திரு சிவகுமார், குடும்பத்தினருடன்
----------
அன்றைய
நிகழ்வால் எனக்குத் தேதி மறக்கவில்லை!
அந்த நாள்
18-05-2010
மாலை... நானும் என் துணைவியாரும் புதுக்கோட்டை வீதியில் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எனது செல்பேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. நான் எனது வண்டியின் மிதவேகத்தை
இன்னும் குறைத்து, செல்பேசியை எடுத்து என் மனைவியிடம் தந்து, “யாரென்று கேள்பா..ஏதும்
அவசரம்னா சொல்லு, இல்லன்னா பத்து நிமிடம் கழித்துப் பேசச்சொல்லு” என்று சொல்கிறேன். அவரும்
பேசிவிட்டு, “யாரோ சிவக்குமாராம். சென்னையிலிருந்து பேசினார். பிறகு கூப்பிடச் சொல்லியிருக்கிறேன்”
என்று சொன்னார்.
நானும்
மற்ற வேலைகளில் மறந்துவிட்டேன்.
சரியாகப்
பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைப்பு. இப்போது நான் எடுத்து “வணக்கம் நான் முத்து
நிலவன். யாரு பேசுறதுங்க?” என, “வணக்கம் முத்துநிலவன், நான் சிவக்குமார் பேசுகிறேன்”
என, எனக்குக் குரல் பரிச்சயமானதாகவும் ஆனால் யாரென்று பிடிபடாத தாகவும் இருக்க, “எங்கிருந்து
பேசுறீங்கய்யா?“ என்று கேட்டவுடன், சற்றும் குரல் மாறாத இயல்பான தன்மையுடன் “சென்னையிலிருந்து நடிகர் சிவக்குமார் பேசுறேன்..”
என, நான் பரபரப்பானேன்..“அடடே அய்யா வணக்கங்க! சொல்லுங்கய்யா” என..அவர் இயல்பாக “ஜனசக்தி
பத்திரிகையில “செம்மொழி மாநாடும் கம்பனும்” எனும் உங்க கட்டுரையைப் படிச்சேன். நல்லா
எழுதியிருக்கிங்க... “கம்பன் என் காதலன்” னு 3மணிநேரம் கம்பன் பத்தி நா பேசின பேச்சைப்
பார்த்திருக்கீங்களா?“ என்று கேட்க, “ஆமாங்க விஜய் டி.வி.யில ஒளிபரப்பாச்சுல்ல.. ஆனா
முழுசாப் பாக்க முடியல… கேட்ட வரைக்கும் எந்தக் குறிப்பும் இல்லாம, கம்பராமாயணப் பாடலுடன்
அழகாப் பேசியிருந்தீங்க” என்று சொல்லி முடிப்பதற்குள், “உங்க முகவரிய எனக்கு மெஸேஜ்
பண்ணுங்க அனுப்பறேன் பாருங்க பிறகு பேசுகிறேன்”