தெருப்புகழ்

தெருப்புகழ்

கல்லத் தனை உள்ளத் தவரிடம்
எள்ளத் தனை கஞ்சிக் கெனவெயர்
வெள்ளத் தினில் தள்ளா டியகொடும்  நிலைமாறி,

வெட்டிப் பயி ரிட்டுப் புனலென
சொட்டித் திடு பச்சைச் குருதியை
விட்டுத் தினம் வைத்துப் பயிரிடும்   உழவோனே,

தத்தம் உரி மைக்குப் பயிரினை
வித்திட் டதன் மொத்தப் பலனையும்
ஒத்துக் கொளும் இந்தக் கனவினி  நினைவாக,

ஒட்டும் வயி றிங்கிவ் வுழவனை
எட்டும் பொழு தில்லை எனஒளிர்
பட்டப் பகல் வட்டத் திகிரியென் றெழுவோமே!!


எளியபொருள்

”நடிகர் திரு சூர்யாவும் நானும் கலந்துகொண்ட விழா“ (அல்லது) “கல்லூரி விழாக்களில் சினிமாக்காரர்கள்“ என இரண்டு தலைப்புகள் கொண்ட பதிவு இது...


நான் கல்லூரிகளில் படித்த காலத்தில் பெரும்பாலும் புகழ்பெற்ற அரசியல் தலைவரின் இலக்கியப் பேச்சுக்காகவே கல்லூரி விழாக்களுக்கு அழைப்பார்கள். ஆனால் இப்போது?....  எல்லாம் சினிமாக்காரர்கள் ... இதில் என்போலும் பேச்சாளரையும் சேர்த்து அழைத்து சிக்கல் பண்ணுகிறார்கள்...

நான் படித்த திருவையாற்று அரசர் கலலூரியில் -
எனக்கு முந்திய ஆண்டு மாணவர்களான திரு செந்தலை கவுதமன், திரு.மு.இளமுருகன் முதலான -அன்றைய தமிழியக்கதலைவர்கள், தந்தை பெரியாரை அழைத்திருந்தார்கள்.தேவநேயப் பாவாணர் அய்யாவை அழைத்திருந்தார்கள். பிறகு நெ.து.சு அவர்களை அழைத்திருந்தோம். சினிமாக்காரர்கள் யாரும் எங்கள் கல்லூரிக்கு வந்ததில்லை....

எங்களைப் போலவே எங்களுக்கு முந்திய-1960களின்-  தலைமுறைக் கல்லூரி மாணவர்களும் திராவிட இயக்கத் தலைவர்களையே கல்லூரிகளுக்கு அழைத்துப் பேசவைத்தார்கள் என்றே அதன் தாக்கம் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் ஆட்சி அரசு மாறியது...

அப்படியானால் --

பாரதீ! என்னை மன்னித்துவிடு!


பண்டைப் புகழும் பாரம்பரியப்
     
   பண்புகள் மிக்கதும் இந்நாடே அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
   
   மண்டை உடைவதும் இந்நாடே!            (1

தடைசெய்யப்பட வேண்டிய கேவலமான விளம்பரம்


தடைசெய்யப்பட வேண்டிய கேவலமான
விளம்பரம்
இந்த விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா...?

''INDIAN MEN WANTED   FOR MY BOAT PARTY''  

இது என்ன இப்படி ஒரு கேவலமான விளம்பரம் என்று
என் மகள்தான் முதலில் கவனித்துச் சொன்னாள்...

AXE  என்னும் வெளிநாட்டு செண்ட்டுக்கான
இந்திய விளம்பரம்தான் இது... 

எனது காதல் கடிதம்… நிறைவுப்பகுதி

எனது காதல் கடிதம்  நிறைவுப்பகுதி

இவ்வாறே வந்த பிற
                         இலக்கியங்கள் கலை வடிவில்
ஒவ்வொன்றாய் நஞ்சமுதை
                         உள்ளத்தில் ஏற்றியதால்                    -76

தாமே அறியாமல்
                        தமிழ்ப் பெண் நான் என அடங்கித்
தேமே என வாழ்ந்தார்
                         தெய்வாம்சம் அடைந்தாராம்!           -77

பத்தினியும் கன்னியும்
                         பரத்தையும் விதவையும்
முத்தமிழில் பெண்ணுக்கே!
                         ஆண்பால்சொல் இதற்கில்லை!      -78

சிந்தித்துப் பார்த்தால்தான்
                         சிங்காரச் சொல் இவற்றுள்
வந்திருக்கும் பெண்ணடிமை
                         வரலாற்றுக் கதை புரியும்!               -79

தம் மனைவி இழந்தவாக்குத்
                        தமிழிலே பெயரில்லை!
கம்மனாட்டி சொல் எல்லாம்
                        பொம்மனாட்டிக்குத் தானே?         -80

சொல்லின் வரலாறு
                        சொல்லும் வரலாற்றில்
வல்லார் அடிமைசெய்த
                        வரலாறும் புலனாகும்!                     -81

சிந்தனைகள் மென்மேலும்
                         சிவந்துவரும் என்தோழீ!
இந்தக் கொடுமைகளை
                         இல்லாமல் நாம் ஒழிப்போம்!          -82


அழகைவிடவும் பெண்ணுக்கு அறிவே தேவை!

இப்போது சொல்கண்ணே!
                         ஏன் உன்னை அழகியாக
இப்பாவ லன் நெஞ்சில்
                         எண்ணாமல், உன்னறிவை                  -83

இன்னுமின்னும் வளர்க்கவே
                         எண்ணுகிறான் புரிகிறதா?
மண்ணில் வளர்ந்துவந்த
                         மனிதப் பெருங்குலத்தில்                    -84

சரிபாதி அடிமைகளாய்
                        சமையலறைக் குள்ளேயே
கரியாகிப் போவதா?
                        கண்ணே! நாம் சிந்திப்போம்!         -85

சுரண்டலை ஒழிப்பதற்கு
                         சூளுரைக்கும் நாம், நமது
உரிமையை உணர்ந்து, பிறர்
                         உரிமைக்கும் மதிப்பளிப்போம்            -86

உழைப்புக்கும் மனித மன
                        உணர்வுக்கும் சரியான
மதிப்பைப் பெறும்வகையில்
                        மக்களை ஓரணியில்                                -87

திரட்டிடத் தோழியரும்
                        தேவை! மிக மிகத் தேவை!
இரட்டைக் குழல் வேட்டாய்
                        எழுவோம்! இணைந்தெழுவோம்!        -88


அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம் வா!

மனித உணர்வுகளை
                        மழுங்கடித்துக் கதைபேசும்
முனிவர்களின் வரிசையிலும்
                        முத்து நிலவனில்லை!                     -89

எல்லாரை யும்போல
                        இல்லறத்தில் இணைந்தின்ப
எல்லையைக் காணுதற்கும்
                        எல்லையிலா ஆசைஉண்டு!                -90

ஆனால் நம் காதல்
                        அடுத்தவர்கள் கேடுகெட்டுப்
போனால் நமக்கென்ன
                        போகம்தான் பெரிதென்னும்                  -91

எண்ணத்தை வளர்த்துவிட
                        இடந்தருமேல் அதைவிட நாம்
பன்றிபோல் வாழலாம் -
                        பன்றிக்கும் கூட்டமுண்டே!                   -92

சமுதாயக் கொடுமைகளை
                        சற்றும் நினைக்காமல்
நமது இன்பம் ஒன்றையே
                        நாடுவது வாழ்க்கையென்றால்       -93

சொத்தோடும் சுகத்தோடும்
                        சுற்றத்தின் வாழ்த்தோடும்
பத்தோடும் பதினொன்றாய்
                        வாழ்வதுதான் வாழ்க்கையென்றால் -94

அந்த வாழ்க்கையைநாம்
                        அமைப்பதிலே அர்த்தமில்லை!
நொந்தோர் நுகத்தடியை
                        நொறுக்குவதே பயன்வாழ்க்கை!    -95

இன்பம் பெறவிழையும்
                        எண்ணம் தலையெடுத்தால்
உன்னைநான் அழைப்பதுபோல்,
                        என்னை நீ அழைக்கலாம்!                     -96

ஆ!அதுநம் பெண்மைக்கு
                        அடக்கமில்லாப் பண்பு என
யாதும்ஓர் சட்டமில்லை!
                        யார்நான்? உன் தோழன் அன்றோ?     -97

இயலும் வகைஉழைத்தே
                        எல்லாத் தேவையிலும்
அயலையும் எண்ணிடுவோம்
                        அனைவருமே சமம்என்போம்!           -98

ஒன்றேநாம் என்றேநாம்
                        தனிஉடமை இனிஉடைய
ஒன்றுபட்ட நம்வாழ்வால்
                        ஒருவரை மற்றொருவர்                    -99

நின்று தூண்டுவோம்!
                        நெஞ்சில் எழுச்சிமிக
உன்றன் இதழ் முத்தம்
                        ஒன்றெனக்குத்  தா! தோழீ !          -100
               

                    ------------------------------------ ( நிறைந்தது ?  )-------------------------------  
படத்துக்கு நன்றி - http://www.bharatmoms.com/