சுதந்திர தினப் பட்டிமன்றம்-
கலைஞர் தொலைக்காட்சியில்
15-08-2014 அன்று ஒளிபரப்பானது
சுதந்திரக் காற்றைப்
பெரிதும் சுவாசிப்பவர்கள்
பெரிதும் சுவாசிப்பவர்கள்
முதியவர்களா? இளையவர்களா?
- நடுவர் -
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி
- வழக்காடும் பேச்சாளர்கள் -
முதியவர்களே இளையவர்களே
(1) புதுகை நா.முத்துநிலவன் (1) மதுக்கூர் இராமலிங்கம்
(2) வேலூர் அன்பு (2) கோவை தனபால்,
(3) சென்னை விஜயகுமார் (3) விழுப்புரம் வல்லபராசு
-----------------------------------------------------------------------------
யூ-ட்யூப் இணைப்புக்குச் செல்ல--
(12நிமிடம் 45ஆவது மணித்துளியிலிருந்து எனது குரல..)
பார்த்து, கேட்டுவிட்டுத் திட்டலாம்....
(சும்மா பார்க்காம,..கேக்காம... “சூப்பர் மா“ என்றோ
“அடப்போயா..“னோ சொன்னா ஏத்துக்க மாட்மோம்ல..)
பார்த்து, கேட்டு கருத்துச் சொல்வோருக்கு
எனது முன்கூட்டிய நன்றி.நன்றி நன்றி
---------------------------------------------------------------------------------
பார்த்துக்கிட்டிருக்கேன் ஐயா...
பதிலளிநீக்குபார்த்துட்டு பின்னூட்டமிடுகிறேன்...
மிகவும் அருமையாகப் பேசியிருக்கிறீர்கள் ஐயா...
பதிலளிநீக்குதேசியக் கொடிக்கு உங்கள் விளக்கம் அருமை....
பாடலெல்லாம் அழகாப் பாடுறீங்க ஐயா...
அருமையான கருத்துரை!
பதிலளிநீக்குகொடிமரங்களுக்கும் வேர்கள் உண்டு என்று நச் என்று சொன்னீர்கள்...மட்டுமல்ல....ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் பற்றி மிகவும் அருமையான கருத்து சொன்னீர்கள் லைக் போடுவதைப் பற்றியும் அது சுதந்திரம் அல்ல என்றும்......உண்மை உண்மை.....
பாட்டு மிக அருமையான குரலில் பாடுகின்றீர்கள் ஐயா!!!! ஐயா தாங்களும் இளமையாகத்தான் இருக்கின்றீர்கள்!!!!!!
10 ஆயிரம் ருபா செலவழிச்சு....தலை விரிச்சு...சுதந்திரம் இல்லை....சூப்பர் சூப்பர்......
கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள்.....தேசியக் கொடியின் வர்ணங்களுக்கு ஒரு விளக்கம்......அருமை......அருமை...
தங்களின் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதேசியக்கொடி பற்றிய புதிய விளக்கம் அருமை அண்ணா. நல்லாப் பாடுகிறீர்கள். நல்ல வாதம் அண்ணா, ஆனால் நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஒன்று சொல்கிறேன்..சுதந்திரம் என்று நினைத்தா தலை முடியை நேராக்கியும் விரித்தும் விடுகிறார்கள்? அது ஒப்பனையின் ஒரு வடிவம் அல்லவா அண்ணா? இந்த உங்கள் கருத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை..நான் அழகுநிலையம் சென்று நேராக்குவதெல்லாம் இல்லை என்றாலும் சில நேரங்களில் விரித்து விடுவேன்..அதை நான் என் சுதந்திரம் என்ற ரீதியில் நினைத்ததில்லை, என் கணவருக்குப் பிடிக்கும் என்பதால் அவர் சொல்லுவதால் செய்வேன். :) அதனால் என்னுடைய இந்த கருத்தைச் சொல்கிறேன், தவறாக நினைக்கவேண்டாம்.
பதிலளிநீக்குஇணைய இணைப்பைப் பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா.
