வணக்கம்.
இன்று வந்த
'ஆனந்த விகடன்'
(சித்திரைச் சிறப்பிதழ் -15-4-2026)
எனது நேர்காணல் வந்துள்ளது.
நன்றி:
விகடன் நிர்வாக ஆசிரியர்
திருமிகு வெ.நீலகண்டன் அவர்கள்,
ஒளிப்படக் கலைஞர் திரு தீட்ஷித் - விகடன்
இதில் படிக்க இயலாதவர்கள்,
என்னை மன்னிப்பதோடு,
இன்றே இப்போதே சென்று
இன்று வந்துள்ள
ஆனந்த விகடன் சித்திரைச் சிறப்பிதழ்
வாங்கிப் படித்துக்
கருத்திட வேண்டுகிறேன்.
-------------------------------------------------
தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்வோர்,
பின்வரும் இணைய இணைப்பில் சென்று
தொகை செலுத்திப் படிக்கலாம்:
https://www.vikatan.com/literature/writer-muthu-nilavan-interview
Get Unlimited Access to All Vikatan magazine
worth ₹250 for FREE. Install Vikatan
APP https://vikatanmobile.page.link/ShareButton
நன்றி வணக்கம்.
------------------------------------------
பி.கு.
இந்த நேர்காணலில்
மூன்று எழுத்து, தொடர்ப் பிழைகள் வந்துள்ளன!
கண்டு பிடித்துச் சொல்வோர்க்கு
சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன்,
தன்னைப் பாடிய கபிலருக்கு,
''சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து,
'நன்றா' என்னும் குன்றேறி நின்று
தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம்
காட்டிக் கொடுத்தது" போல
என்னால் தர இயலாது என்பதால்
வீட்டுக்கு வந்தால்
என் கையால் நானே தயாரித்து,
ஒரு நல்ல தேநீர் தருவேன்,
சமூக இலக்கியம் பேசலாம்
என்பதைக் கனிவுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்!
(வருவதற்கு முன் பேசிவிடுங்கள்,
ஏனென்றால் நான் நல்ல ஊர்சுற்றி)
நன்றி, வணக்கம்.
எனது செல்பேசி எண்:
+91 94431 93293
--------------------------------




தமிழ் அழகு. உங்கள் எழுத்துக்கள் அந்த அழகுக்கு அழகு சேர்க்கிறது. அது உங்கள் ஒவ்வொரு பேச்சிலும் எழுத்திலும்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே. கொஞ்சம் கவனித்துக் கருத்துப் பதிவிட்டால் உ ங்கள் பெயரும் வருமே? நன்றி
நீக்குஅருமையான நேர்காணல் ஐயா! தொடர்ந்து தமிழுக்காக உழைக்கும் தமிழர்க்காகச் சிந்திக்கும் தங்களுக்கு இது ஒரு சரியான ஏற்பிசைவு. "மரபை மீறுவதற்காகவாவது மரபைத் தெரிந்து கொள்" என்றதும் "இளம் படைப்பாளிகள் இலக்கணத்தைப் புரிந்துகொண்டால் காத்திரமான படைப்புகளைத் தர முடியும்" என்றதும் தமிழ் உலகம் காலத்துக்கும் நினைவில் கொள்ள வேண்டிய முத்தான அறிவுரைகள். "இலக்கணம் எனும் இழையில்தான் மொழி காலத்தைத் தாக்குப்பிடித்து நகரும்" என்று நீங்கள் குறிப்பிட்டது அற்புதம்!
பதிலளிநீக்குரகரம் படும் பாடு பற்றி எப்பொழுது கவலைப்பட்டு எச்சரித்துக் கொண்டே வருபவர் நீங்கள். இன்று உங்களுடைய அந்த எச்சரிக்கை சரியான மேடையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
உங்கள் வாழ்க்கையை மிக அழகாக மூன்று பக்கங்களில் சுருக்கித் தந்திருக்கிறார் தோழர் நீலகண்டன் அவர்கள். விகடன் எழுத்துருவின் ரகரத்திலும் நீங்கள் குறிப்பிடும் அதே சிக்கல் இருப்பதால் ரி-உம், ர்-உம் சரியாக எப்படி எழுதப்பட வேண்டும் என்பதைத் தனியே படம் போட்டே காட்டியிருப்பது உங்கள் கருத்துக்கு விகடன் தரும் மதிப்பைக் காட்டுகிறது.
மொழி தமிழாசிரியர்களுக்கு மட்டும் உரியதில்லை, அது மக்களுக்கு உரியது என்ற உங்கள் கருத்து வெகு அருமை!
நன்றி தோழா. எப்போதும் போல வரிக்கு வரி படித்து அதன் சாரத்தைப் பிடித்துக் கருத்தெழுதியமைக்கு நன்றியும் வணக்கமும். எப்போதும் சொன்னதுதான் என்றாலும், இப்போது விகடன் எனும் விரிந்த தளம் நம் - ர ர் ரி - கருத்தைக் கொண்டு சென்றிருக்கிறது பார்ப்போம்
நீக்குஅருமை...நல்ல கருத்துச்செறிவோடும்,சிறப்பான புகைப்படங்களோடும் வந்திருக்கும் கட்டுரை.உற்ற துணையாக இருக்கும் உங்கள் இணையர் மல்லிகாவிற்கும் பாராட்டுகள்.வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் தோழர்....வா.நேரு,தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
பதிலளிநீக்குநன்றி தோழர். என் இணையர் இல்லாவிடில் நான் பாதியில்லை என்பது சற்றும் மிகையல்ல. எனவே வாய்ப்பைப் பயன்படுத்தி அவரைச் சொல்வது என் வழக்கமாகவே உள்ளது. நன்றி தோழர் வணக்கம்
நீக்குசிறப்பு ஐயா நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றியும் வணக்கமும் நண்பரே.
நீக்குஆனால் தமிழ் ஆசிரியர்களின் பிள்ளைகள், பேர பிள்ளைகள் கணிதம் மற்றும் அறிவியலை ஆங்கிலத்தில் கற்பிக்கும் பள்ளிகளில்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள்.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே. கசக்கும் உண்மை. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காக என்ன படித்தாலும் நமது தமிழ் உணர்வு குன்றாமல் காத்துக் கொள்வதுதான் மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். வீட்டில் அம்மா அப்பா மறைந்து மம்மி டாடி என்று சொல்லும் தமிழாசிரியர்கள் தான் ஆபத்தானவர்கள் நீங்கள் அறிவீர்களா?
நீக்குசிறப்பான நேர்காணல் தோழர், உங்களைப்பாற்றியும் உங்கள் பணி குறித்தும் மேலும் அறிந்து கொண்டேன், தொடரட்டும் தங்களின் நற்பணி, வாழ்க.
பதிலளிநீக்குநன்றி தோழர். ஔ கௌ எனும் எழுத்துகளில் உள்ள துணையெழுத்தான ள கரம் சற்றே அளவில் சிறிதாக வரவேண்டும் என்றும் நான் வெகுநாளாகச் சொல்லி வருகிறேன். ஆனால் அதை உங்கள் நூல் முழுவதும் -மிகவும் முயற்சி எடுத்து - பயன்படுத்தியிருப்பதைப் பார்த்து மகிழ்ந்து வியந்து போனேன். தமிழின் மீதான உங்களின் அக்கறை உணர்ந்து கொண்டேன். சொல் அல்ல, செயல் - அதுதான் தேவை, வணங்குகிறேன் தோழர்
நீக்குபடித்து ரசித்தேன். வாழ்த்துகள் ஐயா, தங்கள் தனிச்சிறப்பே எப்போதும் குறையாத உற்சாகத்துடன் இளைஞர்களை விட சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதுதான். தமிழ் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை தானும் பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உங்கள் உழைப்பு போற்றுதற்குரியது. தங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் நற்பணிகள்
பதிலளிநீக்குநீங்கள் மட்டும் என்ன நண்பரே! அறுபதை நெருங்கி வருவீர்கள் அல்லவா? இன்னும் உங்களின் பல்வேறு முக்கிய அதிகாரப் பணிகளுக்கு நடுவிலும் இதைப் படித்துக் கருத்திடும் அளவுக்கு இருக்கிறீர்கள்தானே? நீங்கள்தான் என்னிலும் சுறுசுறுப்பு என்பதை அறிந்து மகிழ்கிறேன் நன்றி
நீக்கு