கரோனா கொடுமைக்கிடையே, இணையக் கருத்தரங்கம் காண, கேட்க வருக!



உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் 
கரோனா தீநுண்மியால் கடந்த ஒரு மாதமாக மட்டுமின்றி இன்னும் ஓரிரு மாதங்களுக்கு நமது இயல்பு வாழ்க்கை பாதிப்பதை நாம் அனுபவித்துத்தான் தீரவேண்டும் போல!  

கரோனா கொடுமைகள் -பேரிடர் காலத்து வழக்கம் போல- ஏழைகளையே பெரிதும் பாதிக்கின்றன.. 
இது பற்றித் தனியே பேசுவோம்
நான் சொல்வது ஊரடங்கு தந்த நேரம்… 

வாழ்க்கையை வணிக லாபநோக்கில் மட்டுமே பார்த்தவர்களுக்கு கரோனா தந்திருப்பது 
மிகப் பெரிய பாடம்தான்!
(இதில் தொடர்பில்லாத நமக்கும் தான்!)
-----------------------------------
“கெட்டதிலும் சில நல்லதுகள்” 
நடக்கத்தானே செய்கின்றன!
-------------------------------------
படிக்க எழுத நினைப்போர்க்கும் 
என்னைப் போல் 
குடும்பத்தோடு நேரம் செலவழிக்க நினைப்போர்க்கும் 
--சிலர் தவமிருந்து பெற்ற சாபம் என்று சொன்னாலும்-- 
இது தவமின்றிப் பெற்ற வரம்தானே?

எந்த நேரத்திலும் –       
போர்க்களத்திலும் புத்தகம் வாசித்த காஸ்ட்ரோ அளவுக்கு இல்லையென்றாலும் – நாமும் ஏதாவது செய்யத்தானே வேண்டும்? 

அப்படி ஒரு வாய்ப்பு இது 
வாருங்கள்
இணையத் தமிழால் இணைவோம்!
முன்னிலும் புதியதோர் உலகம் செய்வோம்!
zoom செயலியைப் பதிவிறக்கி,
என்படத்துடன் உள்ள அழைப்பிதழில் காணப்படும் 
Meeting ID & Password கொடுத்தால்
நீங்களும் இணையலாம்.

ஒருமணிநேரப் பேச்சைக் கேட்பதோடு,
கேள்வி-பதிலிலும் இணையலாம்.
வருக! வருக நண்பர்களே!
இணையவெளியில் சந்திப்போம்!
---------------------------------------
அதோடு ஒரு கூடுதல் 
வானொலிச் செய்தி -
நாளை 16.4.20 (வியாழன்) இரவு10மணி 
செய்திகளுக்குப் பிறகு,
 'ஞாபகம் வருதே!' எனும் 
எனக்குப் பிடித்த திரையிசைத்தொகுப்பு 
ஒருமணிநேரஒலிபரப்பு
102.1ரெயின்போ பண்பலை மற்றும் 

அலைவரிசை 936திருச்சிவானொலி
இரண்டிலும் வருகிறது!
கேட்டுப் பாருங்களேன்🙏
-நா.முத்துநிலவன்

வணக்கம்
---------------------------------

15 கருத்துகள்:

  1. ஆகா... புதுமையிலும் முதன்மை... நேற்று தான் எங்களின் செல்ல மகள் கல்லூரியில் இருந்து, இதே செயலி 'நிறுவிக் கொள்ளுங்கள்' என்று தகவல் வந்தது... தங்களின் உரையாடல் எப்போது என்று சொல்லுங்கள்...

    நாளை வானொலிச் செய்தி அனைவரும் கேட்போம்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வலைச்சித்தரே!
      கீழுள்ள வலை ஓலைத் தகவலைப் பார்த்துக் கருத்திடுங்கள்!
      (உங்கள் அளவுக்கு எனக்கு வலைநுட்பம் தெரியாது என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் ஆனால் அதுவே உண்மை)

      நீக்கு
  2. தங்களின் அன்பான அழைப்பிற்கு மிகவும் நன்றி தோழர். இணைய வாசிப்பில் இணைய விரும்பும் உங்கள் அன்புத் தோழன் ரமா ராமநாதன் புதுக்கோட்டை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழா! அடுத்த கவிதைத் தொகுப்பு எப்போது?
      (நான் தவறு செய்துவிட்டதாக நினைத்திருந்த நீங்கள் என்னைப் புரிந்து கொண்டு(?), மின்னஞ்சல் செய்தது கண்டு மிகவும் மகிழ்கிறேன். தங்கள் மேலுள்ள மதிப்பு இதனால் கூடுகிறது தோழர்)

      நீக்கு
  3. தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் திரட்டியில் சேர விரும்பினாலும், அதற்கான விதிமுறைகளை அறிந்து சேர்வதே நல்லது இல்லையா நண்பரே? அதுபற்றி எனது மின்னஞ்சலுக்கு விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன். எனது மின்னஞ்சல் muthunilavanpdk@gmail.com அதோடு, எங்கள் வலையுலகச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் தன் கருத்தைச் சொன்னபிறகு என் தொடர்பைத் தொடர்கிறேன். தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்

      நீக்கு
    2. அன்பு நண்பர் சிகரம் பாரதி அவர்களுக்கு : ஐயாவின் வலைத்தளம் பற்றிய விவரங்களை அனுப்புகிறேன்... (கடையில் கணினி உள்ளதால், பிறகு) இணைத்து கொள்ளுங்கள்... நன்றி...

      நீக்கு
    3. நன்றி தனபாலன் அவர்களே.

      நிபந்தனைகள் ஏதுமில்லை. வலைத் திரட்டியை தாங்கள் பயன்படுத்துவதுடன் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தினால் நீண்ட காலம் முன்கொண்டு செல்ல உதவியாக இருக்கும். அத்துடன், தங்களுக்கு விருப்பமான குறிச் சொற்களை வலைத் தளத்தில் இணைத்துக் கொள்வதுடன், எமது வலைத் திரட்டியிலுள்ள குறிச் சொற்களில் பொருத்தமானவற்றையும் இணைத்துக் கொண்டால் பிற்காலப் பயன்பாட்டுக்கு இலகுவாக இருக்கும்.

      இவை வேண்டுகோள்கள் மாத்திரேம. நிபந்தனைகள் என்று ஏதுமில்லை. தொடர்ந்து எழுதுங்கள்....

      நீக்கு
  4. மகிழ்ந்தேன் ஐயா
    அவசியம் காண்கிறேன் கேட்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றும் தன் முயற்சியில் தளராத - விக்கிரமாதித்தன் போலும் - தங்கள் கருத்துப் பார்த்து மகிழ்கிறேன் அய்யா. தொடர்வோம். நன்றி

      நீக்கு
  5. அருமையான முயற்சி
    களைகட்டட்டும் இணையம்

    பதிலளிநீக்கு
  6. தங்கள் நிகழ்வில் பங்கெடுக்க முடியாததை இட்டு மன்னிப்புக் கேட்கிறேன். இனிவரும் தங்கள் நிகழ்வில் Zoom ஊடாகப் பங்கெடுக்கிறேன். Zoom தொழில்நுட்பமும் பயன்படுத்தும் முறையும் விரைவில் வீடியோவாக வெளியிட இருக்கிறேன். Zoom ஊடாகக் கருத்தரங்குகளைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. ZOOM தொழிநுட்பத்தை கூகுள் தடை செய்துள்ளது. அவதானம்!!!

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வலைப்பதிவு எமது வலைத்திரட்டியில் இணைக்கப்பட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் அண்ணா..இணைந்து கேட்கிறேன். நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு