“அழமாட்டேன்" என்று அழவைத்த கமல்!

 கமல் விழா –விஜய் தொலைக்காட்சி 10-11-2013 நிகழ்ச்சி
    
                                                          இந்தச் சின்ன விதைதான்

                                           இப்படி ஆலமரமானது-55ஆண்டுகளில்...

இன்று(10-11-2013)  பிற்பகலில் எதார்த்தமாக விஜய் தொலைக்காட்சியை வைக்க கமலின் பாராட்டுவிழா ஓடிக்கொண்டிருந்தது. நிறைவாக வந்து அவரே ஏற்புரையில் சொன்னதுபோல ஒரு மனிதரைப்பற்றிய நிகழ்ச்சியை எவ்வளவு நேரம் பார்க்க முடியும் என்னும சந்தேகத்துடன்தான் நானும் பார்க்க உட்கார்ந்தேன்.
ஆனால், வெங்கடேஷ், மோகன்லால், மம்முட்டி, ரஜினி, இளையராஜா எனத் தென்னகத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் மேடையிலும், சங்கர் உள்ளிட்ட கலையுலக பிரம்மாக்கள் எதிரிலும் இருக்க, கூடியிருந்த தமிழ்ரசிகர்கள் எல்லாம் திகட்டத் திகட்ட கமலைப் பற்றிப் பேசியும் சலிக்கவே இல்லை.
ஏனென்றால் பேசியவர்கள் எல்லாம் கமலைப் புகழ்ந்து பேசவில்லை.
அவரைத் சகோதரர் என்றார் –பொதுநிகழ்ச்சிகளுக்கு வராத- இளையராஜா. 
தம்மைவிட வயதுகுறைந்தவர் என்று தெரிந்தும் “அண்ணா“ என்றார் ரஜினி.
பிரபுதேவா தன் தந்தை சுந்தரம்மாஸ்டருடன் சேர்ந்து கமல் படப்பாடல்களுக்கு நடனமாடி, தனக்குத் தெரிந்த நடனத்தால் நன்றிசொல்லி நெகிழ வைத்தார்.
”இவர்கள் தம் அன்பின் காரணமாகவே என்னைப் புகழ்ந்தார்கள். ரஜினி தன்னைத் தாழ்த்திக்கொண்டு என்னைப் புகழ்ந்தார் எவன் சொல்வான் இப்படி? நான் அழக்கூடாது என்னும் முடிவோடு இங்கேநிற்கிறேன் ஆனால் முடியுமா என்று தெரியவில்லை”
என்று கூறிய கமல்.... 

முதல்பரிசு பெற்ற அ.மாதவையா பாடலும், இரண்டாம்பரிசு பெற்ற பாரதியார் பாடலும்.

நாட்டுப்பற்று பற்றிய பாடல் போட்டி ஒன்றில் மாதவையாவும் பாரதியாரும் போட்டியிட்டனர். அதில் முதலிடம் (ரானடே பரிசு) மாதவையா எழுதிய 51 பத்தி கொண்ட கும்மிப்பாட்டிற்குக் கிடைத்தது.16 இந்தியக்கும்மி என்னும் தலைப்பிட்ட இந்தப் படைப்பு முதலில் பொதுதர்மசத்கீத மஞ்சரியில் 1914 ஜூன் மாதம் வெளியானது. பின்னர் தேசிய கீதங்கள் என்ற தலைப்பில் 1925இல் வந்த தொகுப்பிலும் இடம்பெற்றது. இதில் பரிசு பெற்ற கும்மிப்பாட்டு முதலில் மஞ்சரி தொகுப்பில் வந்தது என்றும் அது ரானடே பரிசுபெற்றது என்ற குறிப்பும் இருந்தது.

நர்சரிப் பூக்கள்

















பஞ்சுகள்-
பாவப் பிஞ்சுகளா இவை?
ஏட்டுப் புத்தக
நெருஞ்சிகளைச் சுமக்கும்
குறிஞ்சிகள்!?!

முதுகில்
புத்தகப் பொதிமூட்டைகள்,
அப்புறம் ஏன்
இந்தக் கவரிமான் குட்டிகள்
கழுதைகள் ஆகாது?

அஜித்தின் “ஆரம்பம்” திரைப்படக் கதை தரும் அதிர்ச்சிகள்!



“இந்தப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே …யாரையும் குறிப்பிடுபவை அல்ல”
என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னமே வெளியாகிவிட்டதால் நிச்சயம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்தப் படத்தின் திரை மொழி, இசை, காட்சிகள் என நுணுக்கமான ஆய்வுகளை பல விமர்சகர்களும் செய்யக் கூடும். அவற்றையெல்லாம் காத்திருந்து பார்ப்போம். இப்போது, கதையில் நகலெடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பேசுவோம்.

இறந்தும் உணர்வூட்டும் இவரைத் தெரியுமா?


உயிரோடு இருந்தவரை, சாதாரண மக்களுக்கு 
இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது இவர் இறந்துவிட்டார்...
இந்தியப் பத்திரிகைகள் எல்லாம் 
இவரைப்பற்றி 
எழுதிக்கொண்டே இருக்கின்றன.

யார் இவர்? 

வீடு கட்டுபவர்கள், 
நல்ல நாளில் வேலைகளைத் துவங்குவர். 
வீட்டின் அறைகளை, வாஸ்து சாஸ்திரப்படி அமைப்பர். 
வீட்டுக்கு வெளியே, திருஷ்டி பூசணிக்காயை போட்டு உடைப்பர்.
இவரும் வீடு கட்டினார்.
எவ்வித சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்காமல், 
வாஸ்து பற்றி கவலைப்படாமல், வீட்டைக் கட்டினார். 
திருஷ்டி பூசணிக்காய் கிடையாது; 
புதுமனை புகுவிழா கிடையாது.
எளிமையாக வாழ்ந்து காட்டியவர். 
எளிமையான முறையில் திருமணம் செய்தவர், 
தன் இரு வாரிசுகளுக்கும், மிக எளிமையாக, 
எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் நடத்தியவர்.

செல்போன் இல்லாத இந்தியத் தலைவர்

அவர் ரொம்ப நல்லவர் !
அவர் ரொம்ப அமைதியானவர் !!
அவர் ரொம்ப ரொம்ப நேர்மையானவர் !!!
அதிர்ந்து கூடப் பேசமாட்டார்னா பாருங்களேன்.?1?
அம்மா சொல்வதைத் தட்டவே மாட்டார் !?1?1?!
இப்படியெல்லாம் சொல்வது 
ஒருவரின் நல்ல பண்பைக் குறிக்குமா...
இல்லை சொல்பவரை, “அட உலகம் தெரியாதவனே“ என்று ஏகடியம் பேசுமா? கொஞ்சம் யோசியுங்க...

அதெல்லாம் கூடப் பரவாயில்லைங்க... நம்புவோம்!
“அவரிடம் செல்போன் கூடக் கிடையாதுன்னா பாருங்களேன்“ –என்று யாரையாவது சொன்னால் இனியும் அவரைச் சந்தேகப் படாமல் இருக்க முடியுமா?

தமிழ் விக்கிப்பீடியா வகுப்பு!

“விக்கிப்பீடியா”வில் எழுதப் பயிற்சி வகுப்பு
தமிழ்க் கணினிக் கருத்தரங்கம்
செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடந்தது


 ச.பிரின்சு என்னாரெசு பெரியார் “தமிழ்விக்கிப்பீடியா” வகுப்பில்
 
    புதுக்கோட்டை-லெனா விலக்கில் உள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரிக் கணினி ஆய்வக அரங்கில், “நண்பா அறக்கட்டளை“ வழங்கிய “விக்கிப்பீடியா“வில் தமிழில் எழுதுவது பற்றிய கணினிக் கருத்தரங்கம் காலை முதல் மாலைவரை ஒருநாள் முழுவதும் நடந்த்து.
      பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
  சென்னைத் திரைப்படத்துறையைச் சேர்ந்த இணை இயக்குநரும், அண்ணா பல்கலைக்கழகக் கணினிப் பேராசிரியருமான பிரின்ஸ் என்னாரெசுப்பெரியார் வகுப்பைக் கலகலப்பாக நடத்திச் சென்றார். முற்பகலில் “ஆங்கிலம் அறிந்திருந்தால் மட்டுமே கணினி கற்கமுடியும் என்பது தவறு...

வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு?



1)  வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு?-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கிறது?






வம்சம்“ பாத்துட்டுத் தூங்கப் போயிட்டா அவங்க வயசானவுங்க. 
“ஆஃபீஸ்“ முடியிற வரைக்கும்     
முழிச்சிருந்து பாத்தா 
வாலிபப் புள்ளைங்க..



(2)  முற்போக்குன்னா என்ன? பிற்போக்குன்னா என்ன?  
      நம்ம பிள்ளைங்க டென்னிஸ் விளையாடுறாங்கல்ல? அதுல,
      ஆட்டத்தைப் பாத்தா முற்போக்கு, ஆடையைப் பாத்தா அது பிற்போக்கு.

(3)  ஆனந்த விகடன்-அமுதசுரபி ஒப்பிடுக
     ஆனந்த விகடன் படிச்சா யூத்து! அமுத சுரபி படிச்சா...மூப்பு..! (நினைப்புல?)

(4)  கடவுள் இல்லன்னு சிலபேர் சொல்றாங்களே இல்லங்கிறத நிருபிக்க முடியுமா?
      நல்லா இருக்கே கத! இந்த குடத்துல தண்ணி இருக்குன்னு சொல்றவங்கதான         நிருபிக்கணும். இல்லங்கிறவங்க குடத்தக் கவுத்துக்காட்டினா போதாதா?

(5)  அரசியல் சேவைக்காகவா? தேவைக்காகவா?
      தேச தேவைக்காக என்று ஆரம்பித்து தேக சேவைக்காகன்னு போயிருச்சே!           ஆனா அது அரசியல் இல்லிங்க... இன்னும் நல்ல அரசியல் வாதிங்க இருக்காங்க.. நீங்க சேவைக்காக்க் கேக்குறீங்களா  தேவைக்கு கேக்குறீங்களா?

      (கேள்வியும் நானே, பதிலும் நானே!-

       சத்தியமா ஆனந்தவிகடனுக்காக எழுதலீங்க... 
       நம்ம வலைப்பக்கத்துக்காகத்தான்...!)

தொடர்ந்து சீரியஸாவே எழுதிக்கிட்டிருந்தா 
நமக்கு வயசாயிட்டதா யாரும்  நெனச்சிறக்கூடாதில்ல.. ?

‘‘படிப்பது எதற்காக? வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” – ‘நீயா-நானா’ கோபிநாத்தின் மிகச்சிறந்த பேச்சு!

“நீயா நானா” கோபிநாத்தை நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
ஆனால், தனது நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்களை வாயைப் பிடுங்கிப் பேசவைக்கும் கோபிநாத், அவரே ஒரு மிகச்சிறந்த பேச்சாளர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

“இரண்டு பக்கமும் பேசுகிறவர்கள் என்ன பேசினாலும், தனக்குத் தேவையான கருத்தை அவர்கள் பேசும்படி அவர்களைக் “கொண்டு செலுத்தும்“ திறமை அவருக்கிருக்கிறதே!“ என்று நான் பலமுறை நினைத்ததுண்டு. அதன் பின்னணியை இந்த அவரது பேச்சைக் கேட்டபிறகுதான் புரிந்து கொண்டேன்....  

மகாகவி பாரதிக்கே இரண்டாம் பரிசு என்றால், முதல் பரிசு பெற்ற கவிதை எது?

முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வலை பார்த்தேன்.  
அவர் நல்ல தகவல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதால் அவர்மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, “தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு“என்னும் படித்த பேராசிரியர் மத்தியில், படிக்கின்ற பேராசிரியர் சிலரும் இருக்கிறார்கள்! அவர்களில் ஒருவர் நம் நண்பர்.

இன்று, தமிழின் முக்கியமான படைப்பாளியான அ.மாதவையா அவர்களின் நினைவுதினம் அவரைப்பற்றி விக்கிபீடியா விலிருந்து எடுத்த செய்திகளை அழகாகத் தொகுத்துத் தந்திருந்தார். அதைப் படித்த நான், பின்வரும் கேள்வியைப் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.
“அ.மாதவையா பற்றி மேலும் ஒருமுக்கியமான தகவல்-1914ஆம்ஆண்டு தூத்துக்குடித் தமிழன்பர்கள் நடத்திய கவிதைப்போட்டியில் -நண்பர்களின் வற்புறுத்தலுக்காக- கலந்துகொண்டு பாரதியார் எழுதிய கவிதைக்கு இரண்டாம் பரிசும் அ.மாதவய்யா எழுதிய கவிதைக்கு முதல்பரிசும் தரப்பட்டதாகத் தமிழ்ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். அந்தப் பாடல்எது என்று தெரியவில்லை. தெரிந்தால் அதுபற்றி எழுத வேண்டுகிறேன்”
அவரும் நேர்மையாகப் பதிலிட்டிருந்தார் -