கல்வித்துறை அலுவலராய்
மாணவர் நலன்நினைத்தே
உன்னிதயம் ஓயாமல் துடித்தது!
அலுவலரில் மனிதராய்
ஆசிரியர் நலன் நினைத்தே
உன்னறிவு ஓயாமல் உழைத்தது!
தமிழ்படித்த அறிஞருள்
தலைசான்ற உன்நோக்கம்
சமூகவரலாற்றைச் சரியாகப் புரிந்தது!
ஆசிரியர் முன்னேற்றமின்றி
கல்விவளர்ச்சிக்கு அர்த்தமில்லை என
துறைசார் நண்பர்க்குப் பாடம் சொன்னாய்
நீ!
மாணவர் முன்னேற்றமின்றி
அரசுப்பள்ளிக்கு முன்னேற்றமில்லை என
ஆசிரியர்க்குப் பாடம் சொன்னாய் நீ!
தொழில்நுட்ப வளர்ச்சியின்றி
எப்பணியும் சிறக்காதென
எல்லார்க்கும் பாடம் சொன்னாய் நீ!
முத்தமிழ்க் கடவுளென்று சொன்னாலும்
முருகனை வணங்காதவன் நான்! அருள்
முருகா! உன்னை வணங்குகிறேன்! -
நீ மனிதருள் சான்றோன் என்பதால்.
உன்னோடு பணியாற்றிய காலம்
எமது பொற்காலம் என்பது சத்தியம்.
உன் பணி சிறக்க, நீ எங்கிருந்தாலும்
உன்னருகில் இருப்போம் என்றும்.
அன்புடன்,
-நா.முத்துநிலவன்.
04-06-2015
----------------------------------------
(படவரிசை - இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக -
மகா.சுந்தர், கு.ம.திருப்பதி, முனைவர் நா.அருள்முருகன், நா.முத்துநிலவன், குருநாதசுந்தரம், கஸ்தூரிரெங்கன்)
-------------------------------------------------------------------------
எமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக 4ஆண்டுக்காலம் பணியாற்றி,
இன்று கோவை மாவட்டத்திற்குப்
பணியிடமாறுதலில் செல்கிறார் -
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்.
மேல்விவரம் காண, நண்பர் கஸ்தூரி் ரெங்கனின் இந்தப்பதிவில்
எழுத்தாளரும் ஆர்எம்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான
நண்பர் ராசி.பன்னீர்செல்வத்தின் பிரிவுரை காணச் சொடுக்குக -
http://www.malartharu.org/2015/06/farewell-to-ceo-drarulmurugan.html
---------------------------------------------------------------------------------------------------
அய்யா அவர்களின் புதிய பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குநீ இங்கு வரும்போது அய்யாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.... எனினும் எங்கிருந்தாலும் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்.
நீக்குஅவசியம் அடுத்த முறை வரும்பொழுது ஒருநாள் அய்யாவை சந்திக்க வேண்டும்.
நீக்குஅதற்கு முன் திருமயம் ஓவியப் பாறையையும், ராஜராஜன் பெருவழியையும் போய் பார்க்க வேண்டும்.
அய்யாவை போன்றவர்களை ஒரே ஒரு மாவட்டத்திற்குள் மட்டும் அடைத்து வைத்துவிடக்கூடாது... என்பதே என் கருத்து!!!
ஐயாவை சந்தித்த அன்றைய தினம் மறக்க முடியாதது... பொன்னாள்...
பதிலளிநீக்குஆமாம்..அடக்கத்தில் அவர் ஒரு தனி ரகம்.
நீக்குநிறைகுடம் தளும்பாது என்பதற்கு வாழும் உதாரணம் அவர்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
காலத்தின் தேவை... நடக்கிறது.. அவர்களின் பயணம் இனிதாக அமையட்டும் ஐயா.அவருக்கு பாடிய கவி மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இப்போதெல்லாம் கவிதை எழுதுவதே மறந்துவிட்டதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்... அய்யா எழுதவைத்துவிட்டார்
நீக்குநேர்மையான அதிகாரியை புதுகை இழந்தது..
பதிலளிநீக்குபுதுகை இழந்தது, கோவை மகிழ்ந்தது
நீக்குஒரு நல்ல தலைவனுக்கு அழகு, அவருக்கு பின் பல நல்ல தலைவர்களை உருவாக்குவது... அய்யா அவரின் கடமையை செவ்வனே செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது...
நீக்குஆகா மீண்டும் ஒரு கவிதையா?
பதிலளிநீக்குதம +
நெருடாவின் பின்னூட்டம் பார்த்தேன்