நூல்கள் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல்கள் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவுக்கு 25வயது!

                             2000ஆம் ஆண்டு, 202கவிஞர்களைக் கொண்ட

மகா-கவியரங்கம்

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.

20 அமர்வுகளில் 202 கவிஞர்கள்!

கந்தர்வன், பாலா இருவரும் 

சிறப்புக் கவிதை வழங்க

அப்துல் ரகுமான் வாழ்த்துச் செய்தி அனுப்ப

காலை10மணி தொடங்கி,

இரவு11மணி முடிய

13மணிநேரத் தொடர் கவியரங்கம்!

முதல் அமர்வுக்கு

கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்க

20ஆவது அமர்வுக்கு

நா(ன்).முத்துநிலவன் தலைமையேற்க

ஒவ்வோர் அமர்விலும் 10கவிஞர்கள் பங்கேற்ற

வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு அது!

கவிதைத் திருவிழா!

அந்தக் கவிதைகள் பின்னர்

'கவிதைப் பயணம்' எனும் பெயரில்

தமுஎகச புதுக்கோட்டை மாவட்ட 

வெளியீடாக நூலாகவும் வெளிவந்தது!

புதுக்கோட்டை கவிதைக்கோட்டையானது!

அது நடந்து 25ஆம் ஆண்டு இது!

---------------------------- 

இதோ,  2024 பிறந்த இரு மாதத்தில்

அதாவது 

புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவின்

வெள்ளிவிழா ஆண்டில்...

கவிஞர் அகன் (எ) அமிர்தகணேசன்,

கவிஞர் மைதிலி கஸ்தூரிரெங்கன்,

இரண்டு நாள்முன் கவிஞர் தங்கம் மூர்த்தி

இப்போது கவிஞர் ரேவதி ராம்!

எல்லாம் கவிதை கவிதை மற்றும் 

கவிதை சார்ந்த விழாக்கள்!

புதுக்கோட்டை மீண்டும்

கவிதைக் கோட்டையாகத் தொடர்வதைச் 

சொல்லி நடக்கும் விழாக்கள்!

-----------------------------

வரும் 03-03-2024 ஞாயிறு காலை10மணிக்கு

மகளிர் கல்லூரி எதிரில் உள்ள தாஜ்அரங்கில்!

புதுக்கோட்டை நண்பர்கள் வருக!

சுற்றுவட்டாரத்தில் உள்ள சுவைஞர்கள் வருக!

வாய்ப்புள்ள கவிஞர்கள் எங்கிருந்தாலும் வருக! வருக!


அன்புடன் அழைப்பது

வீதி - கலைஇலக்கியக் களம்,

புதுக்கோட்டை

கவிஞர் மு.கீதா, ஒருங்கிணைப்பாளர்.

------------------------------- 

 ரூ.600 விலையுள்ள

மூன்று கவிதைத் தொகுப்புகளும்

வெளியீட்டு விழாவுக்காக

நேற்றுமுதல் ரூ.500விலையில் கிடைக்கிறது.

இப்போதே தொகை செலுத்தி 

விழா அன்று 3தொகுப்புகளையும்

கையிலேயே பெற்றுக் கொள்ளலாம்!

ஜி.பே., ஃபோன் பே - எண் :

+91 95974 02010 

(ராம்தாஸ் என்று இருக்கும்)

பி.கு.-

கவிதைப் புத்தகத்தை

விலைகொடுத்து வாங்குவதை விடவும்

அந்தக் கவிஞரைப் பாராட்டக் கூடிய

சிறந்த விமர்சனம் வேறென்ன இருக்கமுடியும்?

நன்றி, வணக்கம்,

மற்றவை நேரில்.

-----------------------------------------  

நூல்கள் பற்றி 12மணிநேர உரையாடல் - காணொலி இணைப்பு (ONLINE BOOK FAIR BY BARATHI PUTHAKALAYAM, CHENNAI)


 12மணிநேரம் நடந்த

வியத்தகு புத்தக உரையாடல்கள்

பாரதி, தீக்கதிர் வலைக்காட்சிகள்,

காம்ரேட் டாக்கீஸ்

பாரதி புத்தகாலயம் சென்னை

இணைந்து நடத்திய நிகழ்ச்சி

24 புத்தகங்கள் பற்றி 24எழுத்தாளர்கள் – தொடர் அறிமுகம்

(இது பற்றிய விவரம் நமது முந்திய வலைப்பதிவில் காண்க)

=================================

காணொலி இணைப்பு

(அனைவர் உரையும் ஒரே காணொலியில்)

கீழுள்ளது - அழுத்தவும்

https://youtu.be/x9nhOskjof8

================================= 

24 எழுத்தாளர்களை 24நூல்கள் பற்றி உரையாற்ற அழைத்திருந்த போதிலும் ஓரிருவர் வர இயலாத சூழலில் மாற்று ஏற்பாடுகளுடன் நிகழ்வு 12மணிநேரம் நடந்தது.

இதில் 

நமது இலக்கணம் இனிதுநூல்பற்றி

கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் பேசுவது

சரியாக 7மணி 8நிமிடத்தில் தொடங்கி 7-35வரை வரும்,

திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின்

சங்கச் சுரங்கம்நூல் பற்றி நான் பேசியது

சரியாக 7-46மணி தொடங்கி 8-15வரை வரும் 

(இடையில் நூல்அறிமுப்படுத்தியவரும் நூலாசிரியரும்

 பொதுவான இலக்கணம் பற்றி உரையாடிய நிகழ்வு

சரியாக 7-36தொடங்கி, 7-45வரை வரும்!)

 அனைவரின் 

நூலறிமுக நிகழ்வையும் கேட்டு

உரிய நூல்களை 

கழிவுடன் வாங்கிப் படித்துப் 

பயன்பெற அன்புடன் அழைக்கிறேன்

-நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

---------------------------------- 

 


நவகவியின் பாட்டிசைப் பெருவெள்ளம்!




வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாமல், கேட்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும்  அல்லது அவஸ்தைப் படுத்தும் பாடல்கள் சில எல்லாருக்கும் இருக்கும்தானே? அப்படியானவை, கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் மட்டுமல்ல! நவகவியின் பாடல்களும்தான் என்பதைக் கம்பீரமாய்ச் சொல்ல வந்திருக்கும் பாடல் தொகுப்பு ”நவகவி1000”!



இலைகள் அழுத ஒரு மழை இரவு,
     எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது
  கண்டேன் ஒரு காட்சி, கண்டெனது
    கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது
இந்த வரிகளை 25வருடமுன்பே முதன்முதலாகக் கரிசல் கிருஷ்ணசாமியின் காந்தக் குரலில் கேட்டபோது ஏற்பட்ட உணர்வு இப்போதும் மாறாதிருக்கிறது!

மின்னூல்களாக என் நூல்கள் …

(வெளிநாடு வாழ் நண்பர்களுக்கான சிறப்புச் செய்தி) 
.நா.கலை-இலக்கியப் பெருமன்றத்தின் முதற்பரிசை வென்றதோடு,
மதுரைக் காமராசர் பல்கலைக்கழக எம்..தமிழ்வகுப்புக்குசுமார் 15ஆண்டுகள்
 பாடநூலாக  இருந்த என் கவிதைத் தொகுப்பு இது
ஐந்தமிழ் இன்று ஆறாம்தமிழாக வளர்ந்து வரும்போது, நாமும் வளர்ந்தாக வேண்டுமல்லவா? வளர் தமிழுக்கு நம்மையும்  தகவமைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியாக நமது நூல்களை மின்னூலாக்க உதவியது பெங்களுரு “புஸ்தகா” நிறுவனம்.