பாரதிக்கு இலக்கணம் தெரியாதா?! - தினமணியில் வைரமுத்து !

பாரதி பாரதிதாசனை இப்படியா ஒப்பிடுவது?

பாரதியைப் பெரிதும் விரும்புவோர் பாரதிதாசனைத் தாழ்த்துவதும், பாரதிதாசனைப் பெரிதும் விரும்புவோர் பாரதியைத் தாழ்த்துவதுமான போக்கு, தமிழ்நாட்டில் வெகுநாளாகவே நடக்கிறது.

இருபெரும் ஆளுமைகளான இருவரையும் ஒப்பிட்டு சுயதிருப்தி கொள்ளும் இந்த வேண்டாத வேலையைப் பலரும் பலகாலம் செய்து வந்தாலும் இன்றைய (29-04-2015) தினமணியில் –பாரதிதாசனின் பிறந்தநாளில்- வைரமுத்து செய்திருப்பது பெரிய தவறு!

எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்

எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்


எழுதுவது முக்கியம்தான். எழுதும் படைப்புகள், முடிந்தவரை எல்லாருடைய பார்வையிலும் படும்படிச் செய்வதும் முக்கியமல்லவா? அதற்கு, கணினி வலைப்பக்கமோ, அச்சு ஊடகங்களோ, காட்சி ஊடகங்களோ, மேடைப் பேச்சோ, வெளியிடும் புத்தகமோ, வாய்ப்புக் கிடைக்கும் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் அல்லவா?

நான் இப்படித்தான் செய்கிறேன்.

வலையில் எழுதுவது, முடியுமெனில், அதற்குமுன்னோ பின்னோ தினசரி-வார-மாத இதழ்களில் அவை வெளிவருமாறு –நேரமறிந்து- அனுப்புவது, அழைக்கும் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவது, அதுபற்றிய செய்திகளை வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்வது, பின்னர் அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடுவது.

வலையில் எழுதுவோர் இன்னும் பரவலாக அறியப்பட, படிக்கவும் படைக்கவும், இணையவழி அனுப்பவும் வேண்டிய சில முக்கியமான தமிழ் இணைய இதழ்கள் பற்றிய அறிமுகம் இது

தொல்காப்பியருக்கு நோபல் பரிசு!

தொல்காப்பியர் பெற்றிருக்க வேண்டிய நோபல் பரிசு!
(எனக்குப் பிடித்த கவிதைகள் 5 / 100)


என்னது? 
தொல்காப்பியருக்கு நோபல் பரிசா? 
அது எப்படி சாத்தியம்? 
2500 ஆண்டுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் காலத்தில் 
ஏதய்யா நோபல் பரிசு? அப்படீங்கறீங்களா?

ஆமா.. அதனாலதான் அவருக்கு நோபல்பரிசு கிடைக்கல ங்கிறேன்!

படம்பார்த்து ஏதாவது சொல்லுங்கள்

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு!  
- மிஞ்சும்
அஞ்சும்கூட இருக்குமின்னா 
அதுவும்கூட   டவுட்டு!
--என்று எழுதியவர்--
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை 
கல்யாணசுந்தரம்!
(1)

(2)

புதுயுகம் டி.வி.யில் ஏன் இந்த அசிங்கம்?

புதுயுகம்  டி.வி.யில்
ஏன் இந்த  அசிங்கம்?
(21-04-2015 மாலை 5.30மணியளவில்
புதுயுகம் டி.வி.யில் நடந்த நிகழ்ச்சி)
பெயரோ புதுயுகம்! நிகழ்ச்சியோ குழந்தைகளுக்கானது! ஆனால் “குட்டீஸ் கொண்டாட்டம்“ எனும் இந்த நிகழ்ச்சியில் நடப்பதோ அரதப்பழசான அசிங்க ஆட்டம்! 
ஏன் இந்தக் கொடுமை?

விளக்கை விசாரிக்கும் இருட்டுகள்!

விளக்கை விசாரிக்கும் இருட்டுகள்!

தமிழ்நாடு முழுவதும் 3லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நேற்று நடந்திருக்கிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடந்தில்லை. மாவட்டந்தோறும் அலையலையாகப் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கில் பங்கேற்பு.

எங்கள் பட்டிமன்ற ஒளிப்பதிவு நன்றி-யூ-ட்யூப்


கடந்த 14-04-2015 அன்று 
காலை 9.00-10.30மணிக்கு 
கலைஞர் தொலைக்காட்சி 
ஒளிபரப்பிய எங்கள் பட்டிமன்றத்தைக் காண 
அனைவரையும் 
அன்புடன் அழைக்கிறேன்.

கவிஞர் வைரமுத்துவின் சிங்கைப் பேச்சு! (ஒளிப்பதிவு)


சிங்கப்பூரில் செயல்படும் பட்டுக்கோட்டையார் இலக்கியப் பேரவை நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து அவர்கள் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை மிகவும் ரசித்தேன். 

பார்க்கச் சொடுக்குக - 
http://www.pattukkottaiyar.com/site/?p=985  

பட்டுக்கோட்டையாரின் முதல்திரைப்பாடல் பதிவு (பாசவலை) பற்றியும், வைரமுத்துவின் முதல்பாடல்பதிவு (தண்ணீர் தண்ணீர்)பற்றியும் பல நல்ல செய்திகளுடன் கவிஞரின் பேச்சு, 72நிமிட ஒளிப்பதிவு இது. 

கவிஞர் வைரமுத்து சென்றுவந்த பட்டுக்கோட்டையார் நிகழ்வுக்கு அடுத்த ஆண்டு, நாங்கள் போயிருந்தோம்.. 
நமக்குத்தான் இதுபோலும் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும் ஞானம் கிடையாதே!அவர்கள் வைத்திருந்தால்தான் உண்டு!
சரி.. வைரமுத்துவின் பேச்சைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
அதுமட்டுமல்ல, 
பட்டுக்கோட்டையார் பற்றிய அதிகாரபூர்வ இணையதளத்தின் இணைப்பு இது.
மங்காப் புகழ்பெற்ற அந்த மக்கள் கவிஞரின் மகன் நடத்துகிறார்... பாருங்கள்...
பட்டுக்கோட்டையார் புகழ் ஓங்குக!
------------------------------------------------------ 

பட்டுக்கோட்டைக்கு ஒரு எளிய கவிதைப் பொன்னாடை!

பட்டுக்கோட்டைக்கு 
ஒரு எளிய 
கவிதைப் பொன்னாடை!
எழுதியவர் 
கவிஞர் தங்கம் மூர்த்தி
அதுவரை
திரைப்படப் பாடல்கள் அணிந்திருந்த
ஆடம்பர ஆபரணங்களை அகற்றினான்.
பகட்டில்லாத
பருத்திப் புடவையை
அணிவித்து அழகுபார்த்தான்

திரையுலகில் எல்லோரும்
அவரவர் உயர்வை நினைத்தே 
எழுதியபோது
இவன்மட்டுமே
வியர்வை நனைத்து எழுதினான்.

“இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை“ எழுதியவர் யார்? எனக்குப் பிடித்த கவிதைகள் – 4/100

“இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை“ எழுதியவர் யார்? எனக்குப் பிடித்த கவிதைகள் 4/100

எழுதியவர் பெயர் தெரியாமலே, பிரபலமாக விளங்கும் கவிதைகள் தமிழில் பலவுண்டு!