(புதுக்கவிதை)
செம்மொழி மாநாட்டுப் போட்டியில் -பரிசுபெறாத- எனது கவிதைகள்
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
விண்ணப்பம் பற்றி ஒரு விண்ணப்பம்
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள்
முடிந்தவுடனே அடுத்து என்ன என்று யோசிக்கும் இளைஞர் - பெற்றோர்களுக்கு எந்த
மேற்படிப்பாக இருந்தாலும் முதல் அச்சம் தருவது, விண்ணப்பக் கட்டணம்தான். அதிலும், இந்தப் படிப்பு - இந்தக் கல்லூரியில் - கிடைக்கிறதோ இல்லையோ
எனும் அச்சத்தில் நடுவாந்தரமாக அதாவது, 60 முதல் 80
விழுக்காடு
வரை - மதிப்பெண் பெற்ற - மற்றும் பெறக்கூடிய மாணவர்களின் விண்ணப்பச் செலவே சில
ஆயிரம் ஆவதும் உண்டு.
சில லட்சம் குடும்பங்களின் இந்தச் சில ஆயிரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் சில பல கோடிகள் நமது அப்பாவி இந்தியக் குடிமக்களுக்குத்தான் விரயம். இதுபற்றிக் கவலைப்பட வேண்டிய நேரம் இதுதான்.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
ஒரு சிறுகதை - ஓர் ஆய்வு
![]() |
| சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி |
புதிய புதிய விதைகளோடும் இன்றும் விரிவடைந்து வருகிறது!
1917–20களில் உலக அளவில் நடந்த மிகப் பெரிய நிகழ்ச்சி சோவியத்துப் புரட்சி. இந்திய அளவில் எல்லோரையும் கவனிக்கச் செய்தது. காந்திஜியின் இந்தியவரவு எனில் தமிழக அளவில் - இலக்கியவாதிகள் அனைவரையும் நிமிர்ந்து பார்க்கச் செய்தது – வ.வே.சு. ஐயரின் முதல் தமிழ்ச்சிறுகதைப் படைப்புத்தான். வ.வே.சு. இறந்த பிறகு (1927இல்) வெளிவந்த அவரது எட்டுச் சிறுகதைகள் அடங்கிய “மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்” தொகுதி தான் தமிழின் முதல் சிறுகதைத் தொகுதியாக அறியக் கிடைக்கிறது.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
அம்மா உணவகத்தை “மோட்டல்”களில் தொடங்கலாமே?
அது என்ன “மோட்டல்”?
தனீ நாடா?
இதை யாரும் கேட்க மாட்டார்களா?
காஃபியிலிருந்து, காரச்சட்னி வரை...தனீ ரேட்!
அரைத்தூக்கத்தில் எழுப்புவதிலிருந்து...
அவசரத்துக்கு ஒதுங்குவது வரை... அராஜகம்!
ஓட்டுநர் நடத்துநர்களுக்கு மட்டும்
தனீ அறையில்
ஓசியில் அனைத்தும் சப்ளை...!
இந்த ஓசி-க்காக
அனைத்துப் பயணியரையும்
ஓட்டுநர்-நடத்துநர்கள்,
அந்தத் தீவில்
“அடகு” வைக்கும் கேவலம்?
ஆமா...
அம்மா உணவகத்தில் நல்ல உணவு, நல்லவிதமான பரிமாறுதல் என்கிறார்களே?
அம்மா உணவகக் கிளைகளை
அனைத்து மோட்டல்இடங்களிலும்
ஆரம்பிக்கலாமே?
ஆயிரக்கணக்கான பேருந்துகளில்
தினந்தோறும் சென்று-வரும்
இலட்சக்கணக்கான வாக்காளர் மக்கள்
மன்னிக்கவும் பொதுமக்கள்
அம்மாவை வயிறாரவும் வாயாரவும்
வாழ்த்துவார்கள் அல்லவா?
-சின்னச் சின்னச் சிந்தனைகள்...3
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
குடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்?
இன்று
26-01-2014 குடியரசு நாள்.
ஆமா... நம்ம சுதந்திரநாளுக்கும்,
குடியரசு நாளுக்கும் என்ன வித்தியாசம்?
இன்றைய செய்தித்தாள் ஒன்றின் முதல்பக்கத்தில் அரைப்பக்க விளம்பரம் -மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரம்- ஒன்றில்

“நாடு 65வது சுதந்திரதினத்தை
ஏன் கொண்டாடுகிறது?” என்று கொட்டைஎழுத்தில் வந்திருந்தது பார்த்து
அதிர்ச்சி அடைந்தேன். இந்த என் அதிர்ச்சி
புதிதல்ல... கொடியேற்ற வரும் அரசியல் புள்ளிகள் சிலபேர்
குடியரசுதின
விழா,
சுதந்திரதின விழா
இரண்டிற்கும் வித்தியாசமில்லை,
என்பதுபோலவே பேசியதைப் பலமுறை நான்
கேட்டிருக்கிறேன்.
அதே செய்தித்தாளின் ஐந்தாம்
பக்கத்தில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த
கால்பக்க விளம்பரத்தில் 65ஆவது குடியரசுநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப் பட்டிருந்த்து,
ஆறுதலாக இருந்த்து.