நல்லா படுறீங்களே ஐயா ......பேச்சும் ,பாடலும் அருமை .....
பதிலளிநீக்குகொடிமரம் பற்றிய விளக்கம் ரொம்ப செயற்க்கை.பெண்கள் தலைமுடியை விரித்து விடுவது சுதந்திரம் இல்லை என்று வீரமாக பேசும் நீங்கள் வயதுக்கு மீறி தலையில் அடர்த்தியாக கருப்பு சாயம் பூசிக்கொண்டு வருவதுதான் சுதந்திரத்தின் அடையாளமா?நீங்களும் சில தொலைக்காட்சிகளுக்கும் நடுவர்களுக்கும் இன்னும் அடிமையாகத்தான் இன்னும் இருக்கும்போது மற்றவரை குறை சொல்வது என்ன நியாயம்?
பதிலளிநீக்குநன்றி நண்பரே. பார்க்காமலே “சூப்பர்“னு தொலைபேசியில் அழைத்துச் சொல்வோரைவிட முழுவதும்(?) பார்த்து, கேட்டு(?) விமர்சனம் செய்யும் உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்.
நீக்குசெயற்கை? எனில் வீட்டுக்கு அடித்தளம் (ஃபௌண்டேஷன்) போடுவதும் அப்படித்தானா? தலையில் அடர்த்திக் குறைவாக சாயம் பூசினால் நல்லா இருக்காதுன்னுதான்..அப்படி! இது எனக்கே இளமையுணர்வைத் தருவதாக நினைப்பதால் அப்படிச் செய்துகொள்கிறேன்.. தொலைக்காட்சிகளுக்கு அடிமையாக இல்லாமலே அடிமையாக இருப்போரை விடுவிக்க நீங்கள் செய்துவரும் வழிகளைத் தெரிவித்தால் நானும் அவ்வழி நடந்து சுதந்திரமடைய உதவியாக இருக்கும். எவ்வகையிலேனும் தங்கள் கருத்திற்கு நன்றியும் வணக்கமும்.
arulmozhi.blogspot.in போய்ப் பார்த்தேன். வரலாற்றில் “நின்று“ ஒளிந்துபிடித்து ஆடுகிறீர்களே? லட்சம் பேருக்குத் தெரிய நான் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர் இப்படி ஒளிந்து நின்று சொல் எறிவது ஏன்? அருள்மொழி அழகான பெயர்.. நன்றி.
நீக்குவணக்கம்.arulmozhi.blogspot.inஅதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அடர்த்தியாக பூசுவதா இல்லை குறைவாக பூசுவதா என்பதல்ல பிரச்னை.சாயம் பூசுவதற்க்கு உங்களுக்கு மிக நியாயமான காரணம் இருப்பதைப்போல் பெண்களுக்கும் உண்டு.முடியை நீட்டி கொள்வதில் என்ன குற்றம்? இதுதான் இங்கே விவாதம்.2.அடிமைத்தனத்தில் இருந்து விடுபட நிச்சயம் வழி உண்டு.வாய்ப்பு தருகிறார்கள் என்பதற்காக போலியாக தொலைக்காட்சி சம்பந்தப்பட்டவர்களையும் நடுவா அவர்களையும் புகழ்ந்து தள்ளுவதை நிறுத்துங்கள்.தன் மனம் அறிய பொய் சொல்லவேண்டாம் என்று வள்ளுவன் வாக்கை மாணவர்க்கு கற்பித்த ஆசிரியர் அதை செயலில் காட்டினால் நிச்சயம் விடுதலை உண்டு.உங்கள் மனதிர்க்கு சரி என பட்டது மட்டுமே பேசுவேன் என்று உறுதி கொண்டால் விடுதலை உண்டு.வாய்ப்புகள் அப்படி வரவில்லை என்றால் போகட்டும்.இன்னும் என்ன பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற மனம் வந்தால் விடுதலை.இதுவே எனக்கு தெரிந்த வழி ஐயா.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
பதிலளிநீக்கு