இந்து தமிழ் நாளிதழ் தொடர் - தமிழ் இனிது (2) 13-6-2023

 தமிழ் இனிது(2) - (நன்றி - இந்து தமிழ் - 13-6-2023)  

க,ங,ச,ஞஎனும் வரிசைக்கு அர்த்தம் உண்டு!

  உயிர் எழுத்து நமக்குத் தெரியும். மெய் எழுத்துகளைத் தெரிந்தாலும், வரிசையாகச் சொல்லும் போது தடுமாறுவோம்!

   மெய்யெழுத்து வரிசைக்கு அர்த்தம் உண்டு என்பதைப் புரிந்து கொண்டால் மறக்காது, எழுத்துப் பிழைக் குழப்பம் தீரவும் வாய்ப்புள்ளது.     க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம் என, பத்து எழுத்துகள் --வல்லினத்தை அடுத்து மெல்லினம் எனவரிசை அமையும்.  ய்,ர்,ல்,வ்,ழ்,ள்  ஆறும் வரிசையாக இடையில் வருவது இடையினம்! மீண்டும் ற்-ன்! மொத்தம்-18! இதில் ஒரு நுட்பம் உண்டு   

தமிழ்ச் சொற்களில் க எனும் உயிர்மெய் இடம்பெறும் சொற்களுக்கு முன் அமையும் மெய்யெழுத்து ங் ஆகவே இருக்கும்உதாரணம்  சங்கம். அதனால், எழுத்து வரிசை முதலில் க், அடுத்து ங் என அடுக்கப்பட்டுள்ளது.              

ச இடம்பெறும் சொல்லில், ஞ் முன்னிற்கும்(நெஞ்சு), அதனால்தான் ச் எழுத்தை அடுத்து ஞ் வைக்கப்பட்டுள்ளது  ட-வுக்கு முன் ண் வரும் துண்டு,  -வுக்கு முன் ன் வரும்-தென்றல். இவ்வாறே த்-ந்(பந்து), ப்-ம்(அம்பு) எழுத்துகளும்  அடுத்தடுத்து அடுக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசைக்குக் காரணம் தமிழ் எழுத்து மரபு! இதன் அடிப்படை. தமிழ்ச் சொற்களின் அமைப்பு முறை! என்ன நுட்பம்! பாட நூல்களில் இவற்றை இன எழுத்துகள் என்று மட்டும் சொல்லித் தந்திருப்பார்கள். அதைத் தாண்டிய வரிசை நுட்பத்தில் தமிழ் மரபு உள்ளது.

மண்டபம் என்பதில்மூனு சுழி ண வா, ரெண்டு சுழி ன வா என்று சந்தேகம் வரும்போது, அடுத்த எழுத்து ட வருதா? அப்படின்னா இது டண்ணகரம் () தான் என்றும், தென்றல் என்பதில் இதே சந்தேகம் வந்தால் அடுத்த எழுத்து ற வருதா? அப்படின்னா இது றன்னகரம் (ன்) தான் என்றும் புரிந்து கொண்டால் இன்னும் எளிது.

ஆனால், இது நான்கு,  வான்மதி மற்றும் என்னப்பா கண்ணம்மா  போலும் சொற்களில் பொருந்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இதற்கு, தொடர்  வாசிப்பு அவசியம். இலக்கணத்தை விட நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார், “வழக்கும் செய்யும் ஆயிரு முதலின்..” என, வழக்கு மரபை முன்வைத்தார். மொழி, ஓடும் நீர் போன்றது, ஒவ்வொரு முறை குளிக்கும்போதும் புதிய நீரில்தான் குளிப்போம்!  

கல்+கின்று+ஆர்=கற்கின்றார், ஆனால் செல்+கின்று+ஆர்=செல்கின்றார். இந்த இரண்டு சொற்களும் ஏன் எவ்வாறு மாறுகின்றன என்பதை இலக்கணத்தை விடவும் வழக்கில்தான் புரிந்து கொள்ள முடியும்.  

தமிழ்ச் சொற்களில் புழக்கம் இருந்தால் பிழை நேராது, தமிழ் இனிது

---------------------------------------------------  

 (நன்றி - இந்து தமிழ் - 13-6-2023) 

----------------------------------------------------------------------- 

4 கருத்துகள்:

  1. அண்ணா பிழை இல்லாமல் எழுதுவதற்கு வழிகாட்டும் அருமையான கட்டுரை.  இந்தக் கட்டுரையைப் படித்து உள்வாங்கிக் கொண்டால், நீங்கள் சொல்லியிருப்பது போல விலக்குகள் இருந்தாலும், எழுத்துப் பிழை தவிர்க்கவும் தன்னம்பிக்கை வளர்க்கவும் தமிழ் போற்றவும் உதவும். றன்னகரம், டண்ணகரம் குழப்பம் பற்றி பல குழந்தைகள் கேட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தெளிவாக்கும் இக்கட்டுரை. சிறப்பான உங்கள் முயற்சிக்கு நன்றி அண்ணா.
    இளைய தலைமுறையினரிடையே  தொலைந்து போகும் தமிழை மீட்டு அவர்கள் மகிழ்வாகத் தமிழ் கற்க உதவும் உங்கள் முயற்சி என்று நம்புகிறேன்.
    - கிரேஸ் பிரதிபா

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான முன்னெடுப்பு. மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. அண்ணா பிழை இல்லாமல் எழுதுவதற்கு வழிகாட்டும் அருமையான கட்டுரை. இந்தக் கட்டுரையைப் படித்து உள்வாங்கிக் கொண்டால், நீங்கள் சொல்லியிருப்பது போல விலக்குகள் இருந்தாலும், எழுத்துப் பிழை தவிர்க்கவும் தன்னம்பிக்கை வளர்க்கவும் தமிழ் போற்றவும் உதவும். றன்னகரம், டண்ணகரம் குழப்பம் பற்றி பல குழந்தைகள் கேட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தெளிவாக்கும் இக்கட்டுரை. சிறப்பான உங்கள் முயற்சிக்கு நன்றி அண்ணா.

    இளைய தலைமுறையினரிடையே தொலைந்து போகும் தமிழை மீட்டு அவர்கள் மகிழ்வாகத் தமிழ் கற்க உதவும் உங்கள் முயற்சி என்று நம்புகிறேன்.

    - கிரேஸ் பிரதிபா

    பதிலளிநீக்கு