எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து… லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து… லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து…


                  விழி! எழு!! தாயே!!!

இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே!
எத்தனை புகழ்வளர்த் தாயே! – உன்
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில்
நெஞ்சினைக் கொள்ளைகொண் டாயே!- மன
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை?
           அய்யகோ இன்றைய நிலவரம்! -மனச்
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன் அடடா!
சூழ்ந்ததே இனமதக் கலவரம்?

புத்தரும் சித்தரும் போலப் பெரும்புகழ்ப்
புத்திரர் உனக்கென்ன குறையா? - இனி
இத்தனைப் பெருமைகள் இருந்தும்உன் பிள்ளைகள்
இன்றிங்கு நலிவது முறையா? – மத
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியால்
உயிர்ப்பலி யாவதும் சரியா? - இவை
அத்தனைக் குள்ளும்ஓர் சுயநலப் பேய்பிடித்(து)
ஆடுதல் இனியும் காண்கிலையா?

ஜீவ நதியெனும் ரத்தநாளங்களால்
செழும்பயிர்க் கூச்செரிந் தாயே! – தளிர்
பூவும் பிஞ்சுமாய்க் கனியும் கிழங்குமாய்ப்
பொன்னுடல் புல்லரித் தாயே! – வளம்
மேவும் அழகெலாம் தீயவாய் தின்றதோ?
மேனியும் புண்மலிந் தாயே! - இவை
யாவும் சுயநல அரசியல் திருவிளை
யாடல் இதை மறந்தாயோ?