உடல்தானம் படிவம் (BODY DONATION FORM)


உடல் தானம் செய்யும் படிவம் (BODY DONOR FORM)

புதுக்கோட்டை “வீதி-50” நிகழ்வையொட்டி, 50நண்பர்கள் உடல்தானம் மற்றும் கண்தானம் செய்வதென்று முடிவெடுத்து, படிவம் தேடி, அலைந்து, இறுதியாக திருச்சி தோழர் அரசெழிலன் அனுப்பினார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அதே படிவம்தான் என்றும், நகலெடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.
இனி யாரும் உடல்தானப் படிவம் தேடி அலையக் கூடாது என்ற உறுதியில் இதோ யாரும் நகலெடுக்கும் விதமாக அதனை கூகுளாரிடம் ஒப்படைத்து, கேட்போருக்கெல்லாம் வழங்குக என்று கேட்டுக் கொள்கிறேன்…  
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்!”
இணைப்பில் படிவங்கள் மற்றும் விதிமுறைகள் –
 
(புதுக்கோட்டை “வீதி-50” விழா, வரும் 29-4-2018இல் நிகழ்வதால், உடல்தானம் செய்ய விரும்பும் நண்பர்கள், இப்படிவங்களை நிரப்பி, 20-4-2018க்குள் அனுப்பி வைத்தால், அதனை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்து, அரசுச் சான்று பெற்று, அதனை, விழாவில் கலந்துகொள்ளும் சான்றோர் ஒருவரின் கையால் சான்றோர் பலர் முன்னிலையில் வழங்கிடத் திட்டமிட்டுள்ளோம்)
மண் தின்னும் உடல் மனிதருக்கே பயன்பட்டால் நல்லதுதானே
  ----------------------------------------------------------
உடல் தானம் விதிமுறைகள்
நகல் வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டால் அனுப்பி வைப்பேன் நிரப்பிஅனுப்பி விடலாம் muthunilavanpdk@gmail.com
         --------------------------------------------------------
உடல் தானம் ஒப்புதல் படிவம்
(இதை நீங்களே தட்டச்சுச் செய்தும், நகலெடுத்தும் பயன்படுத்தலாம்)
----------------------------------------------------------------------------- 
--- BODY DONATION AFFIDAVIT FORM ---

இதை நீங்களே தட்டச்சுச் செய்தும், நகலெடுத்தும் பயன்படுத்தலாம்

(நீதிபதி கையொப்பம் கட்டாயமில்லை. தானம் செய்பவரே ஒப்பமிட்டுத் தந்தால் போதுமானது (ரூ.20கோர்ட் ஸ்டாம்ப் அவசியம்)



                  ------------------------------------------------------------------------- 

இது தொடர்பான கூடுதல் தகவல்கள் அறிய 
இந்த வலைப்பக்கப் பதிவைப் பார்க்க வேண்டுகிறேன் -

8 கருத்துகள்:

  1. எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் ஐயா...

    dindiguldhanabalan@yahoo.com

    பதிலளிநீக்கு
  2. தோழமைக்கு வணக்கம்.
    உடற்கொடை அளிக்க விரும்புவோர் விருப்ப, ஒப்புதல் மடலை நிரப்பி ஒப்பமிட்டு முதல்வருக்கு அளித்தால் போதுமென நினைக்கிறேன். ( குறுகிய காலத்துள் அதுதான் செய்ய இயலும்.)


    மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறையிலிருந்து உரிய படிவங்கள் பெற்றபின்னர் அவற்றை நிரப்பி ( உடலை துறைக்கு ஒப்படைப்பவர் ஒப்புதலுடன்) மெய்யியல் துறைக்கு ஒப்படைக்கும் போது 20 உரூபா முத்திரைத்தாளில் ஒரு ( Notary Public )ஒப்பம் பெற்று உறுதிமொழித்தாள் (AFFIDAVIT ) கொடுத்தால் போதுமென நினைக்கிறேன். நான் ஒப்படைத்த போது இருந்த நடைமுறை அது. மாறி இருந்தால் அவ்வணமே தொடர்வது நல்லது.

    பதிலளிநீக்கு
  3. நீங்களும், குழுவினரும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கன ஐயா.

    பதிலளிநீக்கு
  4. அருமையான சேவை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல விஷயம். நான் தில்லியிலுள்ள AIIMS மருத்துவமனையில் பதிவு செய்திருக்கிறேன்.

    பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. தோழர் எனது இ மெயில் முகவரிக்கு ஒரு பாரம் அனுப்பவும். sugadevnarayanan@gmail.com

    பதிலளிநீக்கு
  7. நல்ல முயற்சி..மேலும் இறப்பு நேரத்தில் உறவு,நட்பு கூடலுக்கு இடையில் சமீபத்திய மருத்துவக்கல்லூரியிலிருந்து உடலை எடுத்துச்செல்லும் வாகனத்தை அனுப்பி பெற்றுக்கொள்ளும்படி அரசு திட்டமிட வேண்டும்.அதற்கும் அழுத்தம் அவசியம்..புதுகையில் மருத்துவத்துறை அமைச்சர் இருப்பதால் எளிதாய் அணுகலாமே.

    பதிலளிநீக்கு
  8. அருமையான சேவை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு