புதுக்கோட்டை
நகரில் செயல்பட்டுவரும் “விதைக்கலாம்“அமைப்பின் 150ஆவது வாரவிழா, நேற்றுமுன்தினம் 08-07-2018–ஞாயிறு- மாலை,
புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் சிறப்பாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நடந்தது.
இந்திய இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த முன்னாள்
குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ.அப்துல்கலாம் மறைவை ஒட்டி, அவர்பெயரால் ஆக்கபூர்வமாகப் பணியாற்ற
எண்ணிய இளைஞர்கள் “விதைக்கலாம்” என்றொரு அமைப்பைத் தொடங்கி, வாரந்தோறும் மரக்கன்றுகளை
நட்டு வளர்க்கும் அரியபணியைச் செய்து வருகிறார்கள். அதன் 150ஆவது விழாவில் அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆசிரியர் ஸ்ரீமலையப்பன் வரவேற்றுப்
பேசினார். நாகபாலாஜி நன்றியுரை நல்கினார்
