6,00,000 தந்ததற்கு நன்றி நண்பர்களே!

பயணம் தொடரும்!

7ஆண்டுகளாகத் தொடரும் எனது வலைப்பயணத்தில்
750 பதிவுகள்  
11,000 பின்னூட்டங்கள்
442 பின்தொடர் நண்பர்கள்
இப்போது
ஆறுலட்சத்தைத் தாண்டும் பக்கப்பார்வைகள்!


பக்தி-ஆன்மீகம்-சோதிடம்-சாப்பாடு பற்றி 
நான் எழுதியதே இல்லை, இனி எழுதவும் போவதில்லை!
சமூக முன்னேற்றத்திற்கான எதையும் எழுதுவேன்! 

சகோ.செந்தில்குமார் போல அரியசெய்திகளை எழுதவும்,
சகோ.வெங்கட் நாகராஜ்போல பயணக்குறிப்பு எழுதவும்,
சகோ.விசு, ஆல்ஃபி போல நகைச்சுவை எழுதவும்,
சகோ.தனபாலன் போல குறள்,இசை தந்து எழுதவும்,
சகோ.முரளிதரன் போல எளிமையாக எழுதவும்,
சகோ.துளசி,கீதா, KSRவைசாலிபோல இணைந்தெழுதவும்,
சகோ.விஜூ போல இலக்கியத் தமிழ் எழுதவும்,
சகோ.இராமன்,காவிரிமைந்தன்போல அரசியல்எழுதவும்,
சகோ.புதியமாதவி,மு.கீதா போல பெண்ணியம்எழுதவும்,
சகோ.மதுரைத்தமிழன் போல கிண்டலாக எழுதவும்,
சகோ.மைதிலி, செல்வா போல புதுக்கவிதை எழுதவும்,
சகோ.கிரேஸ் போல மொழியாக்கமாக எழுதவும்,
சகோ.சிவகுமாரன், புலவர்குரல்போல மரபு எழுதவும், 
சகோ.பாரதிதாசன் போல இலக்கணம் எழுதவும்,
சகோ.பரிவை சே.குமார் போல சிறுகதையாக எழுதவும்,
சகோ.ஜம்புலிங்கம் போல களஆய்வுகளை எழுதவும்,
சகோ.தமிழ்இளங்கோ போல படங்களுடன் எழுதவும்,
சகோ.கரந்தை ஜெயக்குமார் போல நாடகபாணிஎழுதவும்
சகோ.தேனம்மை போல தொடர்ச்சியாக எழுதவும்,
எனக்கும் ஆசைதான்…  ஆனால்… என்ன செய்ய?
நமக்கு அப்படியெல்லாம் வந்தால்தானே எழுத முடியும்?
(என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்? வரணும்ல?)

ஆனால், சங்கஇலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம் வரை, மேற்காணும் இவர்அனைவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு எழுத, விடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன்…! 

இதில் “சிலரின் படைப்புகள் தரமாக இருந்தும் பார்வையாளர் எண்ணிக்கை இவர்களுக்கு ஏன் அதிகரிக்கவில்லை?” என்று நான் அவ்வப்போது குழப்பமும் கவலையும் அடைவதுண்டு!

சோதிடம், ஆன்மீகம், சினிமா, ஜோக்குகளை மட்டுமே வெளியிடும் சிலச்சிலரின் பார்வையாளர் எண்ணிக்கை எகிறுவதைப் பார்க்க இந்தச் சமூகத்தின் மனநிலை பற்றி வருத்தப்படுவதும் உண்டு!

அறிவார்ந்த பார்வையோடு, மிகப்பெரிய அரசியல் செய்திகளை அழகான படங்களோடு கிண்டலும் கேலியுமாக எழுதியே இப்போது 36லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கும் மதுரைத்தமிழரின் சாதனை வியப்பாகவும் -கொஞ்சம் பொறாமையாகவும்- இருக்கிறது!  
அவருக்கு முன்னால் நம் பயணம் பெரிய விஷயமே இல்லைதான் என்றாலும் நம் பயணத்திலும் ஓர் அர்த்தம் இருக்கிறதே! 

இதிலும் இந்த 2017தொடங்கியதிலிருந்து என் மந்தமான பதிவுகளால் தமிழ்மணத்தில் முதல் பத்திலிருந்த “ரேங்க்” இறங்கி இப்போது நூற்றுக்கு கீழே கீழே போய்விட்டது! மீட்டெடுக்கணும்! உஸ்அப்பா!
இனித் தொடர்ந்து எழுதுவேன்... எழுத வேண்டும் என்று நம்நாடு கட்டளையிட்டுக் கொண்டே இருக்கிறதே! வேறு வழி?

என்றாலும், எனது பதிவு இடப்படும் நாளில் சுமார் 500 பக்கங்களும், மற்றநாள்களில் சுமார் 200பக்கங்களும் பார்க்கப்படுவது ஒன்றும் சிறிய செய்தியல்ல! சிறப்புப் பதிவெனில் ஒரேநாளில் 2000 பக்கம் வரையும் பார்க்கப் படுவதுதான் எனக்கே நம்பிக்கையோடு வியப்பளிக்கிறது!
(தமிழுக்கு விளம்பர உதவி எப்ப வரும் கஸ்தூரி?)
  
படத்திற்கு நன்றி - http://www.oodaru.com/?p=7661

இந்தப் படம் இங்கு ஏன்? ஒரு சிறு விளக்கம் -
உலகில் மிக அதிகமாகக் கொடுமையை அனுபவிப்பவர்கள் மேல்நாடுகளில் கருப்பர் எனில் நம் நாட்டில் அதைவிடவும் அடிமூட்டையாகக் கிடந்து அதைச் சொல்லவும் தெரியாமல் இருப்போர் தலித்துகளே! அதிலும் கொடுமையின் “நுனிமுனைக் கொழுந்தாக” இன்றும் இருப்பவர்கள் தலித்-பெண்களே!
அந்தப் பார்வையின் அப்பாவித்தனமும், ஏக்கமும் எப்போது தீருமோ
இதை வெளிப்படுத்தும் இந்தப்படத்தை வெளியிட்டுள்ள “ஊடறு” இணையத் தோழியர்க்கு படத்தைப் பயன்படுத்திக்கொள்வதோடு அவ்வப்போது அதில் வரும் படைப்புகளையும் படிக்க நண்பர்களை அன்புடன் வேண்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

              “சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல
            தமிழ் வளர்த்தல் மற்றொன்று
              பாதியை நாடு மறந்தால் – மற்றப்
                 பாதி துலங்குதல் இல்லை” – பாரதி தாசன்.

நன்றிக்கு நன்றி - பரிவை சே.குமார் வலைப்பக்கம்.

29 கருத்துகள்:

  1. ஐயா... முதலில் வாழ்த்துகள்...

    // இதில் “சிலரின் படைப்புகள் தரமாக இருந்தும் பார்வையாளர் எண்ணிக்கை இவர்களுக்கு ஏன் அதிகரிக்கவில்லை?” என்று நான் அவ்வப்போது குழப்பமும் கவலையும் அடைவதுண்டு! //

    "பார்வையாளர்களின் தரம் அவ்வளவே" என்று எடுத்துக் கொள்ளுங்கள்...

    // சோதிடம், ஆன்மீகம், சினிமா, ஜோக்குகளை மட்டுமே வெளியிடும் சிலச்சிலரின் பார்வையாளர் எண்ணிக்கை எகிறுவதைப் பார்க்க இந்தச் சமூகத்தின் மனநிலை பற்றி வருத்தப்படுவதும் உண்டு! //

    சோதிடம், ஆன்மீகம், சினிமா, ஜோக்குகளை மட்டுமே நம்பும் அடிமைகள் இருப்பதால் வேறு என்ன செய்ய முடியும்...?

    // 36லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கும் மதுரைத்தமிழரின் சாதனை //

    அவர் இதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை... அது தான் அவரின் சாதனை...

    // இதிலும் இந்த 2017தொடங்கியதிலிருந்து என் மந்தமான பதிவுகளால் தமிழ்மணத்தில் முதல் பத்திலிருந்த “ரேங்க்” இறங்கி இப்போது நூற்றுக்கு கீழே கீழே போய்விட்டது! மீட்டெடுக்கணும்! உஸ்அப்பா! //

    ஐயோ... தமிழ்மணமா...? என்னது ரேங்கா...? இப்போது நடந்து கொண்டிருக்கும் கூத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்... அறியவும் வேண்டாம்... அதுவே நல்லது... இருந்தாலும் ஒரு விஷயம் நீங்கள் அறிய வேண்டும்... அது என்னவென்றால் :- மதுரையில் நம்ம வலைப்பதிவர் (முதல்வன் ஆகியதற்கு நன்றி என்று அவரே சொல்லிக் கொள்கிறார்... நம்ம EPS/OPS கூட பரவாயில்லை) ஒருவர் அரசியலில் சேர்ந்தால் ஓட்டு வாங்குவதிலும் கூட முன்னிலையில் இருப்பார் என்பதில் துளி கூட சந்தேகேமே இல்லை... மேலும் விவரங்களுக்கு நம்ம கில்லர்ஜியை அணுகவும்... ஆதரவிற்கு நம்ம madrurai gay-யை அணுகவும்... ஹா... ஹா...

    “ஊடறு” இணைய நண்பர்களுக்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  2. ஆறு லட்சம் கடந்தமைக்கு வாழ்த்துகள் தொடரட்டும் பதிவுகள்.
    வாழ்க தமிழ்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அய்யா கோடிகளை தொடுவீர்கள்.....என்னையும் குறித்ததற்கு கோடான கோடி நன்றி...

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்று பாராட்டுகள்ஒடுவதுமட்டுமேநமதுவேலைவெற்றிபின்னால்துரத்திவரும்

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவுகளில் உள்ள வீச்சு எனக்குப் பிடிக்கும்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. ஆறு இலட்சம் கடந்தாச்சா
    அது எத்தனையோ
    தடைகளைக் கடந்து வந்தாச்சு
    எது எப்படி இருப்பினும்
    தங்கள் பக்கம்
    தனித்துவம் நிறைந்த பக்கமாச்சே!
    வருகையாளர் மேலும் மேலும் கூட
    நாமும் தொடர்ந்து வருவோம்!
    வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள்,மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதும் மக்களுக்கு செய்யும் சேவையே! தொண்டே!தொடரட்டும் உங்கள் கருத்து பரப்புரை,மீண்டும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஐயா! மிகவும் அடக்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள்! ஆறு இலட்சம் என்பது கண்டிப்பாகப் பெரிய எண்ணிக்கையே! அதுவும் 750 பதிவுகளில்! சிறுவனின் பணிவன்பான வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  9. வாவ் வாழ்த்துகள் அண்ணா.....மதுரை தமிழனை விட அதிகமாக வாழ்த்துகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  10. எல்லோருக்கும் சேர்த்து தனபாலன் அவர்களே நல்ல கருத்தை சொல்லிவிட்டார்.எழுதுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லுங்கள் .... அன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப எழுதுங்கள் அவ்வளவுதான்...

    நான் மிக ஆராய்ந்து எல்லாம் இப்போது எழுதுவதில்லை நாளிதழ்களில் வருவதையும் சமுக வலைதளங்களில் வருவதையும் படித்து அதன் பின் என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எனது பொழுது போக்கிற்காக எழுதி வருகிறேன் நான் எழுதுவது நினைப்பது எல்லாம் சரி என்று சொல்லவில்லை தவறுகள் இருக்கலாம் அது தெரிந்தால் நான் திருத்தி கொள்கிறேன்


    இங்கே பதிவிடும் பதிவர்கள்(எழுதுபவர்கள்) நூறு பேர்களுக்குள்தான் இருப்பார்கள் அவர்களுக்காக எழுதாமல் அவர்கள் கருத்து சொல்வார்கள் வோட்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்காமல் நமது தளத்தை எதனை எதிர்பார்த்து வந்து படிக்கிறார்கள் யார் படிக்கிறார்கள் என்பதை உணர்ந்து எழுதினாலே போதும்...அதுவே அதிக பார்வையாளர்களை மேலும் கொண்டு வரும்

    பதிலளிநீக்கு
  11. கடவுள் சோதிடநம்பிக்கைதான் மனிதனை பாழ்படுத்து கின்றனஎனவே கடவுள்கள்மறுப்பு சோதிடமறுப்பு கருத்துகளை எழுதவேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் அய்யா !உங்களைப் போல என்னால் எழுத முடியவில்லையே நான் வருந்திக் கொண்டிருக்கிறேன் :)

    த ம முதல்வன் நான் ராஜினாமா பல நாட்கள் ஆகிவிட்டது,தினசரி நான் பதிவும் போடுவதில்லை ,முதல்வன் போர்டையும் கழட்டி தூர எப்போதோ எறிந்து விட்டேன் !
    நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்ட கண் மருத்துவமனையின் பெயரை நண்பர் DD க்கு சிபாரிசு நலம் அய்யா :)

    பதிலளிநீக்கு
  13. ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் எனது வாழ்த்துகள். ஆறு லட்சம் தடவை உங்கள் வலைத்தளம் தமிழ் வாசகர்களால் பார்க்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்.

    இங்கே சுட்டிக் காட்டிய பதிவர்களில், என்னையும் சொன்னமைக்கு நன்றி.

    சோதிடம், ஆன்மீகம், சினிமா மற்றும் ஜோக்குகள் அடங்கிய பதிவுகள் என்பது அவரவர் விருப்பம். நீங்கள் உங்களுக்கென்று இருக்கும் கொள்கையில் எழுதுகிறீர்கள்.
    என்னதான் தமிழ்மணத்தின் ரேங்க் பற்றி பலரும் விமர்சனம் செய்தாலும், எல்லோருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. பணியில் இருக்கும்போது வலைப்பக்கம் நிறையவே எழுதினீர்கள்; பணி ஓய்விற்குப் பிறகு, அடிக்கடி வெளியூர் பயணம் நீங்கள் செல்வதால் எழுதுவது குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    உங்கள் வலைத் தளத்தினப் பின் தொடர்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இனிய வாழ்த்துக்கள் ஐயா இன்னும் பல கோடிகள் தாண்ட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. ஐயாவிடம் உரிமையுடன் ஒரு கேள்வி இத்தனை பதிவர்கள் மீது ஒப்பீடு செய்தீர்கள் அதில் ஒரு இலங்கை/ஈழத்து பதிவர்கள் கூடவா உங்களை எழுத்தில் ஈர்க்கவில்லை ? நேரச்சிக்கல் எல்லோருக்கும் பொதுவானது. உங்களின் நடுநிலைமையான பதில் நிச்சயம்கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தனிமரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கேள்வி என்னைக் கொஞ்சநேரம் யோசிக்க வைத்தது உண்மைதான் நண்பரே! ஏனென்று யோசித்ததில், “ஊடறு” மட்டுமே நம்பிக்கையூட்டி நிற்கிறது. மேலும் சிலவற்றைப் பார்க்கத்தான் செய்கிறேன், எனினும் இணைய இதழ்கள் சில தவிர்த்து, ஈழத்தமிழர் வலைப்பக்கங்கள் பலவும் நிறைவாக எனக்குப் படாததாலும், அவரவர் சார்பு அரசியல் என்னை அச்சுறுத்துவதாலும் அதுபற்றி எழுதத் தயக்கம். நாமே தெளிவின்றி அதுபற்றிக் கருத்துக் கூறுவது தவறல்லவா நண்பரே? தங்களுக்குத் தோன்றும் கருத்துகளைத் தெரிவித்தால் நல்லனவற்றைத் தொடரவே விரும்புகிறேன். உதவுங்கள்.நன்றி

      நீக்கு
    2. தாங்கள் பதிலிட்டால், அதுபற்றிக் கருத்துக் கூற எனக்கு இரண்டு நாளாகும் நண்பரே! இன்று மாலை திருச்சியிலும், நாளை மாலை ராணிப்பேட்டை(வேலூர்)யிலும் நிகழ்ச்சி. திங்களன்று பதில் தருவேன். (கருத்துகளை எனது ஐஃபோனில் பார்க்க முடியும், பதில் தர மேசைக்கணினி வேண்டும் எனக்கு!)

      நீக்கு
  16. இப்போது பலர் தமிழ்மணத்தில் இல்லை அவர்களின் அசட்டையீனம் பற்றி நீங்களும் எழுதுவிட்டீர்கள் விரைவில் நானும் எழுத ஆசை பார்க்கலாம் நேரம் வரட்டும்!

    பதிலளிநீக்கு
  17. உங்களின் எழுத்தும், பேச்சும், பண்பும், நினைவாற்றலும், நண்பர்களை ஊக்குவித்தலும் இந்நிலைக்குக் காரணம் ஐயா. மாற்றுக்கருத்துக் கொள்பவர்களைக்கூட எழுதவைக்கவேண்டும என்ற எண்ணத்தில் அமைகின்ற உங்களது கருத்துகளை எண்ணி வியக்கின்றேன். பதிவில் என் எழுத்தையும் சுட்டிக்காட்டியதைக் கண்டேன். நண்பர்களின் பதிவுகளை நீங்கள் அலசியதை வியப்புடன் நோக்கினேன். தங்களின் எழுத்துக்களைத் தொடர்வோரில் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. உங்களின் இலக்கு ஈடேறும். மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகள்ண்ணே. இந்த ஹிட்ஸ் எங்க இருக்குன்னு தெரியாது. என் பேரே இதுல இல்ல. நான் உங்க பேச்சு கா. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா.. நான் உருப்படியா எழுதலன்னு

    பதிலளிநீக்கு
  19. தம்பி! முதற்கண் வாழ்த்துகள்! பட்டி மன்றத்தை இரண்டுமுறை பார்த்தும் கேட்டும் சுவைத்தேன்!முதுமை
    என்னை அதிகம் எழுத விடவில்லை இன்றைய வலையுலகம் ஏற்கனவே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையைப் போல சுருங்கி விட்ட நிலையை நீங்கள்
    அறிவீர்கள்!தற்போது அதற்கும் பழுது வரும் நிலையில்
    ஏதோ ஒரு சலசலப்பு ஏற்ட்டிருப்பதாகத் தெரிகிறது!! யார்
    காரணம் என்று தெரியவில்லை !அன்புகூர்ந்து ,ஆய்ந்து, கண்டு சரி செய்ய வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். நேற்று (28.10.17) திருச்சியில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களை நேரில் சந்தித்தபோது, இந்த சலசலப்பு பற்றி கோடிட்டு காட்டியுள்ளேன். உடன் கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களும் இருந்தார். நல்லதே நடக்கும்.

      நீக்கு
  20. இன்னும் பல உயரங்களையும், பல லட்சங்களையும் பார்க்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
    பதிவர்களின் வரிசையில் என்னையும் இணைத்ததற்கு மிக்க நன்றி அய்யா!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. அன்பின் ஐயாவுக்கு...
    ஆறு லட்சம் பக்கப் பார்வை என்பது மிகப்பெரிய மைல்கல்தான்...
    சிறந்த பதிவுகளுக்கு அதிகமான பார்வையாளர்கள் வருவதில்லை... காரணம் நாம் இன்னும் சினிமாவிலும் ஆன்மீகத்திலும் அதிக மோகத்தில்...
    வாக்குகளைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை... அது நமக்குத் தேவையில்லை... இது மன நிறைவுக்கான எழுத்து அவ்வளவே...
    அந்த வகையில் தங்கள் எழுத்துக்கள் சிறப்பானவையே.... என்னைப் போல் சும்மா கிறுக்காமல் நிறைய அறியத்தரும் பதிவரில் தாங்களும் ஒருவர்...
    சமீபத்திய வாக்கு அரசியல் மோசமான முன்னுதாரணமாகியிருக்கிறது.
    உங்கள் மனசுக்குள் இந்த (மனசு, பரிவை) குமாரும் இருப்பதில் மகிழ்ச்சி....
    வாழ்த்துக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  22. ஆறு இலட்சம் பக்கப் பார்வைகள் சாதாரண செய்தியல்ல ஐயா
    தங்களின் கடின உழைப்பிற்குக்கிடைத்திருக்கும் பரிசு இது
    இலட்சங்களைத் தாண்டி, பல கோடிகளையும் தங்களின் வலைப் பூ வாசம் வீசும் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  23. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்.
    என்னையும் நினைவில் கொண்டதற்கு நன்றியும் கூட.
    வலைப்பக்கம் தாண்டி சாதித்துக் கொண்டிருக்கும் நீங்கள்
    எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர்தான்

    பதிலளிநீக்கு
  24. ஆறு லட்சம். ஆறு மனமே ஆறு....

    என்ன சொன்னீங்க? விசு போல நகைச்சுவையா? என்னை வைச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலையே.?

    பதிலளிநீக்கு
  25. ஐயா , வணக்கம் தகுதி இல்லாத விகுதியில் உள்ள என் பெயரைப் பார்த்ததும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி .ஜெர்மனி சென்று இருந்ததால் பின்னூட்டம் தாமதம் ஆகிவிட்டது .உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றி ஆனால் இதெல்லாம் நீங்கள் பார்க்கவே தேவையில்லை .பலரின் நெஞ்சங்களில் நீங்கள் ஆசானாக நிலை பெற்று இருக்கிறீர்கள் என்பதே வாழ்நாள் சாதனை .தூய உள்ளம் கொண்டுள்ளதால் இன்னும் உயரம் தொடுவீர்கள் என்பதில் ஐயமில்லை .

    பதிலளிநீக்கு
  26. அடேங்கப்பா... வாழ்த்துகள் நாமு சார்

    பதிலளிநீக்கு