“வீதி” துவக்க விழா - அழைப்பிதழ்

“வீதி”
கலை-இலக்கிய அமைப்பு 
புதுக்கோட்டை
துவக்க விழா - அழைப்பிதழ்
0000000000000000

வலைப்பக்கப் பதிவு எப்படி இருக்க வேண்டும்?

 வலைப்பக்கம் தொடங்கி சுமார் இரண்டரை ஆண்டு முடிந்த நிலையில், வலைப்பக்க வாசகர்களின் வாசிப்பு ருசியைக் கண்டுபிடிப்பதில் நான் தோல்வியடைந்து விட்டேனோ என்னும் குழப்பம் வருகிறது...

நோட்டா - சின்னம் - இதுதான்

நோட்டா சின்னம் தெரியுமா எனும் கேள்வியைக் கேட்டதும் நமது வாசகர்  பலர் “எஸ்”ஆனது இருக்கட்டும், தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளின் தலைவர்களே “எஸ்“ஆன விவரத்தை ஆனந்தவிகடன் வாரஇதழ் வெளியிட்டிருக்கிறது... 

அதை அப்படியே ஓர் எழுத்தையும் மாற்றாமல் தருகிறேன்.
(நம் தலைவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதால் அவர்களின் பெயருக்கு முன் திருமிகு என்பதை மட்டும் சேர்த்தேன். 

நோட்டா - சின்னம் என்ன தெரியுமா?

முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் அறிமுகமாகும் Mr.“நோட்டா”வின்  சின்னம் 
என்ன தெரியுமா?

“அட.. அவருக்கும் தனிச்சின்னம் இருக்கா?” என்று கேட்டால்...  உங்களின் மனு, போட்டியில் கலந்துகொள்ளாமலே நிராகரிக்கப்பட்டு விடலாம்..
சரி போனா போகுது... இப்பத்தானே இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிச்சிருக்கு என்பதால்... கொஞ்சம் யோசிக்க நேரம் கொடுப்போம்..
ஒரு க்ளு – நோட்டாவுக்கு உரிய சின்னம்
“கூகுள்“ தேடுபொறியில் இன்னும் ஏற்றப்படவில்லை

'இடதுசாரிகள் ஏன் வெல்ல வேண்டும்?' -- மதுக்கூர்இராமலிங்கம் (நக்கீரன்- கட்டுரை)

 (எனது நண்பனின் கட்டுரையை நமது வலைப்பக்க நண்பர்களுக்கு படிக்கத் தருவதில் நான் பெருமையடைகிறேன் – நா.முத்துநிலவன்)
மதுக்கூர் இராமலிங்கம்

தராசுத் தட்டில் வைக்கப்படும் எடைக்கற்கள்தான், எதிர்த்தட்டில் உள்ள பொருளின் மதிப்பை அளவிட உதவுகிறது.

அதுபோல, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இடதுசாரிக் கட்சிகள்தான், ஆளுங்கட்சியின் நிறத்தையும், நிஜத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் உண்மையான மாற்றாக திகழ்கின்றன. 

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் பெரு முதலாளிகளும், கார்ப்பரேட் ஊடகங்களும் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை தடுக்க முயல்கின்றன.

சபாஷ்! சிவ.கார்த்திகேயன்! அப்படிச் சொல்லுங்க! அப்படியே நில்லுங்க!


சிவ.கார்த்தி -நல்ல பையன்..?!
  இன்றைய தினமணி (06-04-2014-ஞாயிறு “கொண்டாட்டம்“ பகுதி) யில் சிவ.கார்த்திகேயன் சொல்லியிருந்தது  ரொம்பப் பிடிச்சிருந்தது!
    “கோடிகள் புழங்கும் திரையுலகில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்“என்ற சிவ.கார்த்தி, நிறைய திரைப்படங்கள் பார்க்கும் கனவோடு சென்னை வந்து இப்படித் தானே ஒரு திரைப்பட நடிகனாவதை எதிர்பார்க்க வில்லை என்றும், “சிலவாய்ப்புகளில் எதையும் எதிர்பார்க் காமல் உழைத்துக் கொண்டே இருந்தேன்.. உழைப்புக்குக் கிடைத்த இடம்தான் இது” என்றார்.

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - படவிமர்சனம்




‘சிம்புதேவன் படமாச்சே  
சிரிப்பாத்தான் இருக்கு’மின்னு,
வம்படியா கிளம்பினமே 
                    வகைதொகையா மாட்டுனமே!
‘பொம்பளைங்க யாரும்வர்ல?’
பொண்டாட்டி என்னத்திட்ட
சிம்புதேவ நான்திட்ட
சிரிப்பாத்தான் இருந்துச்சுங்க!?

சிறுகதைப்போட்டி - அறிவிப்பு


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 
தேனி மாவட்டக்குழுவும்  
போடிமாலன் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 
“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி“
விவரத்திற்கு இணைப்பு ஒட்டியைப் பார்க்கவும், 
நமது வலைப்பக்கச் சிறுகதை எழுத்தாளர்கள் 
கலந்துகொண்டு 
பரிசுகளை வெல்லவும்,
அன்புடன் 
அழைக்கிறேன்.
உங்கள்...
நா.முத்துநிலவன்



இலவசத் திட்டங்கள் யாருக்காக?!

-நா.முத்துநிலவன்-

ஒருவர்க்கு நல்லது செய்ய நெனச்சா தினமும் மீன்பிடிச்சுக் கொடுக்காதே! மீன்பிடிக்கக் கற்றுக்கொடு -   சீனப்பழமொழி 
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், வாக்காளர்களைக் கவர்வதற்காக, இலவசமாக, டிவி, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி,  இதற்கு தடைவிதிக்கும்படி, உச்சநீதி மன்றத்தில், பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதி மன்றம், "தற்போதுள்ள சட்டத்தின்படி,  தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவிப்பது,  லஞ்சம் கொடுப்பதற்கு சமமாகாது'  எனக்கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது... 

தாலாட்டு ஏன் ஒப்பாரியானது?



கண்ணே கனியமுதே! - என
                             காலமெல்லாம் உன்நினைவை
முன்னே வளர்த்தவரே – உன்
                             மூச்சடக்கிப் போட்டாரோ?
என்னே தவறிழைத்தாய் – அட
                             எவர்குடியைநீ கெடுத்தாய்?
முன்னே மனம்கவர்ந்தான் – உன்
                             முன்நடக்க பின்நடந்தாய்!