அழைப்பிதழ் வந்தாச்சு..
புத்தகங்களும் வந்தாச்சு..
அனுப்பத் தயாரான போது
வந்தது ஒரு தகவல்!
இவற்றோடு எங்கள் ஊரில்
நகராட்சித் தேர்தலும் வந்ததாக...
ஆக, செப்டம்பர்-7ஆம் தேதி நமது
புத்தக வெளியீட்டு விழா இல்லை!
சிறிதுநாள் காததிருக்க வேண்டி உள்ளது
அதே அழைப்பிதழின்படி, (நாள்மட்டும் மாற்றி)
நமது விழா உறுதியாக சிறப்பாக நடக்கும்.
தேர்தல் திருவிழா முடிய ஒருமாதம் எடுக்கும்.
எனவே நமது விழாத் தேதியை விரைவில் தெரிவிப்பேன்.
நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
------------------------------------------------------------
it"s okay sir, any way advance congratulation sir....
பதிலளிநீக்குஇன்னும் ஒரு மாதமா...இந்நேரத்திலா தேர்தல் வரவேண்டும்?
பதிலளிநீக்குதேதி மாறினாலும் தரம் மாறாமல் விழ நடக்கும்...வாழ்த்துக்கள் அண்ணா
தேர்தல் வரும நேரத்திலா நம் விழா நடத்த முடிவாக வேண்டும்? அதிலும் ஜி.ஆர்., நல்லக்கணணு , திண்டுக்கல் பாலபாரதி போலும் தலைவர்களை அழைத்து நடத்த எண்ணியதால் வந்தது. அதனால் என்ன? முகூர்த்தமா தள்ளிப் போகுது? புத்தக வெளியீடுதானே? இன்னும் திட்டமிட்டு சிறப்பாக நடத்த வாய்ப்பு என்றே கருதிக்கொள்கிறேன். நன்றிம்மா..
நீக்குசிறப்பாக நடக்கும் அண்ணா..உங்கள் optimism பார்த்து மகிழ்ந்து வணங்குகிறேன்.
நீக்குஇப்பொழுதுதான் என் கருத்தில் விழா என்பது விழ என்று இருப்பதைப் பார்க்கிறேன்...பெரும் பிழை!! :( மன்னியுங்கள் அண்ணா.
வைரம் அதை எளிதாக கிடைக்காது அண்ணா:)) காத்திருக்கத்தான் வேண்டும்.
பதிலளிநீக்குநானே ரொம்ப நாள் கழித்து புத்தகம் போடுகிறேன். புதிய மரபுகள் வந்த 1993 ஆண்டுமுதல் மதுரைக் காமராசர் பல்கலையில் எம்ஏ வகுப்புக்குப் பாடநூலாகிவிட, புத்தகம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.. பத்தாண்டுத்தாமதமாக இரண்டாம் பதிப்பு, இப்போத இன்னும் ஒருமாதம்தானே? (எப்படி பாஸிடிவ்?)
நீக்குதேர்''தல்''ளால் தங்தளின் தேதி ''தள்''ளிப்போனதே... ஐயா வெளியிடும்போது... தேதியை அறிவிக்கவும் நன்றி. எனது கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதையை காணவும்,
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம் ...
பதிலளிநீக்குஎன்ன செய்வது ...
அதுதான் வேறுவழி?
நீக்குஆக்கப் பொறுத்த நாங்கள் ஆறப் பொறுக்கிறோம்!
பதிலளிநீக்குMan proposes Super women disposes! (Election conduct code)
நீக்குவாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குஎதுக்கு? தள்ளிப் போனதுக்கா..? சரி சரி...நன்றி.
நீக்குதேர்தலால் நூல் வெளியீடு தேதி மாறிவிட்டதா?
பதிலளிநீக்குகாத்திருக்கின்றேன் ஐயா
தங்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாத் தள்ளிப்போனது வருத்தமளித்தாலும் அன்றைய நாளில் தஞ்சையில் நடக்க இருந்த எனது தங்கையின் திருமணத்தால் எங்கே நான் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமோ எனத் தவித்துக் கொண்டிருந்தேன். தள்ளிப்போனதால் அத்தவிப்பு நீங்கியது. தடைகளைக் கடக்கும் செயல்கள் தரமாகவே அமையும். வாழ்த்துகள் அய்யா.
பதிலளிநீக்கு