்சிப்பதிப்பு-21-08-2014)

15-08-2014-எனது தொலைக்காட்சி உரை - விடியோ இணைப்பு



சுதந்திர தினப் பட்டிமன்றம்- 



கலைஞர் தொலைக்காட்சியில்

15-08-2014  அன்று  ஒளிபரப்பானது

சுதந்திரக் காற்றைப் 
பெரிதும் சுவாசிப்பவர்கள்
முதியவர்களாஇளையவர்களா?

- நடுவர் -
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி
 - வழக்காடும் பேச்சாளர்கள் -
 முதியவர்களே                        இளையவர்களே
(1) புதுகை நா.முத்துநிலவன்        (1) மதுக்கூர் இராமலிங்கம் 
 (2) வேலூர் அன்பு             (2) கோவை தனபால்,
 (3) சென்னை விஜயகுமார்       (3) விழுப்புரம் வல்லபராசு
                      ----------------------------------------------------------------------------- 
யூ-ட்யூப் இணைப்புக்குச் செல்ல--

(12நிமிடம் 45ஆவது மணித்துளியிலிருந்து எனது குரல..)

பார்த்து, கேட்டுவிட்டுத் திட்டலாம்....
(சும்மா பார்க்காம,..கேக்காம... “சூப்பர் மா“ என்றோ
“அடப்போயா..“னோ சொன்னா ஏத்துக்க மாட்மோம்ல..)
பார்த்து, கேட்டு கருத்துச் சொல்வோருக்கு
எனது முன்கூட்டிய நன்றி.நன்றி நன்றி
---------------------------------------------------------------------------------

ராஜ் டிவியில் எங்கள் பட்டிமன்ற ஒளிப்பதிவு

தாய்மொழிவழிக் கல்வியே 
இன்றைய தேவை -


ராஜ் தொலைக்காட்சியில் வந்த 
திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றத்தில் 
நா.முத்துநிலவன் வழக்குரை
காணச் சொடுக்குக - யூ-ட்யூப் இணைப்பிற்கு..

https://www.youtube.com/watch?v=EArnp0Sp_Z0&list=PLJQVa3kQtZSyGUph9YOOGuJ_iZFNy-scL
--------------------------------------------
நேற்றைய -15-08-2014 கலைஞர் தொலைக்காட்சியின் எமது பட்டிமன்றத்தை நானும் பார்க்க இயலாத சூழலில், யூ-ட்யூபில் இருக்குமா என்று தேடியதில் கிடைத்த பழைய பட்டிமன்றமிது.. அதைக் கண்டவர்கள் சொன்னால் அதையும் வலையில் ஏற்றலாம்... அதைக் காணமுடியவிில்லையேஏஏஏஏஏ!
------------------------------------------------------------------------------------------------------

கவிஞர் சுவாதியின் -24ஆம்- நூல்வெளியீட்டு விழா..

இன்று நடைபெறவுள்ள இன்னொரு நிகழ்ச்சி -
புதுக்கோட்டை கவிஞர் சுவாதியின் -24ஆம்- நூல்வெளியீட்டு விழா..
இதோ.. அருகில் இருப்பவர்கள் வாருங்களேன்..

இன்றைய குமுதம் சிநேகிதியில் சுவாதி பேட்டி...


நமது வலைப்பக்கக் கவிஞர்கள் கவனிக்க...
சுவாதியின் 24ஆவது நூல் இது...
அப்ப நீங்க...?

கலைஞர் தொலைக்காட்சியில் நமது சுதந்திர தினப் பட்டிமன்றம்

நண்பர்கள் அனைவர்க்கும்
 சுதந்திரத் திருநாள் வாழ்த்துகளைச் சொல்ல
உங்கள் வீட்டுக்கே வருகிறேன்!
-------------------------- 

சுதந்திர தினப் பட்டிமன்றம்- 

கலைஞர் தொலைக்காட்சியில்

15-08-2014 (காலை9மணி) ஒளிபரப்பாகிறது


சுதந்திரக் காற்றைப் 
பெரிதும் சுவாசிப்பவர்கள்
முதியவர்களா? இளையவர்களா?

- நடுவர் -
நகைச்சுவைத் தென்றல் 
திண்டுக்கல் ஐ.லியோனி

              முதியவர்களே                        இளையவர்களே
 (1) புதுகை நா.முத்துநிலவன்        (1) மதுக்கூர் இராமலிங்கம் 
 (2) வேலூர் அன்பு             (2) கோவை தனபால்,
 (3) சென்னை விஜயகுமார்       (3) விழுப்புரம் வல்லபராசு
                      ----------------------------------------------------------------------------- 

யூ-ட்யூபில் ஏற்றும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் 
பட்டிமன்ற ஒளிபரப்பு முழுவதையும் ஏற்றிய பின்,
 என் பேச்சைத் தனியாகவும் ஏற்றி, 
அதைப் பார்க்கும் வழியையும் தெரிவிக்கும்படி 
அன்புடன் வேண்டுகிறேன்-15-08-2014 
--------------------------------------------------------------------- 
இணைப்பு 17-08-2014அன்று கிடைத்துவிட்டது
யூ-ட்யூப் இணைப்புக்குச் செல்ல--
-----------------------------------------------------------------------

உலகம் ரொம்ப வேகமாத்தான் போவுது! -விடியோ பாருங்க..

அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது!
ஆனால்... எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பது
நமக்குத் தெரிவதிலலை அல்லவா?

1969இல் ஆர்ம்ஸட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் இறங்கியபோது, கூடப்போயிருந்த காலின்ஸ் என்பவரைத் தரையில் இருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள்  “இந்த அனுபவம் எப்படி?” என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்-
“ஒரு நாளில் 4முறை சூரியன் உதித்து மறைவதைப் பார்த்தேன்“
(அதாவது பூமி சுற்றும் வேகத்தைப்போல 4மடங்கு வேகத்தில் அந்த விண்கலம்  “அப்பல்லோ-13(?)“ சுற்றியதைத்தான் அப்படிச் சொன்னாராம்!

இப்ப சூப்பர் ஃபாஸ்ட் பஸ், புல்லட் ட்ரெயின் எல்லாம் வந்தாச்சு..
(இன்னும் கொஞ்சநாளில் அரைமணிநேரத்தில் 500கிமீ. போய் சென்னை அமிஞ்சிக்கரை பாவா கடையில டீ குடிச்சிட்டு அடுத்த அரைமணி நேரத்துல வீட்டுக்கு சாப்பிட வந்திடலாம்..
என்ன ஒரே பிரச்சினை... துட்டு-டப்பு-காசு-பணம் வேணும்..)

ஜப்பானியத் திரைப்படம் “புல்லட் ட்ரெயின்” பார்த்தவங்களுக்கு நான் சொல்றது ஆச்சரியமாப் படாது  (இ்ல்லையா கஸ்தூரி..?)

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நம்ம வீட்டுப் பரணியில கிடக்குற 40வருடம் முந்தி பள்ளிக்கூடத்துல படிச்சப்ப வாங்குன(?) ஆட்டோகிராஃப் புத்தகத்தை எடுத்துப் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா?
எனக்கு உண்டு-1970ல அதிராம்பட்டினம் காதர்மொகிதீன் உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்தபோது வாங்கினது இன்னும் இருக்கு...)

அந்த அனுபவம் வேணும்னா... இதப் பாருங்க..
என்ன ஒரு காமெடியா இருக்கு.. ???!!!

உலகம் ரொம்ப வேகமாத்தான் போவுது! இதப்பாத்தா தெரியுது!

தனது முகநூலில் எடுத்துப் போடடு எனக்கும் அனுப்பிய என் மகள் அ.மு.வால்கா(துபை), மற்றும் நெல்லை ராஜன் ஆகியோர்க்கு நன்றி..

சரி... விடியோப் படத்தைப் பார்க்கலாமா..
https://www.facebook.com/anbuvolga/posts/930731426942814
அல்லது -  
https://www.facebook.com/photo.php?v=808419199192347&set=vb.100000728228619&type=2&theater

உலகத் தமிழ் இணைய மாநாடு - 2014-புதுச்சேரி


“வாருங்கள் தமிழர்களே!

இணையத்தி்ல் தமிழ்வளர்ப்போம்”

என அழைக்கும் 
புதுச்சேரிப் பேராசிரியர்
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
குரலைச் செவி மடுப்போம்...
இணைப்புக்குச் செல்ல சொடுக்குங்கள் -


ஒருங்கிணைப்பாளர் - பேராசிரியர்
முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பக்கம் செல்ல-
http://muelangovan.blogspot.in/


முகநூலி்ல் பார்க்க -
https://ta-in.facebook.com/infitt?filter=1 

-------------------------------------------------------------------- 

மேலும் விவரங்களுக்கு - loc2014@infitt.org

“அடிவானம் நோக்கிச் சில அடிகள்“ -முனைவர் பா.மதிவாணன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா.

திருச்சி - பாரதிதாசன் பல்கலைக்கழகத் 

தமிழ்த்துறைத் தலைவர் 

முனைவர் பா. மதிவாணன் அவர்கள் எழுதிய  “அடிவானம் நோக்கிச் சில அடிகள்”, ”தொல்காப்பியம் பால.பாடம்”

நூல்கள் வெளியீட்டு விழா

        தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் முனைவர் பா. மதிவாணன் எழுதிய அடிவானம் நோக்கிச் சில அடிகள் மற்றும் தொல்காப்பியம் பால. பாடம் நூல்கள் வெளியீட்டு விழா 01-08-2014வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை நூல்களை வெளியிட, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழியல் துறைத் தலைவர் மா. இராமலிங்கம் (எழில்முதல்வன்) முதற்படியை பெற்றுக் கொண்டார்.
நூல்வெளியீட்டுவிழாவில் இடமிருந்து வலகமாக, அய்யா நிலையப் பதிப்பக  நிர்வாகி தங்க.செந்தில்குமார், பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன், நூல்களைப் பெற்றுக்கொண்ட -முனைவர் எழில்முதல்வன், நடுவில் முனைவர் அ.தெட்சிணாமூர்த்தி, நூல்களை வெளியிடும் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மா.திருமலை,
மற்றும் கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------- 
விழாவில் கவிஞர் நா. முத்துநிலவன் பேசியது:  அடிவானம் நோக்கிச் சில அடிகள் மற்றும் தொல்காப்பியம் பால. பாடம் ஆகிய நூல்கள் எழுதிய முனைவர் பா. மதிவாணனின் தந்தை பாவலரேறு    ச.பாலசுந்தரம் அவர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ச. பாலசுந்தரம் சங்கத் தமிழ் இலக்கியத்தை பின்பற்றியவர். அவரது மகன் மதிவாணன் நவீன தமிழ் இலக்கிய காலத்தில் உள்ளார். மதிவாணன் நூல்களில் சமூக பார்வை உள்ளதை பார்க்க முடிகிறது என்றார். 
விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. திருமலை பேசியது:
        மதிவாணன் புத்தகத்தில் தேசிய பார்வை, பொதுவுடைமை சிந்தனை உள்ளது. அவரது கட்டுரைகளில் இலக்கியங்களை வரலாற்றுப் பார்வையில் பார்க்கும் முறை நடைபெற்றுள்ளது என்றார்.
        நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு மதுரை செந்தமிழ்க்கல்லூரி முன்னாள் முதல்வர் அ. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம், தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் இரா. காமராசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். நூல்களின் ஆசிரியர் பா. மதிவாணன் ஏற்புரை நிகழ்த்தினார்.இதில் சேக்கிழார் அடிபொடி டி.என். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-நன்றி-தினமணி-03/08/2014 (திருச்சி,தஞ்சை,புதுகைப் பதிப்புகள்)
------------------------------------------------

அடிவானம் நோக்கிச் சில அடிகள்
அணிந்துரை -
கவிஞர் ஈரோடு தமிழன்பன், சென்னை.
உள்ளடக்கம் -
1.நாட்டியலும் பாட்டியலும்,
2.நாட்டுப்பாடல்கள் - ஒரு கண்ணோட்டம்,
3.கலாநிதி கைலாசபதி,
4.பழந்தமிழின் புத்தெழுச்சி,
5.வடிவநோக்கில் புதுக்கவிதை,
6.வ.உ.சி.யின் நாட்டொருமைச் சிந்தனைகள்,
7.பாரதிநோக்கில் பாட்டு-செய்யுள்-கவிதை,
8.பெரியபுராணம் -சுவடிவழி ஆய்வுப்பதிப்புகள்,
9.தெ.ச.சொக்கலிங்கத்தின் “காந்தி“ இதழ்கள் அறிமுகம்,
10.விதியே..விதியே..(எழுத்துச் சீர்மை),
11.புதுமைப்பித்தன் சிறுகதைகளில் மக்களாட்சிப்பண்புகள்,
12.நச்சினார்க்கினியர்,
13.அண்மைக்கால வரலாறு-ஆவணப்படுத்தல் பற்றி
14.பாரதியின் சொல்பதிவுகள்
15.தமிழ் இதழியல் நடையின் வரலாற்றுப்போக்குகள்,
16.திராவிட இலக்கியம் -உடைப்பு-கட்டமைப்பு-செழுமை,
17.மயிலையாரின் இலக்கிய வரலாற்றாய்வு
--------------என 17ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
பக்கம் -168, விலை ரூ.125,
--------------------------------------

தொல்காப்பியம் பால.பாடம்
அணிந்துரை-
பேரா.சி.கு.வெ.பாலசுப்பிரமணியன்,
மேனாள் இலக்கியத்துறைத் தலைவர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை.
உள்ளடக்கம்-
பகுதி-1
1.இலக்கண அமைதி,
2.பொருள் தெளிவு,
3.கொள்கை நோக்கு,
4.காரணம் விளங்காமை
பகுதி-2.
1.தமிழ்மரபில் செவ்வியல் இலக்கிய உரைதிறன்
2.சங்க இலக்கியக் கால வரையறை
3.தொல்காப்பியத்தில் “பாடம்“இல்லை
4.குறுந்தொகைப் பதிப்புகள்,
5.ஞெண்டொன்று கண்டேன், நண்டங்கு இல்லை
6.நெய்தற்கலிப் பாடமீட்பு -இரு பாவேறுபாடுகள்..
7.தொல்காப்பிய அணுகுமுறையில் நவீன இலக்கியங்கள்,
8.கு.ப.ரா.கதைகளில் தமிழ்ச்செவ்வியல் இலக்கியச் சாயல்.
------------என 12 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
பக்கம்-128, விலை ரூ.125


-------------------------------
இருநூல்களின் வெளியீடு,
முனைவர் தங்க.செந்தில்குமார்.
அய்யா நிலையம்,
கதவு எண்-1603, 
ஆரோக்கிய நகர் 5ஆம் தெரு,
மின்வாரியக் காலனி,
நாஞ்சிக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்-613 006
அலைபேசி - 9443007623
--------------------------------
நன்றி - 
1) முனைவர் பா.மதிவாணன் அவர்களின் வலைப்பக்கம்-
http://inithuinithu.blogspot.in/2014/08/blog-post.html
(2) தினமணி வலைப்பக்கம் -
http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/ 08/03/ 
----------------------------------------------------------------------------------