தமிழ்நாடு அரசின்
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலும்,
பொதுநூலகத் துறை
வரலாற்றிலும்
ஒரு முக்கியமான
முன்னெடுப்பு –
இரண்டு துறைகளும் இணைந்துதான்
மக்களுக்கான கல்வியைத் தரமுடியும்
என்பதைப் புரிந்து கொண்டு
செயல்படுத்திய சான்றோரை
என் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
இதில் என்னையும் அழைத்துப்
பயன்படுத்திய
என்னை இப்பொருளில் மேலும் படிக்க
வைத்த
இக்குழுவினர்க்கும்
தமிழ்நாடு அரசிற்கும் எனது நன்றி.
இதனை எனது வலைப்பக்கத்தில்
நன்றியுடன் பகிர்கிறேன்-
நா.முத்துநிலவன்.
நா.முத்துநிலவன் ( 20 நிமிட) உரை
“சங்க காலச் சித்திரங்கள்”
காணொலி இணைப்பு : https://youtu.be/S0mu4VNFmuw
------------------------------------------------------------
முழுமையான அழைப்பிதழ் இங்குப்
போட முடியவில்லை (அவ்வளவு பேர்!)
என் தோழர்கள் மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா, சி.மகேந்திரன், கோவி.லெனின், மு.முருகேஷ்.செல்வ.புவி., இரா.காமராசு, இரா.எட்வின், களப்பிரன், ஸ்டாலின் சரவணன், சுரேஷ்மான்யா, அண்டனூர் சுரா, மரு.நரேந்திரன் உள்ளிட்ட ஐம்பது ஆளுமைகள் பேசியிருக்கிறோம்!
எனினும் காணொலி இணைப்பை அனுப்பிய தஞ்சை நண்பர்களுக்கு நன்றி. சென்னையிலிருந்து அழைத்துப் பேசிய நூலக அலுவலர் காமாட்சி அவர்களுக்கும் நன்றி
காவிரி இலக்கியத் திருவிழா – தஞ்சை
முதல்நாள் உரைகள்
https://www.youtube.com/live/
காவிரி இலக்கியத் திருவிழா – தஞ்சை
இரண்டாம் நாள் உரைகள்
https://www.youtube.com/live/
திட்டமிட்டு நடத்திய தஞ்சை மாவட்ட ஆட்சியர்
மற்றும்
தஞ்சை திருச்சி நாகை மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் எனும் எட்டு மாவட்ட நூலகத்துறை நண்பர்களுக்கும்
தமிழ்கூறும்
நல்லுலகம் நன்றி கூறும்.
இதனை காணொலி வழி ஆவணப்படுத்தி
உலகெங்கும் கொண்டு செல்லச் சிந்தித்துச்
சிறப்பாகச் செயல்பட்ட ஆவணக் குழுவின்
நண்பர்களுக்கும் எனது நன்றியும்
வணக்கமும்.
இருபது நிமிடத்தில்
பேசுபொருள் தொடர்பான ஆழ்ந்த சிந்தனைகளைத் தரலாமே தவிர
அகலமான விளக்கங்களைத் தர இயலாது என்பதை உணர்ந்து
இன்னும் சிந்தித்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தலாம்
என்பது என்கருத்து.
எனினும் தமிழ்நாடு அரசு வரலாற்றில்
முதன்முறையான முன்னெடுப்பு எனும் வகையில்
எனது நன்றி.
எனது உரை பற்றிய
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்
வணக்கம்
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
செல்பேசி எண் – 94431 93293
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக