காரைக்குடி புத்தகவிழா – எனது பேச்சு காணொலி இணைப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 
காரைக்குடி நண்பர்கள் ஏற்பாடு செய்து நடத்திவரும் “முதலாவது புத்தகத் திருவிழா” நிகழ்வில் 
கடந்த 08-10-2018 அன்று 
நான் பேசிய பேச்சின் காணொலி இணைப்பு இது-
“புத்தகம் புது உலகின் திறவுகோல்”
பார்த்து, கேட்டுக் கருத்திடவும், 
இன்னும் 
எனது வலைப்பக்கத்தில்
FOLLOWER பட்டியலில் இணையாதவர்கள் 
அந்தப் பெட்டியில் 
தமது மின்னஞ்சலைத் தந்து இணையவும் 
அன்புடன் அழைக்கிறேன்.
வணக்கம்.
காணொலி இணைப்பு இது - 

நன்றி -  'K' STUDIO,  புதுக்கோட்டை  
----------------------- 

5 கருத்துகள்:

  1. வணக்கம் அண்ணா. உங்கள் பேச்சைக் கேட்டேன், பார்த்தேன். கல்வி எப்படி இருக்கவேண்டும் நம் பள்ளிக்கல்விமுறை எப்படி இருக்கிறது என்று ஆதங்கத்தை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நகைச்சுவையும் பாடலும் கலக்கல் அண்ணா. 'பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப் போனேன்' எவ்வளவு ஆழமான கருத்து என்பதை இக்காலங்களில் நன்கு உணர்கிறேன் அண்ணா. சிந்திக்க வைப்பதை இக்காலக்கல்விமுறை குறைக்கவே செய்கிறது. அதிலும் இந்தியாவில் பிரதானமாக என்று நினைக்கிறேன்.

    என் பிள்ளைகள் வாசித்தலைப் பெரிதும் விரும்புபவர்கள். லெக்சைல் (lexile) என்ற வாசித்தல் அளவுகோலில் மூத்தவன் கல்லூரி அளவினைத் தாண்டிவிட்டான், இளையவன் உயர்நிலைப் பள்ளி அளவில் இருக்கிறான் என்று பள்ளி மதிப்பீட்டில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பள்ளி போர் அடிக்கிறதாம்..பரந்து விரிந்த அவர்களின் வாசித்தலில் மகிழ்ந்தாலும் அதே அளவில் தமிழில் வாசிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது..நிறைவேறுமா என்று தெரியவில்லை.

    பிள்ளைகளின் அறிவு தேடலுக்கும் திறமை வளர்ப்புக்கும் பள்ளிக்கூடம் தடங்கலாக அமைகிறதோ என்றும் சில நேரங்களில் தோன்றும்.வீட்டுக்கல்வியை யோசித்தாலும் இறங்கவில்லை. பெங்களூருவில் பல நண்பர்கள் homeschooling செய்கிறார்கள்.


    இங்கு வாசித்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் அண்ணா. பள்ளியில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா இருக்கும். நானும் உதவி செய்வேன். இப்பொழுது இந்தவாரமும் அடுத்தவாரமும் நடக்கிறது அண்ணா. படம் எடுத்துப் பதிவு செய்கிறேன்.

    ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் வாசித்தால் ஆண்டிற்கு 1,800,000 சொற்கள் வாசித்துவிடுவார்களாம். பொதுத் தேர்வுகளில் 90% சதவிகிதப் பிள்ளைகள் போல் மதிப்பெண் எடுப்பார்களாம். அதே ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் என்றால் ஆண்டிற்கு 282,000 சொற்கள் வாசிப்பு, பொதுத்தேர்வுகளில் 50% சதவிகித அளவில்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தங்கை கிரேஸ், இங்குள்ள கல்விமுறையை மாற்றக் கல்வியாளர்கள் பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். அமெரிக்காவில் நீயும் உன் குடும்பமும் இருப்பதால், அங்குள்ள கல்விமுறையை -அதிலுள்ள நல்லது கெட்டதைப் பற்றித் தமிழகம் அறிய ஒப்பீட்டுக் கட்டுரை ஒன்றை நீ எழுத வேண்டுகிறேன். இலக்கியவாதிகளாகிய நாம் கல்வியைப் பற்றிக் கவலைப்படுவது முக்கியம் என்று கருதுகிறேன். கல்வி இலக்கியமாக வேண்டும். இலக்கியம் கல்வியாக வேண்டும் என்பதுதானே உண்மை? உன் பின்னூட்டத்திற்கு நன்றிம்மா

    பதிலளிநீக்கு
  3. வாசிப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் கூறியுள்ள விதம் அருமையாக உள்ளது ஐயா.

    பதிலளிநீக்கு
  4. மிகச் சிறப்பு ஐயா..
    அருமையான பேச்சு.

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் அண்ணா..நானும் எழுத நினைத்து ஆரம்பித்தேன் அண்ணா.. விரைவில் முடித்து வெளியிடுவேன். நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு