“வீதி-50” விழாவை நோக்கி…


“புத்தக மாலை”யுடன் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்ட ஃபிரான்சு இதழாசிரியர், கவிஞர் தமிழ்நெஞ்சம் அமின். அருகில் வீதி முன்னோடி பாவலர் பொன்.க., தங்கம் மூர்த்தி, பீர்முகமதுவுடன் வீதி நண்பர்கள்

சங்க காலம் முதல் தமிழ் இலக்கியத்துடன் இரண்டறக் கலந்து பயணம் செய்யும் மண் புதுக்கோட்டை மண்!
ஏராளமான இலக்கியப் படைப்பாளிகளை தொடர்ந்து தந்து கொண்டே யிருக்கும் பூமி. அதன் நீட்சியாக வீதி எனும் இலக்கிய கலைஇலக்கிய அமைப்பு கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்புக்கு தலைவர் இல்லை, செயலாளர் இல்லை, பொருளாளர் இல்லை..நிதி வசூல் இல்லை...ஆனால் இலக்கிய  நெஞ்சங்களால் நிறைந்து கிடக்கிறது..!


வீதி முன்னோடியர் மு.கீதா, உதொகஅ ஜெயா ஆகியோருடன் கதைசொல்லி மாணவி விவேதாவின் தாயாரும் வழங்க, வீதி வாழ்த்தை ஏற்றுக்கொண்டார் இலங்கையில் விருது பெற்றுவந்த புதுவை எழுத்தாளர், பெண்ணியம் முனைவர் செல்வக்குமாரி

வீதி முன்னோடி கி.கஸ்தூரிரெங்கன், எழுத்தாளர் செம்பை மணவாளன் ஆகியோர் வழங்க, தன் துணைவியாருடனும், மகனுடனும் வந்து வீதி வாழ்த்தை ஏற்றுக்கொண்டார் விருதுபெற்ற எழுத்தாளர் ந.சோலையப்பன். 
 
வீதி-49 நிகழ்வில் அழகாகக் கதைசொல்லி 
அனைவரையும் கவர்ந்த 
மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி 
மாணவி யோகலட்சுமி
நாவல் அறிமுகத்தை நாவலாகச் செய்த 
எழுத்தாளர் ஆசிரியர் இந்துமதி

சமகால இந்திய-தமிழக அரசியலைப் பேசும்
 “மூக்குத்தி காசி” நாவலை எழுதிய 
புலியூர் முருகேசனைப் பாராட்டுகிறார்கள் 
தென்றல், ஸ்ரீமலையப்பன்
“நிலாச்சோறு” அய்க்கூ நூலை எழுதிய
பழனி கவிஞர் உதயபாலா கௌரவிக்கப்படுகிறார்.

வீதியின் மாதம் தோறும் ஒரு கூட்டம், தொய்வின்றி நடக்கிறது. அதேபோல் இன்று ( 18-3-2018) புதுக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்துக்குள் செயல்படும் ஆக்ஸ்போர்டு உணவக மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற 49 ஆவது கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்... ஞாயிற்றுக் கிழமையின் இறைச்சி,மீன், கோழிக்கு இரையாகிக் கிடக்காமல் இலக்கிய ருசி தேடி வந்த நெஞ்சங்களால் நிறைந்திருந்தது அரங்கம்..

கவிஞர்கள் முத்து நிலவன், தங்கம் மூர்த்தி போன்ற முன்னோடிகள் முன்னிலையில் ஏராளமானோரைக் காண முடிந்தது.

கவிஞர் சுந்தரவல்லியின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்தநிகழ்வில் திவ்யபாரதி அழகான பாடல் பாடினார்.

அரசுப் பள்ளி மாணவியர் இருவர் அழகாய் கதை சொல்லி அசத்தினர். அவர்களை படைப்பாளிகளாய் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மிகச்சிறந்த பேச்சாளரும்  தமிழாசிரியராருமான முனைவர் மகா.சுந்தர், கவிஞர் - ஆசிரியை - வீதி அமைப்பை அழகாய் கட்டி அமைப்பவர்களில் ஒருவருமான தேவதா தமிழ் Devatha Tamil ஆகியோருக்கு  பாராட்டுகள்.

தினமணிக் கதிர் மற்றும் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் 50 ஆயிரம் ரூபாய்  முதல் பரிசு பெற்ற புதுக்கோட்டைக்காரர்- அரசுப் பள்ளி ஆசிரியர் ந.சோலையப்பனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. பரிசு பெற்ற ' கானல் நீர்க் காட்சிகள்' சிறுகதையை மாலதி விமர்சனம் செய்து பேசினார். புதிய கதை சொல்லும் உத்தியைக் கையாண்டுள்ள சோலையப்பனுக்கு படைப்புலகத்தில் மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது.

உதயபாலாவின் நிலாச்சோறு கவிதை தொகுதியை கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட்டுப் பேசினார்.

தமிழ் படைப்பிலக்கிய உலகில் பரபரப்பாக பேசப்படும் புலியூர் முருகேசனின் ' மூக்குத்தி காசி' நாவலை இந்துமதி Indu Mathi சிறப்பாய் விமர்சனம் செய்தார். புலியூர் முருகேசனும் எழுத்தைப் போலவே காரமாய் ஏற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் பெண்ணியம் செல்வகுமாரி, பிரான்சிலிருந்து வெளிவரும் தமிழ் நெஞ்சம் இதழின் ஆசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் இருவரும் சிறப்புரையாற்றினர்.

எங்கு திரும்பினாலும் படைப்பாளிகள்.  திரைக்கவிஞர் தனிக்கொடி, கவிமதி சோலச்சி, புதுக்கோட்டைக் கவிஞர் மீரா செல்வக்குமார் Meera Selva Kumar, பீர்முகமதுதென்றல் Thendral Saai , சாமி கிருஷ் sami Samy Krish,  இப்படி....இன்னும் இன்னும் படைப்புலக முகங்கள்

ஏராளமான இளம் ஆண், பெண் படைப்பாளிகள் ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டனர்.

அடுத்த மாதச் சந்திப்பு வீதியின் 50 ஆவது கூட்டம். எனவே மிகச் சிறந்த அளவிலான கூட்டத்துக்கு திட்டமிட்டுள்ளனர். வீதியின் அடுத்த 50 ஆவது கூட்டம் நிச்சயம் களைகட்டும்....

இலக்கிய நெஞ்சங்களே  வாருங்கள் சங்கமிப்போம்...

புதுக்கோட்டையின் 'வீதி',
இலக்கிய உலகிற்கான ராஜபாட்டையாகட்டும்..!
----நன்றி---
 முகநூலில்- 
திரு பழ.அசோக்குமார், 
புதுகை. 
------------------------------------------------------------
வீதி நண்பர்கள் (அவர்கள் எங்கிருந்தாலும்) வீதி -50 நிகழ்வுக்கு வரவேண்டுகிறோம் என்பதுடன், அதற்கான ஆலோசனை, நிதி உதவிகளை உற்சாகமாக வழங்க வேண்டுகிறோம்.
இது ஒரு முன்மொழிவுதான், தேதி உட்பட 
நல்ல மாற்றங்களை வரவேற்கிறோம்!
குறைந்த பட்சம் கண்தானம் அல்லது உடல்தானம் நிகழ்வில் ஒப்புதல்தந்து, குடும்பத்தோடு கலந்துகொள்ள
அனைவரையும் அன்புடன்
அழைக்கிறது 
'வீதி-50'
--------------------------

8 கருத்துகள்:

  1. மிகுந்த மகிழ்ச்சி..வீதி செம்மையாய் நடப்பதில் மனசுக்கு அத்தனை நெகிழ்ச்சி...செய்வோம்..அய்யா

    பதிலளிநீக்கு
  2. வீதி நினைக்கும்போது உள்ளம்தித்திக்கிறதே காரணம் நான் வீதிகுடும்பத்தின் மழலையென்பதால்..

    பதிலளிநீக்கு
  3. தித்திக்கும்வீதி ,நான்மழலையாகயிருந்து என்னைவளர்த்துக்கொண்டுயிருக்கும்
    வீதிகுடும்பத்தில் நானும் உள்ளதில்பெருமைக்கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான தொகுப்பு. 50 ஆம் திங்கள் வீதி புதுக்கோட்டை இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கும். நிதி, நிகழ்வுகளுக்குத் திட்டமிடுவோம். செயலாக்குவோம்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு அமைப்பு அமைதியாக தொடர்ந்து இவ்வாறாகச் செயலாற்றுவதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அமைப்பில் உள்ள அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். வீதியின் பயணம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  6. வீதி தொடர்பயணத்தில் நண்பகள் நா.மு, தங்கம் மூர்த்தி செயல்வீரர்கள்..என் நண்பர்கள் என்ற பெருமித உணர்வுடன்..வீதி 50 நிகழ்வுக்கு வாழ்த்துகளுடன்

    பதிலளிநீக்கு