தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

புதன், 28 மார்ச், 2018

என் மகன் எழுதிய சிறுகதை படிக்க வருக!


என் மகன் நிறைய நூல்களை – என்னை விடவும் ‘சீரியஸாக’- 
படிக்கிற பழக்கம் உடையவர்!

இதில் எனக்கு மிகவும் பெருமைதான்!


இப்போது அமீரகத்தில்  பணியிலிருந்துகொண்டு, 
வலைப்பக்கம் தொடங்கி 
முதலில் நூல்விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தவர், 
இப்போது 
சிறுகதை எழுதியிருக்கிறார்!
            இதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி!

வாருங்கள் நண்பர்களே!
அவரது வலைப்பக்கம் சென்று, 
கதையைப் படித்துக் கருத்திடுவதோடு,

அந்த வலைப்பக்கத்தை கலை-இலக்கியத்தோடு தமிழ்ச் சமூகத்திற்காக வளர்த்தெடுக்க நல்ல ஆலோசனைகளையும் நீங்கள் வழங்கவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.இதோ அவரது வலைப்பக்கம் -

ஆங்..! அப்புறம்...  
அவரது வலைப்பக்கத்தில் தொடர்வோர் (Follower) ஆகவும் சேர மறந்துவிடாதீர்கள்! என்ன…? விடாதீர்கள்!


“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” - குறள்
 


தோழமையுடனும், உரிமையுடனும்,
உங்கள் அன்புள்ள,
நா.முத்துநிலவன்.

33 கருத்துகள்:

 1. மகிழ்ச்சி வாழ்த்துகள் மருமகனுக்கு அண்ணா

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வலைத்தளம் மிக எளிமையாக அதே நேரத்தில் பளிச் சென்று இருக்கிறது

  பதிலளிநீக்கு
 3. தங்கள் மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் முரளி அவர்களே! (உங்கள் “சீதை மன்னித்தாளா” கதை அருமை, அங்கேயே கருத்திட்டிருக்கிறேன் பாருங்கள்)

   நீக்கு
 4. ஆஹா.... புதியதாக வலைப்பூ தொடங்கி இருக்கிறாரா.... வாழ்த்துகள் ஐயா. இதோ படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள். உங்களது மகனின் வலைப்பக்கத்தை Bookmark செய்து கொண்டேன். படித்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா.
   உடல் நலம் நன்றாக உள்ளதறிந்த மகிழ்ச்சி!

   நீக்கு
 6. தங்கள் மகனுக்கு வாழ்த்துகள். கதை நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்.வாழ்த்துக்கள்!
  உங்களைப் போன்ற இளைஞர்களைக்
  காலம் கைகூப்பி வரவேற்கிறது.
  உங்கள் படைப்பாளுமை தமிழ்ப் பண்பாட்டு உலகைச் செழுமைப்படுத்தட்டும்.
  அன்புடன், வே.சங்கர் ராம்
  சங்கரன் கோவில்

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் தம்பி...தங்கள் வருகையும்
  படைப்பாளுமையும் தமிழ்ப் பண்பாட்டு
  உலகைச் செழுமைப்படுத்தட்டும்.
  அன்புடன்,வே.சங்கர்ராம்.ஆசிரியர்
  சங்கரன் கோவில்

  பதிலளிநீக்கு
 9. கதையை படித்து மனதில் பட்டதை அங்கே சொல்லி இருக்கிறேன்.... நான் சொன்ன கருத்து ஸ்பேமில் சென்று இருக்கலாம் என நினைக்கிறேன் அதை பார்க்க சொல்லுங்கள் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்பேமிலும் வரலையே நண்பரே!

   நீக்கு

  2. அய்ய்யோ பெரிசாக அல்லவா இரண்டுக்கும் மேற்பட்ட கருத்துக்களை சொல்லி இருந்தேன் அதை காக்கா தூக்கிட்டு போய்டுச்சு,,,,,,, கதை படித்த உணர்வோட எழுதினேன் சரி மீண்டும் வந்து கருத்து சொல்லுகிறேன்

   நீக்கு
  3. முத்துநிலவன் அவர்களின் அறிமுகம் அதுவும் பழகிய ஒருவரின் அறிமுகம்மட்டுமல்ல அவருடைய புதல்வர் என்பதால் படித்து உற்சாக ஊட்ட வேண்டும் என்றுதான் உடனே வந்தேன். பதிவின் தலைப்பில் சிறுகதை என்றதும் ஒரு சிறு அயற்ச்சியோடு ஹும் நமக்கு இப்போது அதுவும் அதிகம் பிடிக்காதா ஏரியாவாச்சே என்று நினைத்து ஒடிவிட்டேன் வேறு வேலை இருந்தாலும்.... சில மணிநேர்ங்களித்து நான் சென்ற வேலை முடிந்ததால் நண்பரின் புதல்வனின் படைப்பை அது எப்படி இருந்தாலும் படித்து கருத்து சொல்ல வேண்டும் என்று மீண்டும் தளம் வந்தேன்.

