கைக்குறிச்சி பாரதி கல்லூரியில் கவிதைப் பயிலரங்கம்
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை
மற்றும் அறிவியல் மகளிர்
கல்லூரியில்
தமுஎகச திருக்கோகர்ணம் கிளை ஒருநாள் கவிதைப் பயிலரங்கம் நடத்தியது.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
நான் தொலைக்காட்சியில் பேசுவது தவறா? - வாசகர்கள் கருத்துச் சொல்லுங்கள்
கணையாழி இதழில் வெளிவந்த எனது கட்டுரையை எனது வலையின் முந்திய பதிவாக இட்டிருந்தேன் அது பற்றிய நண்பர்களின் கருத்தில் ஒரு கருத்தை மட்டும் நான் வெளியிடவில்லை.
அவர் பெயர் திரு அருள்மொழி. ஊர் தெரியவில்லை.
“சினிமா நடிகர்களைக் குறைசொல்வது இருக்கட்டும். உங்களைப் போன்ற தமிழ் வாத்தியார்கள் பட்டிமன்றம் என்னும் பெயரில் அடிக்கும் கூத்தை நிறுத்துங்கள். பிறகு சினிமா நடிகர்களைக் குறை சொல்லலாம்” என்று கருத்திட்டிருந்தார்.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
“தீபம்”இலக்கிய இதழில் வெளிவந்த என் கவிதை

கவியுதிர் காலம்
அடே அப்பா!
எத்தனை கவிஞர்கள்
எத்தனை கவிதைகள்!
ஓ!
இந்த
இலையுதிர்காலத்தின்
இறுதியில்தான்
வசந்தம்
வரவிருக்கிறதோ!?!
--நா.முத்துநிலவன்
(நன்றி-
தீபம் இலக்கிய மாத இதழ்
ஆசிரியர்-நா.பார்த்தசாரதி,
டிசம்பர்-1983)
---------------------------------------
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பொறுப்பற்ற சினிமாக்காரர்கள்

மற்ற நாடுகளெல்லாம்
வரைபடத்தில் இருக்கின்றன
தமிழ்நாடு மட்டும்
திரைப்படத்தில் இருக்கிறது
என்று சாடினார்
கவிஞர் நெல்லை ஜெயந்தா
பேராண்மை, சாட்டை, வழக்குஎண் 18/9, அண்மையில் வந்திருக்கும் தங்கமீன்கள் முதலான வெகுசில படங்களின் இயக்குநர்களைத் தவிர மற்ற “மாபெரும் நடிகர்களின்” படங்கள் எல்லாவற்றையும் பார்க்கிற வெளிநாட்டவரும், நம் அடுத்த தலைமுறையும் தற்போது தமிழகத்தில் வந்துகொண்டிருக்கும் மசாலாப் படங்களை மாபெரும் வெற்றிப் படங்களாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நமைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள் என்று யோசிக்கவே வெட்கமாக இருக்கிறது.
ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினராகக் கூடத் தன் பொறுப்பை உணராத விஜயகாந்த்துக் கெல்லாம் “தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் ஆகிவிடலாம்”எனும் அசட்டுத் துணிச்சலைக் கொடுத்தது சினிமாதானே?
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பெண்களைப் பின்னுக்கு இழுக்காதீர்கள்! (“புதுயுகம்” நிகழ்ச்சி நடத்தும் நடிகை சினேகாவுக்கும் சேர்த்து)
புதிதாக
வந்திருக்கும் “புதுயுகம்“ தொலைக்காட்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று
இன்று கிடைத்த விடுமுறை நாளில் அந்த்த் தொலைக் காட்சியிலேயே அதிகமாக விளம்பரம்
செய்யப்படும் “மேளம் கொட்டு தாலி கட்டு” நிகழ்ச்சியை இன்று காலை 9மணி முதல் 10மணிவரை
பார்த்தேன்.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பின்தொடரும் நிஜத்தின் குரல்!!!
இன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் மீன் சந்தைக்குப்
போனேன். கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்த மகள், இறால் கேட்டிருந்தாள்.
விடுதியில் அதெல்லாம் இல்லையாம்.
மீன்கடையில் இருந்த கூட்டத்தை விடவும்
மீனை வெட்டித்தரும் கடைகளில் கூட்டம் அப்பிக்கிடந்தது. அய்யோடா... இன்னிக்கு எவ்ளோ
நேரமாகப் போகுதோ என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். (மீன் வகைகளையெல்லாம்
விளாவாரியாக எடுத்துச் சொல்லி அவற்றின் ருசி வகைகளை விளக்கும் பிரபஞ்சனின் கதை
ஒன்று...)
![]() |
| பொருத்தமான படம் இல்லதான்... |
இறால் விலை பேசிக் கொண்டிருக்கும் போதே “அண்ணே!
றால் உரிச்சித் தரவா?” என்னும் குரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பையில்
மீன் வேறு இருந்தது. எதார்த்தமாகத் திரும்பிக் கொண்டே “மீனும் இருக்குப்பா..
வெட்டித் தருவியா?” என்று
கேட்கவும் அந்தச் சிறுவன் “கத்தி இல்லண்ணே.. றால சுத்தமா பண்ணித்தரேண்ணே“ என்று
மீண்டும் தன் இலக்கில் குறியாக இருந்தான் (தக்கையின் மீது நான்கு
கண்கள்-ந.முத்துச்சாமியின் சிறுகதை நினைவிலாடியது)
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
காரைக்குடியில் கவிதைப் பயிற்சி முகாம்
அந்தச் சிறிய கிராமத்தில் நடந்த கவிதைப் பயிற்சி முகாமிற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து, தமுஎகச கிளைகளின் தலைவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர் -ஆசிரியர் - பேராசிரியர் என 120பேர் வந்திருந்தார்கள்
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
“பாரதி படைப்பும்-வாழ்க்கையும்” வினாடி வினாப்போட்டி... அப்ப நீங்க ?
மூத்தவர்கள் வாழ்த்துங்கள், இளையவர்கள் கலந்துகொண்டு அசத்துங்கள்.. வாழ்த்துகள்.
கடந்த 49ஆண்டுகளாக, அரசுப்பள்ளியில் 10,12ஆம் வகுப்பில் முதல்மதிப்பெண் பெறும் மாணவர்களையும்-பயிற்றுவித்த ஆசிரியர்களையும், மாணவரின் பெற்றோருடன் மேடைக்கு அழைத்து, அவரவர் படம்பொறித்த கேடயங்களை வழங்கிப் பெருமைப் படுத்திவரும் ஓர் இலக்கிய-சமூக அமைப்பு புதுக்கோட்டையில் உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகவும் பெருமை. இந்த ஆண்டு அந்த மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
ஒவ்வொரு வீடும் ஒரு 'குறும்பட' அரங்காக வேண்டும்!
ஆலங்குடியில் இன்றுகாலை முதல் 2நாள்கள் நடக்கும் குறும்பட-ஆவணப் படவிழாவை, தொடங்கி வைக்க வரும்படிக் கவிஞர் நீலா அழைத்திருந்தார். இரண்டு
முழுநாளும் உட்கார்ந்து எல்லாப் படங்களையும் பார்க்க ஆசையிருந்தும் என்வேலைகளுக்கிடையில் அது முடியாமல் மதியமே திரும்பிவிட்டேன். ஆனாலும் 3படங்கள் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.
அதில் இரண்டு படம் ஏற்கெனவே பார்த்ததுதான் 1.நெய்ப்பந்தம் (தமிழ்) 2.IMPOSSIBLE DREAM (அனிமேஷன் ஆங்கிலக் கார்ட்டூன்) 3.இந்தி டப்பிங் “கேமரா“
“நெய்ப்பந்தம்” குறும்படம் பற்றி நண்பர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்
இயக்குநர் எங்கள் ஊர் புதுக்கோட்டை! அஜீத்தின் இன்றைய “ஆரம்பம்“ திரைப்படம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஆரம்பத்தில்
ரொம்பப் பேருக்குத் தெரியாமல் இருந்தபோதே எடுத்த “ராசி“ படத்தின் இயக்குநர் நண்பர்
முரளிஅப்பாஸ். (இப்ப ஒரு படத்தில்
வில்லனா நடிக்கிறாராம்ல!) அவரது அருமையான குறும்படம்.
இந்திய விடுதலைப் போராட்டக்கால வீரர்களை
இப்போதைய இளைஞர்க்குத் தெரிந்திருக்காது! சுதந்திர தினத்தன்று ஏதாவது
தொலைக்காட்சியில் வந்து ஏதாவது பேட்டி கொடுத்தால், “பெரிசு அறுவை தாங்கலடா“ என்று
சொல்வதும், அடுத்தடுத்த அலைவரிசை ஒன்றில் ஏதாவது சினிமாக்காரர்கள் அளந்துவிட்டுக்
கொண்டிருப்பதை உட்கார்ந்து பார்ப்பதை நாமே கூடப் பார்த்திருப்போம்
அப்படிப்பட்டவர்கள் பார்க்க வேண்டிய
அருமையான படம்! 18நிமிடம்தான்!
இணைப்பில் யூ-ட்யூப்பில் பார்க்கலாம் –
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
“கல்கி“ சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற எனது சிறுகதை
குஞ்சானியின் டாட்டா!
சிறுகதை - நா.முத்துநிலவன்
சிறுகதை - நா.முத்துநிலவன்
“பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ!
நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்க…ஙொம்மா
எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா…தைரியமாப் போ…என்ன…நா வரட்டுமா?”
கடைக்காரத் தாத்தா கையை அசைத்து
விட்டுக் கிளம்பிவிட்டார். குஞ்சானியும் கையை ஆட்டிவிட்டுப் போனதும், முன்பொரு சமயம் ‘டாட்டா’ சொல்லப் போய் தனக்கு விழுந்த அடியை நினைத்துக் கொண்டான் குஞ்சானி.
முதுகு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
பஸ்ஸில் இரைச்சல் கலவையாயிருந்தது. ‘எத்தனை பஸ் ஓடினாலும் திருவையாற்றிலிருந்து
தஞ்சாவூருக்கு மட்டும் எப்பவும் கூட்டம் நெருக்கியச்சுக்கிட்டுத்தானிருக்கும்.’
சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக்
கொண்டான். சின்ன ஓட்டைதான். கடைக்காரத் தாத்தா குடுத்திருந்த ரெண்டு ரூபாய் நோட்டு
கையில் நெருடியது. கொஞ்சம் பழைய நோட்டுத்தான். கசங்கி வேறு இருந்தது. ‘வேறே நோட்டுக் குடுன்னு கண்டக்டர் கேட்டால்…??’ எறக்கி விட்டுடுவானோ?’
தெரிந்தவர்கள் யாராவது
இருக்கிறார்களா என்று பார்த்தான். யாரும் தெரியவில்லை. நாலு முழ வேட்டியின்
முனையில் உருட்டுத் தையலைத் தாண்டிக் கொஞ்சம் கிழிந்திருந்தது. வேட்டி முனையைக்
காலுக்குள் இடுக்கிக் கொண்டான்.
பஸ் நடுக்கடையைத் தாண்டிக்
கொண்டிருந்தது.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







