பழகிய காதல் எண்ணி...

வஞ்சியென் நெஞ்சிலே
                 வந்து புகுந்தெனை
                         வாட்டிடும் தன்மையென்ன?–பிடித்(து)
                        ஆட்டிடும் நுண்மையென்ன?
தஞ்சமென் றேஅவள்
                 தாளைப் பணிந்திடும்
                         தாபத்தின் வன்மையென்ன?-பரி
                         தாபத்தின் உண்மையென்ன?
பிஞ்சு முகத்தினில்
                 கொஞ்சும் அழகினில்
                         பேதுற்ற நன்மையென்ன?-அந்த
                         மாதுற்ற பெண்மையென்ன?
கெஞ்சிக் குழைந்ததும்
                 கிட்டிய முத்தினில்
                         கொட்டிய வெம்மையென்ன?-இதழ்
                         ஒட்டிய செம்மையென்ன?

------------------(அடிக்க வராதீர்கள் இது-1978)------ 

சரி...
கண்ணதாசனின் ஏராளமான காதல் கவிதைகளைப் படித்து, மகிழ்ந்திருப்பீர்கள்... அவர் எழுதிய கவிதைகளில் நுட்பமாக, 
என்னை அழவைத்த கவிதையைப் பார்க்கிறீர்களா....?

தொழுவது சுகமா? வண்ணத்
                 தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும்
                 விருந்துதான் சுகமா?  இல்லை!
பழகிய காதல் எண்ணி,
                 பள்ளியில் விழுந்து நித்தம்
அழுவதே சுகமென் பேன்,யான்
                 அறிந்தவர் அறிவா ராக! 
(கடைசி வரியில்தான் கண்ணதாசன் உயிர்க்கிறார் இல்ல?)

தினமலர், கலைமகளுக்கு நன்றி!


திருப்பூர் தமிழ்ச்சங்க விருது விழாவில்,  விருதுக்கு நூல்களைத் தேர்வு செய்த முறை பற்றிய நடுவர் களது விளக்கம் மிகவும் நுட்பமாகவும் ஆழமாகவும் இருந்தது, மகிழ்ச்சியும் பெருமையும் தந்தது. தகுதியானவர்கள் தேர்வுசெய்த விருது என்பதால்.
  நடுவர் குழுத்தலைவர் கலைமகள் இலக்கிய இதழின் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், நடுவர் பெருமக்கள் சென்னைதிரு.ஸ்ரீதர்,மரு.ஜாய்ஸ் ஆகியோர். இவர்களைச் சென்று -முதன்முறை நேரில் சந்தித்து- நன்றி தெரிவித்து, எனது பிற நூல்களைத் தந்தேன். 
  அப்போது திரு ஸ்ரீதர் அவர்கள், “இந்த நூல் பற்றி ஏற்கெனவே தினமலர் இதழின் நூல் மதிப்புரை பகுதியில் எழுதினேன். நீங்கள் பார்க்கவில்லையா?”  என்று கேட்டு இன்ப அதிர்ச்சி யூட்டினார்!

இதோ அந்த நமது நூல்களுக்கான மதிப்புரைகள் -

முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!-

கம்பன்தமிழும் கணினித்தமிழும்-

தினமலர் நாளிதழ் மற்றும் அறிமுகம் செய்த தமிழ்ச்சான்றோர் பெருமக்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.

           “விதைத்துக் கொண்டே இரு!
            முளைத்தால் மரம், 
         இல்லையேல் உரம்! என்று கவிதைபோல இயற்கை நலவாழ்வுச் சங்கத்தினரின் வசீகர வரிகள் நினைவுக்கு வந்தன.

--------------------------------------------

திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும், புத்தக விழாவும்

“கம்பன் தமிழும் கணினித் தமிழும்” நூலுக்கு,  
திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினரின்
விருது மற்றும் கேடயத்தை  வழங்குபவர் 

தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன்.
அருகில் சங்க நிர்வாகிகள் ஆ.முருகநாதன், அ.லோகநாதன், சு.இராஜூ, மற்றும் விருதுபெற வந்திருந்த “நல்லி” குப்புசாமி அவர்கள்,

இடது கோடியில் பாரதிபுத்தகாலய நிர்வாகி திரு நாகராஜன் அவர்கள். 
   கடந்த 04-02-2016 அன்று, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழாவில் எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்நூலுக்கு விருது வழங்கப்பட்டதை ஒட்டி, விழா நிகழ்வுகளோடு, புத்தக விழாவில் நான் வாங்கி வந்த புத்தகங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
   திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினர் கடந்த 24ஆண்டுகளாகப் பல்வேறு தலைப்புகளில் நல்ல நூல்களை, நல்லறிஞர்களைக் கொண்டு தேர்வு செய்து, ஒவ்வொரு நூலாசிரியருக்கும் ரூ.5,000 தொகையுடன் விருது பெறுவோரை வரவழைத்து, நூல்பற்றிப் பாராட்டி, விருதுகளை திருப்பூர் புத்தக விழாவில் மக்கள் மத்தியில் வழங்குவது பாராட்டுக்குரியது.
    நூற்றுக்கு மேற்பட்ட கடைகள், ஆயிரக்கணக்கில் பார்வையாளர், லட்சக்கணக்கில் நூல்கள், கோடிக்கணக்கில் விற்பனை!
அவர்கள் தந்த பரிசுத்தொகைக்கு-மேலேயே- புத்தக விழாவில் சுற்றிவந்து, நான் வாங்கி வந்த நூல்கள் பட்டியல் இதோ -

உச்சநீதி மன்றத்தின் அதிர்ச்சித் தீர்ப்பு - கெயில் எரிவாயுக் குழாய் பிரச்சினை என்ன?



உச்சநீதி மன்றமே ஏமாற்றினால்...?
இராமாயணத்தில் ஒரு கதை சொல்வார்கள்-

ஒருமுறை, ஓடையில் குளிக்கச் சென்ற ராமன், தனது வில்லை ஓடைக்கரையில் குத்தி நிறுத்திவிட்டுக் குளிக்கப் போனானாம். குளித்து முடித்து வந்து பார்த்தால், வில்லைக் குத்தியிருந்த மண்ணில் ஒரு தேவை குத்துப் பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததாம். பதறிப் போன ராமன், “அடப் பாவித் தேரையே! இப்படிக் குத்துப் பட்டுக் கிடக்கிறாயே! குத்தும்போதே சொல்லியிருக்கக் கூடாதா?“ என்று வருத்தத்தோடு தேரையிடம் கேட்டானாம். அதற்குத் தேரை சொன்னதாம்? “வேறு யாராவது குத்தியிருந்தால் ராமா! ராமா!ன்னு உன்னை அழைத்து முறையிட்டிருப்பேன், நீயே குத்தும்போது யாரிடம் போய் நான் முறையிடுவேன் ராமா?என்று அழுததாம்.

காதலர் தின முன்னோட்டக் கவிதை

கன்னப் பழத்தட்டு
தன்னில் இதழ்பட்டுக்
     கன்னி தனைச்சேருமுன் – அவள்
கண்ணில் பளிச்சிட்ட
     மின்னல் வெளிச்சத்தில்
          எண்ணம் இருட்டானதே! – ஒளி
எண்ணம் இருட்டான
     பின்னும் குருட்டுள்ளம்
          இன்னும் எதைத்தேடுதோ?! – களி
மண்ணில் கடைப்பட்ட
     மந்தச் சிறுநெஞ்சும்
          சந்தக் கவிபாடுதோ!?
---------------------------------------
20வயதில் நான் எழுதி,(அப்போது ஏப்.14 தெரியாதுங்கோ!)
அப்போது புதுதில்லியிலிருந்து வெளிவந்த
சாலை இளந்திரையன் அவர்களின் “அறிவியக்கம்“ 
மாதஇதழில் ஓராண்டுத் தொடராக வந்த,
“ஒரு காதல் கடிதம்“ படிக்கச் சொடுக்குக -(4X25=100)

விடுபட்ட காதல் கவிதைகள் (1)

அவசரப்பட்டு என் இலக்கியத் தங்கையரோ, மகள்களோ என்னைத் திட்டிவிட வேண்டாம், “60வயதிலும் காதல்வரும்“ என்று நான் சமாதானமெல்லாம் சொல்லப்போவதில்லை, 
இவை எனது 20 வயதில் 1976இல் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்தபோது எழுதி பின்னர் எனது “புதிய மரபுகள்“தொகுப்பு 1993இல் முதல்பதிப்பு வெளிவந்தபோது, “வேண்டாம்“ என்று விட்ட கவிதைகள். 
2014இல் இரண்டாம் பதிப்பு வந்தபோதும் சேர்க்கவில்லை. இப்போது “கவிதையின் கதை“ நூலுக்காகப் புத்தகத் தேடலின்போது பார்த்து, “என் பழைய பனை ஓலை“களைப் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டதால் அதனைப் பகிர்ந்துகொள்கிறேன்... புரிந்துகொள்வீர்கள் எனும் நம்பிக்கையில். 

இவை ஒவ்வொன்றாக கொஞ்ச(ம்) வரும்.... (1)

நெஞ்சிலே நிறைந்த வஞ்சி
நேரிலே விரைந்து வா என்று
எஞ்சிலா நிறைந்த காத லாலே- எனைக்
கெஞ்சினாள், கடத்துவதோ நாளே?

கொஞ்சநாள் பிரிந்ததால் பின்
கொஞ்சவே நினைந்தென் உள்ளம்
பஞ்சிலே நெருப்பெனக்க ரிந்து – பிரிவு
அஞ்சியே உதிர்த்ததிந்த சிந்து

ஊரெலாம் உறங்கஓசை
ஒன்றிலா தடங்க எண்ணப்
போரெலாம் அடங்கி உள்ளம் தூங்க –கனாத்
தேரிலே நெருங்கினள் நான் ஏங்க!

         (வேறு)

மாலைமணி ஐந்தடிக்க
மங்கையவள் என்மனத்தில்
சோலைக்குயி லாகவந்து பாட – மனச்
சோர்வனைத்தும் துள்ளியெங்கோ ஓட

கூடவந்த மங்கையவள்
கூறவந்த கண்ணசைவில்
பாடலொன்று பைந்தமிழில் பொங்கும் – மனப்
பங்கயத்தில் இன்பமதுப் பொங்கும்

அற்றைவரை நெஞ்சகத்தை
அற்றிடச்செய் தாட்டியெனை
குற்றுயிராய் ஆக்கியதோ ஏக்கம் – அவள்
கொஞ்சுமுகம் கண்டவுடன் ஊக்கம்!

---------------------------------- 
படத்திற்கு நன்றி - கூகுளார்.
---------------------------------- 

கவிதை என்பது யாது? - முன்னுரை(2)


கவிதை என்பது யாது?
கவிதைக்கு இலக்கணம் 
தேவைதானா?.

இந்தக் கேள்விகள் 
பள்ளிப் பருவத்திலிருந்தே என்னைக் குடைந்ததில் 
இந்த நூல் கருக்கொண்டது.

வெங்கட் அவர்களுக்கு “வீதி“ யில் வரவேற்புப் பூங்கொத்து!

திருமிகு வெங்கட் அவர்களுக்கு
“வீதி” நண்பர்கள் சார்பாக
பூங்கொத்து தந்து வரவேற்கிறார்
கவிஞர் மீரா.செல்வக்குமார்.
அருகில் நா.முத்துநிலவன், கூட்டத் தலைவர் குருநாதசுந்தரம்,
கூட்ட அமைப்பாளர்கள் கவிஞர் கீதா, கவிஞர் வைகறை.
வீதிகலை-இலக்கியக் களம் தான் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கத்தின் தாய் அமைப்பு என்று சொல்லலாம். 
கலை-இலக்கியமாய் இணைந்தவர்கள் பின்னர் கணினியோடு கொண்ட காதலில் பிறந்ததே கணினித் தமிழ்ச்சங்கம்.
இதன் 23ஆவது சிறப்புக் கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட முன்னோடி வலைப்பதிவர்,

சில தொலைக்காட்சியில் சில நல்ல நிகழ்ச்சிகள்!


பசங்களா! நான் உங்கள் ரசிகன் டா!
  பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவர்தான் நான் உட்பட தமிழ்நாட்டில் பலரும் செல்பேசியில் “ரிங்டோனாக“ வைத்திருக்கும் – “தமிழுக்கும் அமுதென்று பேர்“ எனும் பாரதிதாசன் பாடலை இசைக்கருவிகள் எதுவும் இல்லாமலே சென்னைப் பல்கலை மாணவர்களை அற்புதமாகப் பாடவைத்த திரை இசைக்கலைஞர்!  
   “ஒருவார்த்தை ஒருலட்சம்எனும் வார்த்தை விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை வழக்கம் போல் சுவையாக மட்டுமின்றி நல்ல தமிழில் அழகாக வழங்குகிறார். தமிழ்நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 36 அணிகள் தங்களது திறமையைக் காட்டி வருகின்றனர். 8 முதல் 11வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு அணிக்கு இருவராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதற்காக, சிறந்த பள்ளிகளிலிருந்து சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 12 அணிகள் மொத்தம் ஐந்து கட்டப் போட்டிகள் சுவாரசியமாக நடைபெற்று இறுதிக்கட்டப் போட்டி நடக்கும்.

வலைப்பதிவர் வெங்கட் அவர்களே! வருக!வருக!


2009முதல் எழுதிவரும்
மூத்த தமிழ் வலைப்பதிவர் மட்டுமல்ல,
போகிற இடங்களைப் பற்றியெல்லாம்
சுவாரசியமாக எழுதும்
முன்னணித் தமிழ்ப்பதிவரும்கூட!
நீண்ட நாள்களாகத் தொடர்ந்து
தமிழ்மணத்தின் முன்னணிப் பதிவர்களில்
முதல் பத்துக்குள் இருப்பவர்!
புதுதில்லியில் பணியில் இருந்தாலும்
நமது அன்னைத் தமிழை மறவாமல் தொடர்ந்து எழுதுபவர்
திருமிகு வெங்கட் நாகராஜ் அவர்கள்
புதுக்கோட்டைக்கு வருகிறார்!
நமது கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களை
சந்திக்க ஆவலுடன் வருகிறார்!
புதுக்கோட்டை நண்பர்கள் மட்டுமின்றி,
தஞ்சை, திருச்சி முதலான அருகிலுள்ள 
பிறமாவட்ட  நண்பர்களையும் வருக வருக என
அன்புடன் அழைக்கிறோம்!
நண்பரின் துணைவியாரும்
தமிழ்வலைப்பதிவர் என்றே அறிகிறோம்!
எனவே,
வலைத் தம்பதியினரை
புதுக்கோட்டை வலைநண்பர்கள் குடும்பத்தினரின் சார்பாக
வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்!