   வந்ததும் பதிவை பார்த்ததும் மிக நீண்டதாக இருந்தது சரி என்னவானாலும் சரி படித்துவிட வேண்டியதுதான் என்ற எண்ணத்தோடு படிக்க ஆர்ம்பித்தேன். படிக்க ஆர்ம்பித்த போது பெரிய கதையாக தோன்றிய இந்த கதை படித்து முடிக்கும் போது மிகவும் சிறிய கதை போல் சட்டென்று முடிந்தது போன்ற ஒரு உணர்வு.. அதுமட்டுமல்ல நீண்ட நாட்கலுக்கு அப்புறம் ஒரு நல்ல கதையை படித்த ஒரு மன நிறைவு தோன்றியது   இது சிறுகதையாக அல்ல ஒரு நாவலாக வந்து இருக்க வேண்டிய கரு என்றுதான் எனக்கு தோன்றியது... ஒரு பெரிய நாவலை மிக அழகாக சுருக்கி அதை ஒவியமாக வரைந்து கண்முன் காடியது போல இருந்தது. அதுவும் மரத்தடியில் கட்டிலில் அமர்ந்தது ஆச்சியுடன் உரையாடல் நடத்திய விதம் அப்படியே டைம் டிராவலில் கடந்த காலத்திற்கு செல்வது போல நான் மதுரையில் வசித்த காலங்களை அப்படியே மீட்டு ஒரு சுகமான அனுபவத்தை கொடுத்து என்றால் அது மிகையாகது

   தாய் எட்டடி பாய்ந்தால் குழந்தை பதினாரு அடி பாயும் என்ரு சொல்வது போல சிநேகிதன் நீங்கள் அப்பாவையும் தாண்டி பதினாரு அடி அல்ல அதற்கு மேலும் தாண்டிவிட்டீர்கள் அப்படிதாண்டியதால் நீங்கள் கொள்ளும் பெருமையைவுட உங்கள் அப்பாவிற்குதான் மிகப் பெருமையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..   சிநேகிதன் உங்களிடம் நல்ல திற்மை இருக்கிறது அதை நங்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.. வாழ்கவளமுடன்

   நீக்கு
  4. விரிவான மற்றும் நெருக்கமான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 10. சற்று முன்பு வாசித்'தேன்'... மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பர் டிடி. உடல்நலம் தேறி வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
   விரைவில் புதுக்கோட்டை வாருங்கள். காத்திருக்கிறோம்.

   நீக்கு
 11. ஐயா! நீங்கள் சொன்னீர்களே என்றுதான் அவர் தளத்துக்குப் போனேன். ஆனால், உண்மையிலேயே அற்புதமாக எழுதியிருக்கிறார்! அசந்து விட்டேன்! என் கருத்தையும் அளித்திருக்கிறேன்.

  கதைக்கான உங்கள் திறனாய்வையும் படித்தேன். மிக நுட்பமாக அருமையாக இருந்தது! உங்கள் அளவுக்கு எனக்குப் படிப்புத் துய்ப்புக் கிடையாது என்பதால் அத்தனை குறைகள் எனக்குத் தென்படவில்லை. ஆனால், ஒரு சிறுகதை எப்படி எழுதப்பட வேண்டும் என்பது பற்றி உங்களுடைய அந்தத் திறனாய்விலிருந்து ஓரளவு புரிந்து கொண்டேன். மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் விரிவான கருத்துகளை அவர் தளத்திலும் பார்த்தேன்.
   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நண்பரே.

   நீக்கு
 12. உங்கள் மகனும் வலைப்பக்கம் தொடங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி. இதோ சென்று படித்துப் பார்க்கிறோம். வாழ்த்துகள் அங்கும் கருத்து இடுகிறோம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன் மா. நண்பர் துளசிக்கும் தங்கைக்கும் என் அன்பு

   நீக்கு
 13. கதையைப் படித்து கருத்திட்டுள்ளேன் ஐயா! புலிக்குப்பிறந்தது புலிதான். நல்ல எழுத்து நடை உண்மையை உரக்க சொல்லும் கதைக் களம்.

  பதிலளிநீக்கு
 14. கதையைப் படித்து அங்கு கருத்திட்டுவிட்டேன். ரொம்ப நன்றாக உள்ளது. முடிவு மிகவும் பிடித்திருந்தது.....என் கருத்தையும் சொல்லியிருக்கிறேன் ...

  கீதா

  பதிலளிநீக்கு
 15. அன்பின் ஐயாவுக்கு...

  நெருடாவின் கதை எழுதிய அன்றே வாசித்துவிட்டேன். என் கணிப்பொறி பிரச்சினையினால் யாருக்குமே கருத்திட முடிவதில்லை. இன்று வேறோரு இடம் செல்லும் போது அங்கிருந்து கருத்திட்டேன்.

  நல்ல கதை... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு