ஏமாற்றும் விளம்பரங்கள்!

டிசம்பரில் வந்த சேவைக்கு செப்டம்பரிலேயே விளம்பரம்!
விளம்பரம்  தவறான அர்த்தம் தருவதாக வந்த புகாரால், இந்திய விளம்பரத் தர நிர்ணய ஆணையம் (ASCI) விளம்பரத்தை உடனடியாக நிறுத்தும்படி பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் கூறியது. இதனை அடுத்து அந்த விளம்பரம்  நிறுத்தப்பட்டு விட்டது.
“இதைவிட வேகமான நெட்வொர்க் உங்களிடம் இருந்தால், உங்கள் லைஃப் டைம் மொபைல் பில் ஃப்ரீ” என்று  சவால் விட்ட இளம்பெண், அதையும் “ஸ்மார்ட் ஃபோன் இருந்தா ஏர்டெல் மட்டுமே எடு ம்!”என உரிமையோடு இந்தியா முழுவதும் இருக்கும் பலகோடி இளைஞர்களுக்கு அவரவர் மொழியில் அந்தப் பெண் நட்பு ரீதியாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்!
      முன்பெல்லாம் வாடிக்கையாளர்களை மரியாதையாகச் கெஞ்சிக்கொண்டு இருந்த முதலாளிகளுக்குப் புரிந்துவிட்டது, 4ஜி வாங்குகிறவர்களில் 95விழுக்காட்டினர் இளைஞர்கள்தான் என்பது! எனவேதான் இதற்கு முன் இல்லாத மொழியில் (ஒருமையில்) வருகிறது விளம்பரம்! ஃப்ரெண்ட்லி பா!
அதுவும் டிசம்பரில் வருவதற்கு செப்டம்பரிலேயே “சவால்” விளம்பரம்!!  
ஏர்டெல் விளம்பரம் மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 82 விளம்பரங்கள் விதிமுறைக்கு மாறாக இருந்துள்ளதாக சொல்லித் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

“தனியாக நிற்கிறேன்” விஜயகாந்த் ‘தெளிவான’ பேச்சு!

 
இன்று -10-03-2016- தமிழக வரலாற்றில் ஒரு பொன்னாள்!                                   இதுவரை “விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் சேர்வாரோ?என்று ஊண் உறக்கமில்லாமல் கிடந்த கலைஞர், பொன்னார் உள்ளிட்ட தமிழகத்தின் மூத்ததலைவர்கள் அதிர்ச்சியில் ஆசுபத்திரி போகும்படியான ஒரு தெளிவுரையை இன்று தந்துவிட்டார் கேப்டன்! - 

“தனியாக நிற்கிறேன்விஜயகாந்த் “தெளிவானபேச்சு!

இந்திய ராணுவம் செய்யக்கூடிய வேலையா இது?


 
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 
உலக கலாச்சாரவிழாஎன்ற மூன்றுநாள் நிகழ்ச்சியை
மார்ச்11 முதல் யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார்.  
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர்
கலந்து கொள்ள உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் யமுனா நதியின் மேல் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்திய ராணுவத்துக்கு ஸ்ரீ ஸ்ரீயின் வாழும் கலை அமைப்பு 
இதற்காக சம்பளம் தரும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார் 

    இச்செய்தி கேட்டு ராணுவ வீரர் ஒருவர் 
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் இது-

மகளிர் தினம் யாருக்காக?


   ஒவ்வொருபெண்ணும்
   சுமக்கிறாள்
   ஒரு குடும்பத்தை!
        
“பாசம்“ பிடித்த
பண்பாட்டுச் சுமை!
பரம்பரையாக!

பெண்களின் சுமையைக் 
குறைக்க,
போராளிகள் தொடங்கிய
மகளிர் தினம்,
இப்போது
வணிக தினமாகிவிட்டது!
  
வணிகரிமிருந்து 
மீட்கும் போராட்டம்
எப்போது சகோதரிகாள்?
அதுவரை என் கவிதை
இப்படியே முடியும்-
அதுவரை மன்னியுங்கள்!

உலக மகளிர் தினம்
        அருமை-
        விளம்பரத்தில்!
           ------------- 
     இது நம் வலைப்பக்கத்தின் 600ஆவது பதிவு!
     எண்ணிக்கையில் ஒன்றுமில்லைதான்!
     எனினும் இதை நம் 
     பதிவுலகச் சகோதரிகளுக்கு
     பணிவோடு சமர்ப்பணம் செய்கிறேன்.
     இந்த தின விளம்பர நிகழ்ச்சிகளில் இருக்கும் மகிழ்ச்சி,
     என்றென்றும் இவர்கள் வாழ்வில் வ(ள)ரட்டும்!

           இனிய மகளிர்தின வாழ்த்துகள்!  

தாஜ்மகாலை, பெரியகோவிலை இப்போது கட்ட முடியுமா? முடியும்!

 இன்றைய இளைஞர்கள் மேல் எனக்கு 
அவ்வளவு நம்பிக்கை வந்திருக்கிறது!
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் –இன்றைய அறிவியல் வளர்ச்சியோ, வாய்ப்பு வசதியோ இல்லாத காலத்தில்- கட்டப்பட்டு, இன்றும் உலக அதிசயங்களாகத் திகழும் தாஜ்மகாலும், தஞ்சைப் பெரிய கோவிலும் போன்ற அற்புதக் கலைப் பொக்கிஷங்கள் ஒருவேளை (இது சும்மா ஒரு வாதத்துக்காக, அட நெருப்புன்னா ஒன்னும் வாயச் சுட்டுடாதில்ல..) அழிந்து இடிந்து போனால்...?

இன்றைய இளைஞர்கள் தம் திறமையாலும், அறிவாலும், அன்பினாலும் திரும்பக் கட்டிவிடுவார்கள்...என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பாரதியார் கவிதையைத் தடைசெய்யப்போவதாக 
 அன்றைய சென்னை ராஜதானி ஆங்கில அரசு சொல்ல
“தாராளமாகச் செய்துகொள்ளுங்கள்! ஆனால்,
மனப்பாடச் சக்தியை உங்களால் தடைசெய்ய முடியாது!
நாங்கள் தமிழ்நாட்டுத் தெருக்கள் தோறும்
பாரதி பாடல்களைப் பாடித்திரிவோம்!” என்ற
சத்தியமூர்த்தி நினைவுக்கு வருகிறார்... 

இப்படி நான் சொல்லக் காரணம்?
 -------------------------------------------------- 
இன்றைய இளைஞர்களில் 3பேரைப்பற்றிய தகவல்கள்
நீங்களே பாருங்கள் –

யார் இந்த “தேசவிரோதி“ கன்னைய குமார்?


தேசவிரோதக் குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலிருந்து, 
ஜாமீனில் வந்திருக்கும் டெல்லி ஜெ.என்.யூ (ஜவகர்லால் 
நேரு பல்கலை)மாணவர் தலைவர் கன்னைய குமார் உரை-

ஜாமீனில் வெளிவந்தவர் தான் கைதுசெய்யப்பட்ட அதேஇடத்தில் நின்றுபேசிய பேச்சு இது -

ஜவடேகரும், 23ஆம் புலிகேசியும், பின்னெ கரடியும்...

செய்தி (1) சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்பட்டது...
செய்தி (2) இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்துக்குப் புறப்பட்ட்டுச் சென்றுவிட்டார்.
செய்தி (3) அதேபோன்று, பாட்டாளி மக்கள் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
செய்தி (4) இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், பிரகாஷ் ஜவடேகருடன் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என்று கூறியவர், எந்தச் சந்திப்பும் நடக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
செய்திக்கு நன்றி - http://ippodhu.com/  dated 03-03-2016


    ஆமா.. ச.ம.க.தலைவரைச் சந்திக்கலாம்னு பாத்தா... அவரும் ரசிகர்மன்ற வழக்கு நேரத்துல சந்திக்க ஒப்புக்கொள்வாரோ இல்லையோ என்ற சந்தேகத்திலேயே சந்திக்கப் போகல போல...
   அட அந்த நா.ம.க. தலைவரயாவது பாத்திருக்கலாம் அதாங்க -ஒரு எம்எல்ஏ எம்பி கூட இல்லாமலே நாடாளும் மக்கள் கட்சினு பேருவச்சிருக்காரே நம்ம கார்த்தி? இப்பவும் அவருதானே தலைவரு? இல்ல மாத்திட்டாகலா? இல்லல்ல - அவரையாவது போயி பாத்திருக்கலாம்?..என்ன ஜடேகரு? ஓ ஜவடேகரு! 
 23ஆம் புலிகேசி படத்துல “கரடிக்கும் தெரிஞ்சிடுச்சா...?என்னும் வசனத்தை யாராவது வடேகருக்கு -அடச் சே - ஜவடேகருக்குச் சொல்லிக் குடுத்திருந்தா அழகாச் சொல்லிட்டுக் கிளம்பியிருப்பாரு.
   இப்ப ஒன்னுமே சொல்லாம ஃபிளைட் ஏறிட்டாரே?
   பி.கு. அடுத்த தடவை வரும்போது உங்க மாநிலத் தலைவர் கிட்டயாவது சொல்லிட்டு வாங்கய்யா..
  பாவம் அந்தத் தமிழிசையம்மா திருப்பதியில சாமிகும்பிட்டுக்கிட்டு இருந்தப்ப நம்ம பாலாஜி சொல்லப்போயி அதுக்கப்பறமா அடிச்சுப் பிடிச்சு சென்னை வந்து சேந்துச்சாமில்ல..? 
     என்னப்பா, 
     இப்பிடிப் பண்றீங்களேப்பா..!!!??!!
-----------------------------------

சீமானின் தொலைக்காட்சி “லூசு” ப் பேச்சு!

 “குழந்தைகள் பேசும் வார்த்தைகள், கெட்ட வார்த்தை அல்ல, அவை கேட்ட வார்த்தைகள் என்று ஒரு வசனம் பாண்டிராஜின் பசங்க-2 படத்தில் வரும்.      
  உண்மைதானே?
  அவரவர் வளர்ந்த சூழலில் வாய்க்கப்பட்ட வார்த்தைகள்தான் அவரவர் வாயில் வழங்கும். நாம் பேசினாலும் இதுதான் பின்னணி.
  நேற்று 01-03-2016 அன்று இரவு தந்தி தொலைக்காட்சியில் நடந்த “ஆயுத எழுத்துவிவாத அரங்கில் அறிவார்ந்த விவாதங்களை முன்வைக்கும் பேராசிரியர் அருணன், உணர்ச்சிப் பிழம்பாகவே(?) எப்போதும் முழங்கும் “செந்தமிழன்(!)“ சீமான், பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன், வழக்குரைஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்கும் விவாத அரங்கு என்பதால் நானும் மிகவும் ஆர்வத்துடன் தொலைக்காட்சி முன் அமர்ந்து கேட்கத் தொடங்கினேன்...
   விவாதத்தில் சீமான் பேச்சு, ஒருகட்டத்தில் பொதுநாகரிக எல்லையைத் தாண்டிக் குதித்தது...

தொடரும் தொடர் பதிவர்கள்

திருமிகு  மாலன் அவர்கள்
'எல்லாரும் என் கருத்தை ஏற்கவேண்டும் என்பதில்லை, மற்றவர்களின் கருத்தையும் பாருங்கள், சரியானது எதுவென்று தெளிந்து என் கருத்துத் தவறென்றால் விமர்சியுங்கள்'

இது நான் சொல்வதல்ல, நானும் நீங்களும் ஏற்கக் கூடிய
தந்தை பெரியாரின் வேண்டுகோள்..

அதன்படி இதோ சில முன்மொழிவுகள்-
முதலில், மூத்த எழுத்தாளர் சிலர் –
(1)திருமிகு எஸ்.ரா.அவர்களின் பதிவுகள்
எல்லாவற்றிலும் ஒரு தெளிவு, பரந்துபட்ட நூலறிவும் அனுபவமும் போட்டியிடும் அரிய பதிவுகள்
(ஒருகோடியைத் தாண்டிய பக்கப்பார்வை!)

(2)திருமிகு மாலன் அவர்களின் பதிவுகள்
(கல்கி கடைசிப் பக்கத்தில் எழுதிவரும் இவரது தொடர்
அருமையான செய்திகளைத் தாங்கி வருவது பார்க்க..)

(3)திருமிகு சுப.வீரபாண்டியன் அவர்களின் பதிவுகள்
அரசியல் நேர்மையை அவமதிக்கும் விஜயகாந்த்
(கருத்து வேறுபாடுகளைக் கடந்த பண்பாளர்,
தமிழறிவு, கூர்மையான எழுத்து, பேச்சின் தொகுப்பு)

(4) திருமிகு மு.வி.நந்தினி அவர்களின் பதிவுகள்
ஊடகத்தில் பெண்களின் உயர்வான 
உரத்த நேர்மையான பதிவுகளைப் பார்க்க –

இனி, இளைய எழுத்தாளர் சிலர் –
(5)திருமிகு கோபி.சரபோஜி அவர்கள் 
(வளர்ந்துவரும் எழுத்தாளர், அண்மையில் பாக்யா இதழில் தொடர் எழுதவிருக்கும் சிங்கைவாழ் நண்பர்)

(6)திருமிகு வைசாலி செல்வம் அவர்கள் 
(மாணவியர் சேர்ந்து நடத்திவரும் வலைப்பக்கம், தொழில்நுட்பம் பற்றியும், சமூகம் பற்றியுமான எழுத்துகள்)

(7) சகோதரி ஜோசஃபின் அவர்கள் http://josephinetalks.blogspot.com/2016/02/blog-post_68.html
வலிமிகுந்த வாழ்விலும் அர்த்தம் தேடும் ஒரு சகோதரியின் மறக்கமுடியாத பதிவு - (நண்பர் மதுரைத் தமிழனின் பதிவு ஒன்றின் வழி இவரைத் தொடர்கிறேன்)

 (இன்னும் மூவரைச் சேர்த்து பதின்மராகவும் ஆக்கலாம்)
----------------------------------- 
இதுபோலத் தங்களைக் கவர்ந்த பதிவுகளைப் பின்னூட்டத்தில் நம் நண்பர்களும் தொடரலாம் மூத்தோரும் இளையோருமாக!

ஒவ்வொருவரும் 
மூத்தவர் சிலரையும்,
அறிமுகப்படுத்தவேண்டிய
இளையவர் சிலரையும் (எண் பெரிதல்ல)
தமது வலைப்பக்கத்தில் தொடராக 
அறிமுகப் படுத்தலாமே?

தொடர வேண்டி நான் கேட்டுக்கொள்வோர்-
(1)திருமிகு மைதிலி கஸ்தூரிரெங்கன்


(2)திருமிகு மு.கீதா


(3)திருமிகு சசிகலா


(4)திருமிகு கரந்தை ஜெயக்குமார்


(5)திருமிகு தேன்மதுரத்தமிழ் கிரேஸ்


(6)திருமிகு தமிழ்இளங்கோ


(7)திருமிகு மீரா.செல்வக்குமார்
http://naanselva.blogspot.com/

(8)திருமிகு பரிவை சே.குமார்


(9)திருமிகு ஞா.கலையரசி


(10)திருமிகு விசுஆசம்


    என்ன? தொடர்வீங்க தானே?
இதில் போனசாக, இளைய எழுத்தாளராக நான் தெரிவித்த இருவரும்கூடத் தொடரலாம்... எங்கே பார்க்கலாம்.
   ------------------------------- 

தமிழ்-இந்து சமஸ் அவர்களுக்கு ஒரேஒரு கேள்வி

    தோழர் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய ஏன் மறுக்கிறீர்கள்?என்று இரண்டாவது முறையாக, கேட்டிருக்கிறார் திரு சமஸ் 
(டிச-25,பிப்-23 தமிழ்இந்து கட்டுரைகளின் இணைப்புகள் 
இக்கட்டுரையின் இறுதியில் உள்ளன)
     நாம் ஒன்றும் மக்கள் நலக்கூட்டணியின் பிரதிநிதி அல்ல. எனினும், திரு சமஸ் அவர்களுக்குக் குறையாத அளவிற்கு, தோழர் நல்லக்கண்ணுவின் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவன் என்பதாலும், இந்திய-தமிழ்நாட்டுத் தேர்தல் நடைமுறைகளைப் புரிந்தவன் என்பதாலும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் திரு சமஸ் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.