| (கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வந்த, எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...) |
![]() |
| ஓவியத்திற்கு நன்றி நவயானா பதிப்பகம் லோகோ ஓவியர் திரு “சந்ரு“ மற்றும் “ஆழம்“ இதழ் |
முன்னுரை:
நான் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் புலவர் நான்காண்டுப்
படிப்பில் 3ஆம் ஆண்டு படிக்கும்போது எழுதி, அப்போது (1978-79) டெல்லியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையனின “அறிவியக்கம்” திங்களிதழில் ஓராண்டுக் காலம் தொடராக வந்த நெடுங்கவிதை இது.100கண்ணிகள்.
பின்னர் கவிஞர்
மீரா அவர்களின் வெளியீடாக வெளிவந்த எனது“புதிய மரபுகள்” கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது. இத்தொகுப்பு மதுரைக் காமராசர்
பல்கலையின் எம்.ஏ.தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாடநூலாக 1995முதல்
பதினைந்தாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது







