ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும்!



நூல்வெளியீட்டில், கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரை
புதுக்கோட்டை, மே.29
புதுக்கோட்டையருகில் மதுரைச் சாலையில் உள்ள ரோட்டரி மகாலில்  நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும், தமிழ்நாட்டு ஆசிரியர்களில் சொந்தமாக சிந்தித்து நூல்எழுதுவோர் குறைந்து போனதே தமிழ்வளர்ச்சிக்குத் தடையானதுஎன்றார்.
புதுக்கோட்டை ரோட்டரி சங்க விழாவுக்கு ரோட்டரித் தலைவர் கே.திருப்பதி தலைமையேற்றார்.செயலர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார்.
மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் முனைவர் நா.விஜயரெகுநாதனும், இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் வி.ராஜசரோவும் இணைந்து எழுதியயோகாவும் உடல் நலமும்எனும் நூலை எழுத்தாளரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டார். அதே கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் தா.மணி முதல்பிரதியை பெற்றுக்கொண்டு  வாழ்த்துரை வழங்கினார்.
ஆயுள் காப்பீட்டுக் கழக வளர்ச்சி அதிகாரி நா.விஜயகுமார், ஆனந்த யோகா பவுண்டேசன் யோகா செல்வராஜ், மூத்த ரொட்டேரியன் திருப்பதி, பிஎஸ்கே பள்ளித் தாளாளர் பி.கருப்பையா ஆகியோர் நூலின் சிறப்புகளைக் குறித்து, உரையாற்றினர்.
நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றிய நா.முத்துநிலவன் பேசும்போது-

பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா?!?!?



நா.முத்துநிலவன் - கட்டுரை
தற்போதைய தமிழக அரசிடம், பள்ளிக் கல்வித்துறையில் புதிய இரண்டு பரிந்துரைகள்  தரப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இவற்றைக் கல்வி அமைச்சர் மறுத்திருப்பதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

10,12ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வுமுறை மாற்றம், மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் இரண்டில் ஒன்றை மட்டும் எடுத்துப் படிப்பது பற்றியே இந்தப் பரிந்துரைகள் உள்ளனவாம்! எனினும், இது வெறும் பள்ளிமாணவர் சார்ந்த செய்தியல்ல, அடுத்தடுத்த தலைமுறை சார்ந்த, கவனமாகக் கையாளவேண்டிய செய்தி! எனவே இதுபற்றிக் கல்வியாளர், தமிழார்வலர், சமத்துவ சமுதாயம் காணும்  முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவருமே கவனிக்க வேண்டிய செய்தியாகவிட்டது.

இதுபற்றிய சில தகவல்களோடு பரிந்துரைகள் பற்றியும் பார்ப்போம்.

பாடப்பகுதியைத் தாண்டிப் படிப்பதே பொதுஅறிவு!



கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

புதுக்கோட்டை- மே,5 கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியின் 14ஆவது ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்றிய  கவிஞர் நா.முத்துநிலவன், “பாடப்பகுதிப் புத்தகங்களைத் தாண்டியும் படிப்பதே பொதுஅறிவு என்று பேசினார்

ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு, கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன் தலைமையேற்றார். கல்லூரிச் செயலர் கேஆர் குணசேகரன், அறங்காவலர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுப.தாரகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஒற்றுமை பாடுக தமிழினமே! - நா.முத்துநிலவன்



என்சாமி பெரியசாமி உன்சாமி சின்னச்சாமி” என்று சாமியின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைப் பிரித்து வரும் சுயநல வாதிகளுக்குச் சொல்லுங்கள் -                                                   
மக்கள் என்றும் ஒற்றுமை விரும்பிகள்தான் என்பதை! 

அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடிநாதமாக சாதி மதம் பாராத மக்கள் ஒற்றுமை விரும்பிகள்தான்!

அஞ்சு விரல்ல ஏத்த இறக்கம் இருந்தாலும் உள்ளங்கையி எல்லாருக்கும் ஒண்ணுதானே’ என்னும் உணர்வோடுதான் மக்கள் என்றும் இருக்கிறார்கள் என்பதுதமிழ் இலக்கியக் கண்ணாடியில் கொஞ்சம் கால ஏடுகளைப் புரட்டிப் பார்த்தாலே தெரியும். பார்ப்போம் வாருங்களேன்...?!?!

நமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க!



நமது வலைப்பக்கத்தில் வந்த எனது கவிதையை, பெயரறிய முடியாத நண்பர் பலரும் (காண்செவி – Whatsaap) புலனங்களில் 
என்பெயருடன் பகிர, அது எனக்கே வந்தது! 
அறிமுகமான நண்பர் பலர் இது உன்னுதுதானே? வாட்சாப்ல பிரபலமாயிட்டு வருது!என்று மகிழ்ச்சி தெரிவித்தார்கள்!

பிறகு --
பத்திரிகைஇணைய இதழிலிருந்து, “இந்த உங்கள் கவிதையை எமது இதழில் வெளியிடலாமா?” என்று அனுமதி கேட்டார் திரு தனசேகர பாண்டியன் அவர்கள். மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன், அவர்களும் அன்புடன் வெளியிட்டார்கள் – 
இதோ அந்த பத்திரிகைஇணைய இதழ் இணைப்பு -
  
பிறகு --
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் 14-04-2019 அன்று, பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டிருந்த திருச்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்தக் கவிதையை எடுத்துச் சொல்லி, என் பெயரையும் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதால், அந்தக் கூட்டத்தில் அமர்ந்து கேட்டவர்களும், தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பார்த்தவர்களும், இணையத்தில் பார்த்தவருமாகப் பல லட்சம் பேரிடம் கவிதை போய்ச்சேர்ந்ததில் நண்பர்களின் உற்சாக வாழ்த்து மழையில் 14-04-2019 முழுவதும் நனைந்து மகிழ்ந்தேன்!
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் 
இணையப் பக்க இணைப்பு -
(சரியாக 31ஆவது நிமிடத்திலிருந்து நம் கவிதை!)

பிறகு --
இதோ , இப்போது, நமது கவிதையை நம்மிடம் ஏதும் சொல்லாமலே- உரிமையோடு, காணொலியாக்கி அந்த விவரத்தை நமக்கு அனுப்பிய நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.
அந்த நமது கவிதை-காணொலி இணைப்பு இதோ-

நம்மால் இயன்றதை
விதைத்துக் கொண்டே இருக்கிறோம்!
பற்பல இடங்களில் அது
முளைத்துக் கொண்டுதான் இருக்கிறது
என்பதற்கு,
இந்த நமது கவிதையே சான்றாக இருக்கிறது!

நன்றி நன்றி நண்பர்களே! 
வேறென்ன சொல்ல? 

அற்புதக் குறும்படம் பார்க்க அழைக்கிறேன், வருக!



ஒரு சின்னஞ்சிறு படத்திற்குள்
இவ்வளவு நல்ல செய்தியைத் தரமுடியுமா?

வசனம் இல்லை!
படத்திற்குத் தலைப்பும் இல்லை!
எடுத்தவர், நடித்தவர் யாரென்றும் தெரியவில்லை

ஆனால்,
பார்ப்போர் அனைவரும்
அவர்களை வாழ்த்துவது உறுதி!

பார்க்கும் யாரையும் பாதிக்கும் வலிமை
இப்படத்திற்கு உண்டு!

இரண்டரை நிமிடம்தான்!
பார்க்க வாருங்கள்!
பார்த்தபின் பகிருங்கள்!
அதுவே
இப்படக் குழுவினர்க்கு
நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்!

படம் பற்றிய மேல்விவரம் தெரிந்தால்
எனக்கும் சொல்லுங்கள்,
அதையும் பகிர்வோம்!
அவர்கள் பணி தொடர வாழ்த்துவோம்!
-------------------------------------------------------------------------------------------------

மோடி சொன்னதும், (வச்சி) செஞ்சதும்! -ஆதாரங்களுடன் ஆனந்த விகடன்!




நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை'' என சொன்ன மோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா?

மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம் (இசைப்பாடல்)

மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம்
(தேர்தல்-இசைப்பாடல்)
--நா.முத்துநிலவன்--
மோடி-பாடி கூட்டணிய ஓடஓட விரட்டுவோம்                                    முக்கியமா சிலகேள்வி அவுங்க கிட்ட கேட்போம்!-நம்ம                            நாடு மக்க நல்லாருக்க, நல்லவரப் பார்த்து - நாம                              
ஓட்டுப் போட்டு ஜனநாயக நாட்ட இப்ப மீட்போம்!

(1)  அரசாங்க ஊழியருன்னா ஆண்டுல இத்தனநாள்
வரணுமுன்னு நம்மநாட்டு சட்டம்உண்டு தானே?!- -மோடி
அஞ்சு வருசமா பார்லிமெண்டுக்கு வந்தது
பதினெட்டு நாள்தான் இதுக்கு தண்டனைதான் என்னா?
உலகம் பூராச் சுத்திவர! தப்புஇல்ல! – சபையில
உட்கார்ந்து பதில் சொல்ல துப்புஇல்ல! ஏன்?        (மோடி-பாடி கூட்டணி

தளபதி ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொன்ன என் கவிதை



நன்றி! நன்றி!! நன்றி!!! 
இன்று (13-04-2019) காலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பரப்புரைப் பெருங்கூட்டத்தில், எனது கவிதையை அழகாக எடுத்துச் சொல்லி, என் பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய தி.மு.க.தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெகிழ்வான மகிழ்வான நன்றி!  


தளபதி ஸ்டாலின் அவர்களின் முழுப்பேச்சு இணைப்பு இதோ -
(இதில் சரியாக 30ஆவது நிமிடம்,40ஆவது நொடியிலிருந்து...) --