தாராபுரம் புத்தக விழா - எனது உரை காணொலியின் சிறு பகுதி!




நிகழ்வில் 27-12-2024  அன்று

நான் பேசியதை

இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்கள்

(எனக்கே நண்பர் ஒருவர்தான் தெரிவித்தார்!)

விருப்பமுள்ள நண்பர்கள் கேட்க-பார்க்கலாம்.

உரைத் தலைப்பு

 “உண்டால் அம்ம, இவ்வுலகம்”

(உரை - நிகழ்வில் நான் 50நிமிடம் பேசியிருந்தாலும்..)

வெறும் 6நிமிட உரை மட்டுமே

இதில் உள்ளது.

எனவே துணிந்து பார்க்க, கேட்கலாம்!

கேட்டவர்கள் தங்கள் கருத்தைப் பகிர்ந்தால் 

மகிழ்வேன். “இன்ஸ்டா“ இணைப்பு :

https://www.instagram.com/reel/C2UnlDbM2yl/?igsh=MXZoY2VtcnJhY2p6Nw== 

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த

தமுஎகச தாராபுரம் கிளைத்தலைவர்கள்

சீரங்கராயன், தங்கவேல் 

மற்றும் சுழற்சங்க நிர்வாகிகள்,

தீக்கதிர் நாளிதழ் (இன்ஸ்டா) ஆகியோர்க்கு 

எனது  நன்றி. 

----------------------------

17 கருத்துகள்:

  1. குரல் அற்றவர்களின் குரல் உங்கள் திருக்குரல் வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜனவரி 21, 2024

      திருக் குரல் அல்ல, நம் குரல் எப்போதுமே தெருக் குரல் தான்! நன்றி நண்பரே (ஆமா உங்கள் பெயர் தெரியலயே!)

      நீக்கு
  2. கேட்டு‌மகிழ்ந்தேன்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜனவரி 21, 2024

      அய்யா நன்றி. நலமா? நெடுநாளாயின தங்கள் முகம் கண்டு.. நன்றி அய்யா

      நீக்கு
  3. சிறப்பான உரை அண்ணா. முழுவதும் கேட்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜனவரி 21, 2024

      அதுதான் கிடைக்கலியே.. நம்ம உரையை நாமே பதிவு செய்யும் அளவுக்கு வசதியோ, வாய்ப்போ நமக்குக் கிடையாதே! நாம என்ன ...? சரி.
      ஏதோ நண்பர்களின் ஆர்வத்தால் இந்த அளவாவது கிடைத்ததே!

      நீக்கு
  4. இன்ஸ்டாக்ராமில் தங்கள் உரை கேட்டேன். மிக்சி சிறப்பு ஐயா! முகம் தெரியாத தியாகிகளை நினைவு கூர்வது நம் கடமை என்பதை உணர வைத்தது தங்கள் உரை நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜனவரி 21, 2024

      நன்றி முரளி அய்யா. சந்தித்துப் பேசி எவ்ளோ நாளாச்சு! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  5. உங்கள் அனைத்து பேருரையும் 30 நொடி காணோளியாக கிடைத்தால் அதிகம் பகிர ஏதுவாக இருக்கும் தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜனவரி 21, 2024

      கருத்துக்கு நன்றி, நீங்கள் சொல்வது சரிதான். பிரபல பேச்சாளர்கள் எல்லாம் அப்படி ஏற்பாடு செய்துதான் பிரபலமாகிறார்கள்! நமக்கு அந்தத் தொழில் நுட்பம் வாய்ந்தவர்கள் நண்பர்களாக வாய்க்க வில்லையே! கிடைத்தால் நாமும் செய்யலாம்தான்..

      நீக்கு
  6. பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜனவரி 21, 2024

      நன்றி. ஏன் பெயர் தெரியவில்லை எனக்கு? ஏதும் தொழில் நுட்பச் சிக்கலா என்றும் தெரியலயே! பல நண்பர்களும் இவ்வாறே உள்ளனர்!

      நீக்கு
  7. சிலிர்ப்பூட்டும் பேச்சு ஐயா!🔥🎉🔥 "உண்டால் அம்ம இவ்வுலகம்" எனும் இளம்பெருவழுதியின் தமிழர் தேசியப் பண்ணுக்கு, இல்லை இல்லை, அந்த ஒற்றை வரிக்கு நீங்கள் உங்கள் அருந்தமிழாலும் பேரறிவாலும் புதிது புதிதாய்ப் பல பொருள்கள் காட்டியது அசத்தல்! ‘தீக்கதிர்’ வலைக்காட்சிக்குச் சென்று முழுமையும் பார்க்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜனவரி 21, 2024

      நன்றி தோழா. தீக்கதிர் “இன்ஸ்டா“வில் ஏற்றியது எவ்வளவென்று தெரியவில்லை. எனக்கொரு நண்பர்வழி கிடைத்தது இவ்வளவே. ஒருவேளை தீக்கதிர் முகநூலில் (எனது வைக்கம்-100 திருப்பூர் உரையை வெளியிட்டார்களே!) கிடைக்கலாம். பார்க்க வேண்டும். நன்றி தோழர் இபுஞா.

      நீக்கு
  8. இதன் முந்தைய பகுதி இதோ - https://youtu.be/z41On97FqwM?si=xcyCpKR2hesnWl9E

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்ஞாயிறு, ஜனவரி 21, 2024

      அதிலும் இதுதானே உள்ளது? https://youtu.be/z41On97FqwM?si=xcyCpKR2hesnWl9E இந்த இணைப்பைத் தானே சொல்கிறீர்கள்? (ஒரு பழம் இங்க இருக்கு, இன்னொன்னு எங்க? என்று செந்தில்-கவுண்டமணி நகைச்சுவை தான் நினைவிற்கு வருகிறது!

      நீக்கு
  9. மிக்க மகிழ்ச்சி ஐயா, தங்களின் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு