நீர் நிலை அறிவு தமிழர்க்கு இல்லையா?

“பேஞ்சும் கெடுக்கும் காஞ்சும் கெடுக்கும் - மழை”
என்பது நம் பாட்டிகளின் அனுபவத் திருவாசகம்.

சென்னை வெள்ளத்தின்போது, வீணாய்க் கடலில் கலந்த சுமார் 10 டிஎம்சி தண்ணீரைச் சேமித்திருந்தால், சென்னைக்கு சுமார் இரண்டாண்டுக்குப்  பயன்பட்டிருக்கும் என்கிறார்கள்...
ஆனால்...வீணாய்ப் போன பரிதாபம் எப்போது புரியும்?



தற்கால வாழ்க்கை பற்றியே கவலைப்பட்டு, எதிர்காலம் பற்றிய எந்த முன்னேற்பாடும் இல்லாத நம் சமூகத்தில் அவ்வப்போது வரும் அழிவுக்குப் பின் ஒப்பாரி பின்னர் பழையபடி அதே அலட்சியம்...என்ன ஜனங்களோ போங்க..!

நமது நண்பர் குருநாதசுந்தரம் அவர்களின் தளத்தில், தமிழில் “நீரைச் சேமிப்பது தொடர்பான சொற்கள் சுமார் 46” இருப்பதாக அவர் எழுதியிருந்தது கண்டு வியந்து போனேன்! அதில் நான் கேள்விப்படாத சொற்கள் பலவும் இருந்தன. ஆனால், அதில் பார்த்தபிறகுதான் எங்கோ படித்திருக்கிறோமே என்று என் மண்டைக்கு உறைக்க வைத்த நண்பருக்கு நன்றிகள் பல!

நீர்நிலை-சேமிப்புத் தொடர்பாக இத்தனைச் சொற்களை நம் தாத்தன்-பாட்டிமார் பயன்படுத்தியிருந்தால், நீரின் பயன்பாடு மற்றும் சேகரிப்புத் தொடர்பாக எவ்வளவு தெளிவாக அவர்கள் இருந்திருப்பார்கள் என்னும் சிந்தனை எனக்குள் நிறைய ஆற்றாமைமையத் தோற்றுவித்து, வெட்கப்பட வைத்தது!

அவரவர் ஊர்களில், அழிந்து போன, காணாமல்(?)போன நீர்நிலைகள் எத்தனை எவை என்று புள்ளிவிவரம் எடுத்து, இயலும் வரை அவற்றை -பெரும் கல்மரங்கள் முளைத்த இடம் தவிர- மீட்டு, நீர்நிலையாக்க முடியுமானால் இனி வரும் தலைமுறையாவது வெள்ளத்திலிருந்து தப்புவது மட்டுமின்றி  தண்ணீர்ப் பிரச்சினையிலிருந்தும் மீள முடியுமே?

மூன்றாம் உலகப்போர் மூளும் நிலை வருமானால், அனேகமாக அது தண்ணீர்ப் பிரச்சினையினாலேயே வரும் எனும் ஓர் எச்சரிக்கைச் செய்தி வேறு அச்சுறுத்துகிறது!

இவற்றுக்கிடையில் -
தமிழில் நீர்ச்சேமிப்புக்கு 46 சொற்கள் இருக்கும் வியப்பை நண்பரின் தளத்தில் பார்த்து அவரையும் பாராட்டுங்கள்-
http://gurunathans.blogspot.in/2015/12/blog-post.html 

சுமார் 2000 வருடப் பழமை வாய்ந்த தமிழர்களின் உயர்தொழில் நுட்பமான கல்லணை பற்றி அறியுங்கள், அப்படியே இப்ப தமிழில் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது எனும் நம் நிலையையும் யோசியுங்கள் -
http://rahmanfayed.blogspot.in/2015/05/blog-post.html
----------------------------------------- 
----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக