50பேர் உடல்தானம்! 80பேர் கண்தானம்! வீதி50 விழாத் தொகுப்பு


புதுக்கோட்டை வீதி-50 விழாவில் ஒப்புதல் தந்தனர்
“வீதி50 விழாமலர்” வளரும் தலைமுறை
பெற்றுக்கொண்டது
      புதுக்கோட்டைவருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டடத்தில், காலஞ்சென்ற கவிஞர் வைகறை, தமிழாசிரியர் குருநா சுந்தரம் ஆகியோர் நினைவரங்கில் கடந்த ஞாயிறன்று நடந்த வீதி-50” பொன்விழாவில், 50பேர் உடல்தானம் 80பேர் கண்தானம் செய்ய ஒப்புதல் படிவம் வழங்கினார்கள்.
      வீதி எனும் கலைஇலக்கிய அமைப்பு, புதுக்கோட்டை ஆக்ஸ் போர்டு சமையற்கலைக் கல்லூரியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை காலைவேளையில் கலை-இலக்கிய நிகழ்ச்சியை நடத்தியதன் 50ஆவது நிகழ்ச்சி மேற்கண்டவாறு நடந்தது.
      தற்போது சென்னை பள்ளிக்கல்வித் துறையில் பாடநூல் கழக துணை இயக்குநராகப் பணியாற்றிவரும் முனைவர் நா.அருள்முருகன், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய போது, அவரால் தொடங்கிவைக்கப்பட்ட அமைப்பே வீதி கலைஇலக்கிய களம். பெரும்பாலும் ஆசிரியர்களும் மாணவர்களும் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களுமாகக் கலந்து கொண்டு, கதை கவிதை கட்டுரை படிப்பது இளைய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதாக நடந்து வருகிறது.
      இதன் 50ஆவது நிகழ்வு பொன்விழாவாக நடக்க அவரே தலைமை தாங்கி, 50பேர் உடல்தானம் 80பேர் கண்தானம் செய்ய, அரசுவிதிகளின் படியான ஒப்புதல் படிவங்களை மேடையில் வழங்கினர். இந்நிகழ்ை,
மலையப்பன், நாக.பாலாஜி  ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
முனைவர் நா.அருள்முருகன் தலைமையுரை. மேடையில் ‘மேன்மை’ மு.மணி, ‘ஆக்ஸ்போர்டு’ சுரேஷ், செந்தலை ந.கவுதமன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜா, மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி, வரவேற்புரை- கும.திருப்பதி, கவிஞர் மு.கீதா
------------------------
நிகழ்ச்சிநடந்த நாள் பாவேந்தர்பாரதிதாசன் பிறந்தநாள் என்பதால் கோவை-சூலூர் பாவேந்தர் பேரவையின் தலைவர் புலவர் செந்தலை ந.கவுதமன் “நின்றெரியும் பாவேந்தர் நெருப்பு” எனும் தலைப்பில்
சிறப்பு  -நெருப்பு?- சொற்பழிவாற்றினார்.
---------------------------------------
வீதிக் கூட்டங்களில் கலந்து கொண்டு வாசிக்கப்பட்ட கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள் தொகுப்பை “வீதி-50” மலராக “மேன்மை” இதழ் மற்றும் பதிப்பகம் சார்பில் விழாவில் வெளியிடப்பட்டது. பதிப்பாளர் மணி விழாவில் கௌரவிக்கப்பட்டார். வீதிக் குழந்தை எழுத்தாளர்கள் இந்த மலரைப் பெற்றுக்கொண்டனர்.
      நடந்து முடிந்த 50கூட்டங்களில் யார்யார் கலந்து கொண்டது எனும் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா வாசித்தார்.
வீதி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அறிக்கை வாசித்தார்
 அரிமளம் பவல்ராஜ், திவ்யா பாரதி, சோலச்சி, பாடல்கள் இசைத்தனர்.
      பாரதிதாசன் விழாவையொட்டி நடத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற கவிஞர்கள், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, வீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.முத்துநிலவன் உரை யாற்றினார். இப்போட்டி நிகழ்வை கா.மாலதி, சுந்தரவள்ளி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார். வீதிக்கவிஞர்கள் 50பேர் எழுதிய 50ஐக்கூ கவிதைகளுக்கு எழுத்தாளர் சோலச்சி உதவியுடன் உயிரோவியம் வரைந்திருந்த வீதி ஓவியர் அரிமளம் பவல்ராஜின் கவிஓவியக் கண்காட்சி மற்றும் ஒளிஓவியர் புதுகை செல்வா தலைமையில் வைக்கப்பட்ட “வீதி-50” புகைப்படக் கண்காட்சியையும் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.



   வீதியின் 50 நிகழ்ச்சிகளையும் நடத்த இடம்தந்துதவிய “ஆக்ஸ்போர்டு சமையற்கலைக் கல்லூரியின் தாளாளர் சுரேஷ், வீதியின் முன்னோடி விமர்சகர் கவிஞர் ராசி பன்னீர்செல்வன் ஆகியோர் நெகிழ்வான வாழ்த்துரைகளை வழங்கினர்.
    வீதி-50 மலரை வெளியிட்டுத் தந்ததோடு, விழாவுக்கு வந்த ஒவ்வொருவருக்கும் மேன்மை இதழை வழங்கிய “மேன்மை” பதிப்பக உரிமையாளர் மற்றும் மேன்மை இதழாசிரியர் திரு மு.மணி விழாவில் கௌரவிக்கப்பட்டார்.




நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜா, மாவட்டக்கல்வி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திராவிடச் செல்வம், மற்றும் வீதி முன்னோடியான இரா.ஜெயலட்சுமி உள்ளிட்ட உதவிக்கல்வி அலுவலர் பலரும் கலந்து கொண்டனர்.


தொல்லியல் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த கந்தர்வக் கோட்டை ஆசிரியர் ஆ.மணிகண்டன், 'மணிமன்றம்' பாவலர் பொன்.கருப்பையா,விதைக்கலாம் நண்பர்கள், தமுஎகச தலைவர்கள் மா.ஸ்டாலின் சரவணன், சு.மதியழகன், முனைவர் சு.மாதவன், சு.பீர்முகமது, புதுகைப்புதல்வன், கறம்பக்குடி சாமிகிருஷ், வம்பன்செபா., ஆவுடையார் கோவில் சுரேகா, மணமேல்குடி இந்தியன் கணேசன்அறிவியல் இயக்கத் தலைவர்கள் எஸ்.டி.பாலகிருஷ்ணன், அ.மணவாளன், வீரமுத்துகம்பன்கழகச் செயலாளர் இரா.சம்பத்குமார், கவிஞர்கள் எஸ்.இளங்கோ, சுரேஷ்மான்யா, மா.செல்லத்துரை, எழுத்தாளர்கள் அண்டனூர் சுரா, ந.சோலையப்பன், சத்தியராம் ராமுக்கண்ணு, நிலவை பழனியப்பன், பொங்கலூர் மாசிலாமணி தம்பதியினர், காரைக்குடி தென்றல் சாய் தம்பதியினர்கிருஷ்ணவேணி, நாவளன், மற்றும் உடல்தானம் கண்தானம் செய்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர். 


பாரதிதாசன் விழாப் போட்டியில் வெற்றிபெற்ற
(1)  மரபுக்கவிதைசுகுமாறன் சின்னையாஅசோக் நகர்.
(2)  புதுக்கவிதை - பழ.அசோக் குமார், கூடல்நகர்,
கவிதை (பெண்களுக்கானது)
(1)  .ஜெயக்குமாரிபொன்னகர், புதுக்கோட்டை
கட்டுரை (பெண்களுக்கானது)
(1)  சசிகலா சேவுகன்அய்யனார் நகர், அகரப்பட்டி அஞ்சல்
(2)  மு.சசிகலாமுனைவர் பட்ட ஆய்வாளர்.
மாணவர் கவிதை
(1)  .கிருஷ்ணவேணிகீரை..செ.கல்வியியல் மாணவி
(2)  ரா.அபிராமிசுந்தரிகீரை..செ.செவிலியர் மாணவி
(3)    ஆறுதல் பரிசு - சூர்யா  கல்வியியல் முதலாம் ஆண்டு
மாணவர் கட்டுரை-
(1)  அம்பிகாகீரை..செ. கல்வியியல் கல்லூரி மாணவி
(2)  ஜெ.அமுதாராணிமாமன்னர் கல்லூரி மாணவி
ஆகியோர்க்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர்.

விழாவில் கலந்துகொண்ட ஒவ்வொருவர்க்கும் மேன்மை பதிப்பகம் வழங்கிய ஒவ்வொரு நூல் வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. விழாவில் பெறப்பட்ட உடல்தானம், கண்தானப் படிவங்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டு, அரசு விதிகளின்படி அவரவருக்கும் உரிய சான்றிதழ் களைப்பெற்று வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக தமிழாசிரியர் கழக மாவட்டத் தலைவர் கும.திருப்பதி மகிழ்ச்சியாக வரவேற்புரையாற்ற, கம்பீரமாக நிகழ்வுத் தொகுப்புரையை முனைவர் மகா.சுந்தர் வழங்க, மீரா.செல்வக்குமார் நெகிழ்ச்சியாகத் தனது நன்றிக்கவிதையை வாசித்தார்.

                -------------------------------------------------------

செய்தி வெளியீட்டுக்கு நன்றி –

தி இந்து தமிழ் –நாளிதழ், செய்தியாளர் திரு சுரேஷ், 


தீக்கதிர் நாளிதழ், செய்தியாளர் தோழர் சு.மதியழகன் --



இந்தியன் எக்ஸ்பிரஸ் –செய்தியாளர் திரு எழிலரசன்- 

புதுகை நாளிதழ் – ஆசிரியர் திரு சிவசக்திவேல் --

00000000000000000000  

11 கருத்துகள்:

  1. வணக்கமும் வாழ்த்துகளும் அண்ணா!மிக அற்புதமாக நடந்த விழா!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பாக விழாவினை நடத்துதல், அனைவரையும் ஒருங்கிணைத்தல், சமூக அக்கரையை உண்டாக்குதல், இளைய தலைமுறையை ஊக்குவித்தல் என்பன போன்றவற்றை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் ஐயா. உங்களுக்கும், வீதி இலக்கியக் குழுவினருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான நிகழ்வு... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. வீதி நிகழ்வை கண்முன்னேகொடுத்தீர்கள்
    நல்லபதிவு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  5. நல்ல நிகழ்வு..வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. வீதி-50 விழாவின் நிகழ்வுகளனைத்தையும் நிரல்பட தொகுத்தளித்துள்ளமை சிறப்பு. புதுக்கோட்டை கண்ட புதுமை வீதியில் அனைவரையும் பயணிக்கச் செய்ய இன்னும் வீதியை அகலமாக்குவோம்.

    பதிலளிநீக்கு
  7. மிக நல்ல ..முழுமையான தொகுப்பு அய்யா...

    பதிலளிநீக்கு
  8. தங்களின் நேர்த்தியான திட்டமிடல், ஒவ்வொன்றின் மீதான அதீத அக்கறை வியக்க வைக்கிறது அய்யா. என்னைப் போன்றவர்கள் கற்றுக்கொள்ளத்தக்கது. துணை இயக்குநர் அய்யாவின் நெகிழ்ச்சியான உரை இன்னும் கண்முன் நின்று கொண்டும் செவிகளில் கேட்டுக் கொண்டும் உள்ளது. கண்துஞ்சாது உழைத்த உழைப்பு தங்களின் கண்களில் விழாவன்று நேரில் கண்டேன். வீதி இன்னும் பல இலக்கியங்கள் காணும். படைப்பாளர்களை உருவாக்கும். சமூகப் பணிகளையும் முன்னெடுக்கும் தங்களின் திட்டமிடலோடும் துணை இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலோடும் இளைய தலைமுறைகளின் கரங்கள்செய்து முடிக்கும்.

    பதிலளிநீக்கு
  9. சாதிமத பேதமின்றி சமத்துவ சமுதாயம் உருவாகவும்....
    தமிழை வளர்பதுமே... நோக்கமாக கொண்டு சமூகம் அங்கீகரிக்கும் வகையில் ...
    இளம் படைப்பாளர்கள் உள்ளிட்ட சமூகச் சிந்தனையுடைய அனைவரையும் கண்டறிந்து ஊக்குவித்து வரும் புதுக்கோட்டை " வீதி கலை இலக்கிய களம்" பொன்விழா கண்ட சிற்பிகளுக்கு வாழ்துகளும்...பாராட்டுகளும்...
    திரு. மிகு அருள் முருகன் ஐயா சிந்தனையில் உருவான " வீதி" பொன்விழா திட்டமிட்ட நிகழ்வு உங்களின் ஆளுமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு...என என் மனம் பெருமை கொள்கிறது...
    உங்களின் வீதி பொன்விழாவின் தொகுப்பை படித்து மிகவும் மகிழ்ந்தேன்.....வாழ்துகள் அண்ணா...
    நிகழ்வின் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாகவும்... மகிழ்வாகவும்...மனதிற்கு நிறைவாகவே அமைந்திருந்தது....
    குறையேதும் இல்லை ...இவ்வளவு நாள் உங்களையெல்லாம் காணாததே என் மனக்குறை....
    மற்றபடி சிறப்பு மிக்க புதுக்கோட்டையின் சிறப்பு வாய்ந்த மக்களின் எளிமை கண்டும்...உயர் சிந்தனையுடைய நற்பண்புகள் நிறைந்த ' வீதி' யின் உள்ளங்களை நினைத்து வியக்கிறேன்...
    போற்றுதலுக்கிறிய திரு மிகு அருள் முருகன் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும்... என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு