சங்கரின் “ஐ“ காயம்பட்ட திருநங்கையின் சத்திய ஆவேசம்!



இயக்குநர் சங்கர் இயக்கி வெளிவந்துள்ள படம் “ஐ”
விக்ரமின் நடிப்பு, இசை பிரம்மாண்டம் எல்லாம் சரி.. ஆனால், கதையில் வில்லன்களில் ஒருவராகவும் அலங்கார நிபுணராகவும் வரும் பிரபல ஆடை அலங்கார நிபுணர் ஓஜாய் ரஜினி எனும் திருநங்கையரைப் படத்திலும் அவ்வாறே ஆடைஅலங்கார நிபுணராக மட்டுமின்றி திருநங்கையாகவும் காட்டி, காமவெறி பிடித்தவராகவும், தனது இச்சைக்கு இணங்காத கதாநாயகனைப் பழிவாங்குபவராகவும் காட்டிய இயக்குநர் சங்கரைக் கிழிகிழியென்று கிழித்துத் தொங்கவிடுகிறார் - திருநங்கை “லிவிங் ஸ்மைல்“ வித்யா. இவர் மிகச்சிறந்த நிகழ்த்துகலைக் கலைஞர் மட்டுமல்ல.. எழுத்தாளரும் கூட.. 
இவரைத் தெரியாதவர்கள் இந்த இவரது குமுறலின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.. 
இது சாதாரணக் கட்டுரையல்ல
கிண்டலும் கேலியுமாக
உண்மையை உரத்து முழங்கும் 
சத்திய ஆவேசம்! -
படியுங்கள் தெரியும்... 

இப்படி இருக்கணும் புத்தாண்டு வாழ்த்து

(முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்)
வாழ்த்துவதில் கூட இத்தனை பொருள் இருக்க முடியுமா என்று என்னை வியந்து மகிழ்ந்து சிந்திக்க வைத்த வாழ்த்து ஒன்றை நம் வலைப்பக்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
ஆண்டுதோறும் புத்தாண்டின்போது -நல்ல மனசோடுதான் என்றாலும்- வாழ்த்துவதற்கு ஒரு வரைமுறை இல்லாமல் போய்விட்டது.
வாழ்த்துவோரும் வாழ்த்தப்படுவோரும் அதன்படி வாழ்ந்துவிடுவதும் இல்லை என்று தெரிந்துதான் வாழ்த்துகள் எல்லாம் வாரி வழங்கப்படுகின்றன. எனினும் அன்பைத் தெரிவிக்கும் ஒரு வழியாகவே அனைவருமே வாழ்த்துகிறோம், வாழ்த்தை ஏற்கிறோம்.
ஆனால் –
வாழ்த்துவதில் கூட இத்தனை பொருள் இருக்க முடியுமா என்று என்னை வியக்கவும் மகிழவும் வைத்த வாழ்த்து ஒன்றை நம் வலைப்பக்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் படைப்பு வெளிவந்த இதழ்- “காக்கைச் சிறகினிலே“ (2015 சனவரி)
இணைப்புக்குச் சென்று படித்துவிட்டு 
அதன்பின் மேலே படியுங்கள்
http://nadainamathu.blogspot.com/

என் மாணவர், தன் ஆசிரியரின் நூலைப்பற்றி..

என் மாணவர், தன் ஆசிரியரின் நூலைப்பற்றி..!
KRISHNA VARATHARAJAN
Chairman-IDEAPLUS HR & Business solution

இன்று, நான் மிகுந்த நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சி அடைந்த தருணத்தை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்-
நான் மிக பாக்கியம் செய்தவன்தான் –
“என்ஆசிரியர் எழுதிய நூல்“என்று, “மாணவரே தன் ஆசிரியரின் நூலை அறிமுகம் செய்யும்  நல்ல வாய்ப்பு“ எத்தனை ஆசிரியர்க்குக் கிடைக்கும் என்று யோசிக்கும் பொழுது, நெகிழ்ந்து போகிறேன்.
என்னை விடவும் சிறந்த ஆசிரியர்களை நான் அறிவேன். என்னை விடவும் சிறந்த அறிஞர் பலரையும் நான் அறிவேன். எனினும் அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்குக் காரணம் இரண்டு என்று நினைக்கிறேன்.
ஒன்று – சிறந்த ஆசிரியர் பலரும் தனது சிறந்த அனுபவங்களை உலகறியப் பகிர்நதுகொள்ளாமல் போய்விடுகிறார்கள்.
இரண்டு – பகிர்ந்துகொண்டாலும், அதை இன்றைய ஊடகமான இணைய உலகில் தொடராமல் போய்விடுகிறார்கள்.
எனக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ந்து, இனிவரும் கல்வியுலகம் இன்னும் சிறந்த ஆசிரியர்-மாணவர் உறவால் சிறந்து, நல்ல கல்வியால் ஒரு நல்ல சமூகம் உருவாக நானும் ஒரு துரும்பாக இருப்பதறிந்து மகிழ்கிறேன் – இதோ அந்த என் மாணவரின் எழுத்து – 
நன்றி – 
என் இளைய நண்பன் கிருஷ்ண.வரதராஜன் – அனு தம்பதியினர்.
மிகப்பெரிய அளவில் மாணவர்களுக்கான “ஜாலியாகப் படிக்கலாம், ஈஸியாக ஜெயிக்கலாம்எனும் வகுப்புகளை (மாணவர் ஒருவருக்கு சுமார் 500ரூ கட்டணம் வைத்து, ஆயிரக்கணக்கிலான மாணவர்களை ஓரிடத்தில் வரவைத்து) தமிழகத்தின் பெருநகரங்களில் நூற்றுக்கு மேலான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும், இப்போதும் சென்னையிலிருந்து நடத்திவரும் கிருஷ்ண.வரதராஜன் - அனு தம்பதியினர்

இணைப்புக்குச் சென்று படிக்க –
“ஆசிரியர்களுக்கு ஆசிரியர்“
http://krishnavaratharjan.blogspot.in/
இல்லந்தோறும் பள்ளிக்கூடம்  என்ற கனவை 
மாணவர்களுக்கு கற்றுத்தருபவர்
--------------------------------------------------------------- 

முப்பெருநாள் வணக்கமும் வாழ்த்தும்.

வலை நட்பு உள்ளங்களுக்கும் 
அவர்தம் இனிய இல்லங்களுக்கும் 
எனது மகிழ்வைப் பகிரும் 
தமிழர் திருநாள் 
பொங்கல் நல்வாழ்த்துகள்
வணக்கங்கள்


வள்ளுவர் நாள் வாழ்த்துகள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

------------
தமிழ்ப்புத்தாண்டு பற்றி அறிய விரும்புவோர்க்கு இரண்டு செய்திகள்  

    தையே முதற்றிங்கள்;  தைம்முதலே ஆண்டு முதல்
                பத்தன்று;  நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர்வாழ்வில்
                புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கல்  நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம்   காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழர்க்கு

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு - பாரதிதாசன்
---------------------

புதுக்கோட்டைக்குப் புகழ்சேர்த்துவரும் 
பாவலர் பொன்.கருப்பையா 
அவர்கள் எழுதியுள்ள 
பின்வரும் பதிவைப் படிக்க அழைக்கிறேன்
“திருவள்ளுவர் ஆண்டும் 
தமிழ்ப் புத்தாண்டும்“

------------------------------------------------------------ 
படங்களுக்கு நன்றி 
எழுத்து.காம்
தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கம்
மற்றும் நம் கூகுள் தேடுபொறி
---------------------------------------------

நான்கு ஆண்டு நானூறாவது பதிவு பார்க்க அழைக்கிறேன்

இந்தப் பதிவு -
நமது வலைப்பக்கத்தின் 
நானூறாவது பதிவு!
நாலாண்டுகள் கடந்துவிட்டன...

இது ஒன்றும் அகநானூறோ, 
புறநானூறோ இல்ல..
வெறும் நானூறுதான்!

பிப்ரவரி-2011இல் வலைப்பக்கம் தொடங்கியது...
“நான் வளர்கிறேனே மம்மி” னு..
காம்ப்ளான் குழந்தையைப் போலக் குதிப்பதா?
“கழுதை வயசு ஆகுதே தவிர.. 
உருப்படியா ஏதாவது செஞ்சியா?” என்று அங்கலாய்ப்பதா?
நான்வாழ்ந்த காலத்தில் நாட்டுக்குச் செய்ததென்ன?
ஏன்வாழ்ந்தாய் என்றே, எனைக்கேட்டு – நான்காண்டு
நாளும் கழிந்ததன்றி நன்மையென்ன? நாட்காட்டித்
தாளும் கிழிந்தது தான்!

நீங்கதான் சொல்லணும்..
நல்லதா நாலுவார்த்தை 
நல்லா உறைக்கிறமாதிரி  சொல்லி 
வாழ்த்துங்க பெரியோர்களே!
--------------------------------- 
கடந்த 01-01-2015 அன்று 
கலைஞர் தொலைக்காட்சி 
ஒளிபரப்பிய பட்டிமன்றம் 
யூ-ட்யூப் இணைப்பு 
தங்கை “தேன்மதுரத் தமிழ்” கிரேஸ் 
அனுப்பியிருந்தார். நன்றிம்மா..

இதோ அந்த இணைப்பு -
(ஏற்கெனவே பார்க்காமல்
தப்பித்தவர்கள்,
இதைப் பார்த்துவிட்டும் திட்டலாம்)

http://youtu.be/vBm4ABOlfVI

------------------------------------------------------------------ 

நம் வலைக் குடும்பத்தினர் அனைவர்க்கும்,
பொங்கல் தமிழர் திருநாள்,
திருவள்ளுவர் திருநாள்,
தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள்
மற்றும் நம்ம மாட்டுப்பொங்கல் திருநாள்(!?)
வாழ்த்துகளைத் தெரிவித்து வணங்குகிறேன்.

----------------------------------------------------------- 
வண்ணத் தலைப்புக்கு நன்றி - 
என் விகடன் .காம்-
http://en.vikatan.com/article.php?aid=26135
-----------------------------------------------------------

சென்னை புத்தகக் காட்சியில் சந்திப்போம்

13-01-2015 செவ்வாய் மாலை
சென்னை 
புத்தகக் காட்சி




புலவர் இராமாநுசம்





தி.ந.முரளிதரன்,
(அய்யா என்னய்யா... இப்படி? உங்க படம் வலையில் சிக்கலையே?)




கவியாழி கண்ணதாசன்,






மதுமதி




“தில்லையக”த்திலிருந்து
சகோதரி 
கீதா  வருவார் என 
திரு துளசிதரன்
அவர்கள் தெரிவித்தார்கள்


“எண்ணப்பறவை”
கவிஞரும்
பேச்சாளருமான  
புதுகை மகா.சுந்தர்

இவர்களுடன்... 



நானும் 


மற்றும்...
வரக்கூடிய
வலைநண்பர்களும் சந்திப்போம்!
“பெண்கள் வரக்கூடாதா” என்று 
சண்டைக்கு வந்த தங்கை

தென்றல் சசிகலா,

நானும் வருகிறேன் என்று சொன்ன
சகோதரி “வேலுநாச்சியார்” மு.கீதா

தற்போது அமெரிக்காவில் இருக்கும் “தேன்மதுரத் தமிழ்” தங்கை கிரேஸ்
அவர்களின் தந்தையார் 
திருமிகு
வின்செண்ட் அவர்களுடன், 
எதிர்பாராமல் வந்து,
இன்ப அதிர்ச்சி தரவிருக்கும்...
வலை நண்பர் அனைவரையும் அன்புடன்
வரவேற்கிறோம்
பிரபல எழுத்தாளர்களும் எனது நண்பர்களுமான  பிரபஞ்சன்,அருணன், ச.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, சுப.வீரபாண்டியன், சு.வெங்கடேசன், கவிஞர் அமிர்தம் சூர்யா, எஸ.வி.வேணுகோபால், அ.வெண்ணிலா, மு.முருகேஷ்,
போன்றோரையும் அழைக்க எண்ணம். பார்க்கலாம்.. நாளை யாரெல்லாம் சிக்குகிறார்கள் என்று...
13-01-2015 மாலை 
5மணிமுதல் 7மணிவரை
அன்னம் பதிப்பகம் 
ஸ்டால் எண்-636
மற்றவை நேரில்...

வீரத் துறவி விவேகானந்தர்!

வீரத் துறவி சுவாமி விவேகானந்தர்!
புதுக்கோட்டை-ஜனவரி-11.
கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவரிடையில் இந்திய அரசின் நேரு யுவக்கேந்திரா சார்பில் நடந்த சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், “மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் வேறுபாடு கருதக் கூடாது எனும் பொருளில்தான், சிக்காக்கோவில் நடந்த உலக சமயமாநாட்டில், “சகோதரர்களே சகோதரிகளே!“ என்று அழைத்து உலகத்தையே உறவு கொண்டாடினார் சுவாமி விவேகானந்தர்“ என்றார்
விழாவிற்குத வெங்கடேஸ்வரா கல்விக் குழுத்தின் தலைவரும் கவிஞருமான ஆர்.எம்.வீ. கதிரேசன் தலைமையேற்று, விவேகானந்தருக்குக் கவிதாஞ்சலி பாடினார். தொடர்ந்து, சாலை விபத்துத் தடுப்பு மற்றும் மீட்புப் பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி கே.மோகன்ராஜ், வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரித் தாளாளர் பி.கருப்பையா, பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.  விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப்போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ-மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி, புதுக்கோட்டைக் கவிஞர் நா.முத்துநிலவன், சிறப்புரையாற்றினார்.

நம்ப முடியாத உண்மைகள்...!

நம்ப முடியாத உண்மைகள்...!
வீட்டில் எதையாவது தேடப்போய், தேடிய பொருள் கிடைக்காத எரிச்சலில் இருக்கும்போது, ஏற்கெனவே காணாமல் போன (?) பொருள் கிடைத்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு நிறைய உண்டுப்பா...!
“இந்தப் புத்தகக் குவியலுக்குள் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் ஒருவேளை, காணாமல் போன இந்தோனேசிய விமானம் கூட ஒருநாள் கிடைக்கப் போகுது பாருங்க“ என்று என் துணைவியார் ஒரு முறை கிண்டல் செய்திருக்கிறார். அந்த லட்சணத்தில் புத்தகம் நிறைந்துகிடக்கும் (இறைந்துகிடக்கும்?) வீடு நம்முடையதாக்கும்...

சரி..சரி.. இந்தக் கதை எதற்கு இப்போது?
இணையத்தில் நான் தேடிய செய்தி கிடைக்காத எரிச்சலில் இருந்தபோது இந்த சுவாரசியமான செய்தி கிடைத்து வியக்கவைத்தது..

இதோ அந்த செய்தி -
     
இவரும்-அவரும்!












சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வலைப்பதிவர் மினி சந்திப்பு - ஒரு வேண்டுகோள்

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வர
வாசிப்பு-ருசியுள்ள நம் வலைநண்பர்கள் திட்டமிட்டிருப்பீர்கள்.  
வலை நண்பர்களைச் சந்திக்க 
நானும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்
      திரு தி.ந.முரளிதரன், திரு கவியாழி கண்ணதாசன், திரு மதுமதி மற்றும் சென்னைப் பகுதியின் வலை நட்புவட்டம் திட்டமிட்டால்
 13-01-2015 மாலை 5-7மணிக்கு 
சென்னைப் புத்தகக் கண்காட்சி
அன்னம் பதிப்பகம்
ஸ்டால் எண்-636இல் சந்திக்கலாம் 
மற்றஊர் நண்பர்களும் 
ஒருகல்லில் இரண்டு மாங்காய் 
அடிக்க  வரலாமே 
 அல்லது 
வேறு எங்கு எப்போது சந்திக்கலாம் 
என்று சொன்னால் 
நான் அதற்கும் உடன்படுகிறேன்
(எனக்கு 12,13-01-2015  இரண்டும் வாய்ப்பான நாள்கள்) 
முன்னரே தெரிவிக்க வேண்டுகிறேன்.

எனக்குப் பிடித்த நடிகர் விஜய் எங்கே?

கதாநாயகனாக 22ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் விஜய்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெற்றி', 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.   
1984ல் 'வெற்றி' படம் வந்தது. அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.