இந்தவாரம் இப்படி

04-08-2013
பாவப்பட்ட மாணவர்க்கு ஒருநீதி பணமுதலைகளுக்கு ஒருநீதியா?
கடனை திரும்பி செலுத்தாத பெரும் தொழிலதிபர்கள் புகைப் படங்களை போடும் துணிச்சல் இந்த வங்கிகளுக்கு உள்ளதா? 
பாவம் ஏழை மாணவர்கள் கடனை செலுத்த முடியவில்லை என்றால் இப்படி அவமானப்படுத்தலாமா?? 
பெரிய பண முதலைகளை இப்படி அவமானப் படுத்த முடியுமா? 
தேவைப்பட்டால் அந்த பண முதலைகளை புதிய வங்கி கிளை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்...   
------------------------
மதுக்கடைகளை மூடக்கோரி சட்டக் கல்லூரி மாணவி நந்தினி போராட்டம்!

மதுரை: "தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்" என்ற கோரிக்கையுடன் மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
நான்காம் ஆண்டு சட்டம் பயிலும் நந்தினி என்ற மாணவி டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால் இது கொள்கை முடிவு என்று அரசு பதில் அளித்திருந்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று நந்தினி கோரிக்கை வைத்துள்ளார்.
இவர், 'மது இல்லா தமிழகம் காண விரும்பும் சட்ட மாணவர்கள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி - இந்நேரம் - இணையம்      மற்றும் புதிய தலைமுறை -- 
       ------------------------------

நீண்ட காலத்  தெலுங்கானா போராட்டம்   வெற்றியை நோக்கி..
        ------------------------------
வாரம் ஒரு வலைப்பக்கம்  - பெருமாள் முருகன்
எழுத்தாளர், பேராசிரியர் சமூகச் சிந்தனையாளர்

முனைவர் பெருமாள் முருகன் அவர்களின் வலைப்பக்கம் பார்க்க - 
------------------------------  

5 கருத்துகள்:

  1. அய்யாவிற்கு வணக்கம், வங்கிகள் இது போன்று நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது அய்யா. கடனைத் திருப்பி தரவில்லை என்றால் சட்டப்படி நடப்பது தானே முறை. இது போன்று வங்கிகள் பெயர்ப்பலகை வைக்க அதிகாரம் உள்ளதா, சட்டம் அனுமதிக்கிறதா? கல்விக்கடன் பெறுவதில் இருந்து கட்டி முடிக்கும் வரை ஏழைகளின் பாடு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கல்விக்கடன் வசூலிப்பதில் மென்மையானப் போக்கை கடைப்பிடிக்க வங்கி அதிகாரிகளை அரசு வலியுறுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இவ்வாறு நடந்து கொள்ளும் வங்கிகள் மீது எவராச்சும் நடவடிக்கை எடுக்காதது துயர் தரும் செய்தியே!

    பதிலளிநீக்கு
  3. ஐயா வணக்கம்.நீங்கள் எப்போது தூங்குவீர்கள்? எப்போது படிப்பீர்கள்? எப்போது வலைபக்கம் வருவிர்கள்? உங்களால் எப்படி பள்ளி,வீடு ,படிப்பு என்று எப்படி நேரம் ஒதுக்குறிங்க? எங்களுக்கும் சொல்லித்தாஙக

    பதிலளிநீக்கு