அப்போதுதான்
குடியரசுதினம் – சுதந்திரதினம் இரண்டுக்குமான வித்தியாசத்தை இன்றைய பதிவாக
எழுதினால் என்ன என்று நினைத்தேன். நான் பதிவு எழுதுமுன், அதுபற்றிய தகவல் வேறுஏதும்
இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். அதன்படி வலையில் தட்டியபோது இந்தக் கட்டுரை
கிடைத்தது. நான் எழுத நினைத்த்தைவிடவும் விரிவாக இக்கட்டுரையே இருப்பதால் அதை
அப்படியே தந்திருக்கிறேன். நல்ல தகவல்களை
யாரோ தந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டுரையை அப்படியே தருவதுதான் நியாயம் என்று
தந்திருக்கிறேன். பார்க்க வேண்டுகிறேன்.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
மாநில முதல்மதிப்பெண் வாங்கிய மாணவி கொலைகாரியானாள்!
கல்வி என்ன செய்தது?
முதல்மதிப்பெண் வாங்கணும், நல்ல கல்லூரியில நல்லஉயர்படிப்புப் படிக்கணும் என்று தன் பிள்ளைகளைப் பாடாய்ப்படுத்தும் பெற்றோர்களுக்கு இந்தச் செய்தி ஒரு எச்சரிக்கை...
முதல்மதிப்பெண் வாங்கினால்தான் நல்லவாழ்க்கை வாழ முடியும் என்று மக்களை நம்ப வைத்திருக்கும் கல்வித் துறைக்கு இந்தச் செய்தி ஒரு கன்னத்தில் அறையும் மறுப்பு...
முதல்மதிப்பெண் வாங்கினால் தான் தன் கல்விவணிகம் சிறப்பாக நடக்கும் என்று புரிந்தே பிள்ளைகள் வெறும் மனப்பாடப் பிண்டங்களாக வளர்ந்தால் போதும் என்று ஆலாய்ப் பறக்கும் கல்விநிறுவனத் தலைவர்களுக்கு இந்தச் செய்தி ஒரு சாதாரணம்...
முதல்மதிப்பெண்ணை நோக்கியே தன் பிள்ளைகளை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கு இச்செய்தி ஒர் அதிர்ச்சி...
என்னதான் அந்தச் செய்தி? இதோ நீங்களே படியுங்கள்-

சகோதரி மாமியாரை கொலைசெய்த கல்லூரி மாணவி...
இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா?
செய்தியின் கடைசிவரிகளைப் பாருங்கள்...
http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/01/24/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/article2016945.ece
நன்றி தினமணி
என்ன படித்துவிட்டீர்களா?
இது தொடர்பாக நான் எழுதி நமது பதிவில் இருக்கும் கடிதத்தைப் படிக்க---
இது தொடர்பாக நான் எழுதி நமது பதிவில் இருக்கும் கடிதத்தைப் படிக்க---
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நின்றுகொண்டே இருக்கிறார்களே, ஏன்?
உழைத்து, நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள், நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது பெரும்பாலும் நின்றுகொண்டே இருக்கிறார்களே, ஏன்?
-சின்னச் சின்னச் சிந்தனைகள்...2
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
குமுதம்,விகடன் “படிக்கவும்”, சினிமா “பாக்கவும்” நாம்தான் சொல்லிக் கொடுக்கணும்...
இன்றைய மாணவர்கள் எந்தப் பயிற்றுமொழியில் படிக்கிறார்கள் என்பது முக்கியம்தான். தாய்மொழிவழிக் கல்விதான் தலைசிறந்தது. ஆனால், பயிற்றுமொழி பற்றிய விவாதத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்திற்கும் தருவது முக்கியமில்லையா? ஆனால், பயிற்றுமொழி பற்றி விவாதம் நடக்கும் அளவிற்குக் கூட பாடத்திட்டம் பற்றி நடப்பதில்லையே அது ஏன்? அரசியல் வாதிகள் பேசுவதில்லை, சரி. ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் பேசாவிடில் மற்றவர்களா பேசுவார்கள்!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
லீனாமணிமேகலைக்கு என்ன பிரச்சினை?
![]() |
| திரைப்பட இயக்குநர் லீனாமணிமேகலை |
கவிஞராக அறிமுகமாகி, ஆவணப்படங்கள் எடுத்து, பின்னர் திரைத்துறையில் நுழைந்த
பெண் இயக்குநர் லீனாமணிமேகலை பற்றிய சர்ச்சை வலைதளங்களில் இப்போது வலம் வருகிறது.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
புதியமாதவியின் கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரை
![]() |
| மும்பாய் கவிஞர் புதியமாதவி |
அரசியல் பாடும் குடும்ப விளக்கு !
நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். அவர்களிலும் அதிகமான
பாடல்களை-59-எழுதியவர் ஔவையார்தான் என்பதில்
ஆச்சரியம் இருக்கமுடியாது. ஔவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான் ஆச்சரியமானது மட்டுமல்ல, மகிழ்ச்சியானதும்கூட.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)