இந்திய நாட்டு வாழ்த்துப் பாடலை (தேசிய கீதத்தை) தமிழிலேயே பாடச்சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் பலமுறை சிந்தித்ததுண்டு. சிலமுறை முயற்சியும் செய்திருக்கிறேன்.
ஆனால், தேசிய கீதத்தை அந்தந்த மாநில மொழியில் பாடுவது தவறு என்று யாரோ சொன்னதை நம்பி, பேசாமல் இருந்துவிட்டேன்...
(சின்னப்புள்ளத் தனமாவுல்ல இருக்கு...?)
நான், வடஇந்திய நகரங்கள் சிலவற்றுக்குச் செல்ல நேர்ந்த போது, எனக்கு இந்தி தெரியவில்லை என்றறிந்த “இந்தியர்”(பல மாநிலத்துக் காரர்கள்தாம், அந்தந்த மொழியோடு இந்தியையும் தெரிந்து வைத்திருப்பவர்) பலரும் என்னை அந்நிய நாட்டானைப் பார்ப்பது போலவே பார்த்ததை நான் என்ன சொல்ல?
என்னருகில் வந்து “இந்தி நை மாலும்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டவர் பலர்.
எனக்கு வந்த எரிச்சலை வெளியில் காட்டிக்கொள்ளாமல், “குச் நை மாலும்” என்று அழுத்திச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவேன்...
மொழி வெறியால், என் தேச உணர்வு காயப்படுத்தப் படுவதை எண்ணிப் பலமுறை வருந்தியிருக்கிறேன்.
அதற்கு மருந்து தருவது போல இதோ எனக்குப்பிடித்த இசையில் எனக்குப் புரியும் எனது மொழியில், எனக்குப் பிடித்த எனது தேசிய கீதம்.
இதை எனக்கு மின்னஞ்சல் செய்த ஆசிரியர் திரு ஜெகந்நாதன் அவர்களுக்கு நன்றி -
மக்களின் மனங்களை ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின்புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன்வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே
இந்திய வளங்களின் அரசி
வெற்றி வெற்றி வெற்றி
உனக்கே என்றும் வெற்றி
--பாடல் வரிகளைத் தமிழில் தந்தவர் மற்றும் படத்தொகுப்பு - திரு ஜெகந்நாதன், ஆசிரியர்
யூ ட்யூப் இணைப்பில் ஒளி-ஒலியுடன் பார்த்துக் கேட்டு ரசிக்க ...
http://www.youtube.com/watch? v=8Hrsig_UxeY&feature=youtu.be

http://www.youtube.com/watch?
இன்னும் கொஞ்சம் கவிதை நயத்துடன் இசைபெயர்த்திருக்கலாமென்று தோன்றினாலும், தமிழில் கேட்பதே மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.
நண்பர் திரு ஜெகன் அவர்களின் வலைப்பக்கம் பார்க்க ...
நண்பர் திரு ஜெகன் அவர்களின் வலைப்பக்கம் பார்க்க ...
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... ஐயா... தங்களின் பாராட்டுதலுக்கு என் வணக்கங்கள்...
பதிலளிநீக்குஅருமையான முயற்சி. தமிழில் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதிரு. ஜெகந்நாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்குஇணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...
எனக்கும் அது போன்ற் உணர்வு ஏற்பட்டது உண்டு. இதை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்களைப் போன்றவர்களால் தான் தமிழ் இன்னும் அழகாகிறது
பதிலளிநீக்குஅன்னை மொழியில் ஆயிரம் இருக்க அடுத்தவர் மொழி நமக்கு எதுக்கு! என்று சொல்லாமல் சொல்லும் உங்களுக்கு ஒரு தமிழனாய் தலை வணங்குகிறேன். நண்பர் செகநாதன் அவர்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதமிழில் தேசிய கீதம் நல்ல முயற்சி.வேறு மொழிகளில் இப்படி பாடப்படுகிறதா?
பதிலளிநீக்குதமிழில் பாட வழி ஏதேனும் உண்டா?
முயற்சி செய்யலாம். சிறப்பான பதிவு ஐயா!