தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

புதன், 7 மார்ச், 2018

தமுஎகச 2017-கலை-இலக்கிய விருதுகள் ரூ.50,000 பெறவருக!2017 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள் /குறுந்தகடுகள் வரவேற்கபடுகின்றன

2017
ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள்/தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும்.

ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள் 2018 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால்/கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்: 
அனுப்ப வேண்டிய முகவரி -

பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
57/1,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)
மதுரை-625001 போன்:0452-2341669

போட்டிக்கு வந்த நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
விருதுக்குத் தேர்வுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும்/ குறுந்தகடுக்கும் , “தமுஎகச விருதும்”, சான்றிதழும்,                                           ரூ 5000 ரொக்கப்பரிசுடன் வழங்கப்படும்.
 
தமுஎகச சார்பில் நடத்தப்படும் விழாவில் 
இவ்விருதுகள் வழங்கப்படும்.

விருதுகள் விபரம் :
1. தோழர். கே. முத்தையா நினைவு விருது தொன்மைசார் நூல்
2. கே.பாலசந்தர் நினைவு விருது நாவல்
3. சு.சமுத்திரம் நினைவு விருது விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு
4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது கலை இலக்கிய விமர்சன நூல்
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் செல்லம்மாள்(ப.ஜெகந்நாதன்) நினைவு விருது கவிதைத்தொகுப்பு
6. அகிலாசேதுராமன் நினைவுவிருது -சிறுகதைத்தொகுப்பு
7. வ.சுப.மாணிக்கனார்நினைவுவிருது - மொழிபெயர்ப்பு
8. பா.இராமச்சந்திரன் நினைவுவிருது- குறும்படத்துக்கு
8. என்.பி.நல்லசிவம்-ரத்தினம் நினைவு விருது ஆவணப்படத்துக்கு.
தமுஎகச வழங்கும்
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள்
9. குழந்தைகள் இலக்கிய நூல்
10. மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்

                         தோழமையுடன்..

                                ச.தமிழ்ச்செல்வன்               சு.வெங்கடேசன்
              மாநிலத் தலைவர்              பொதுச்செயலாளர்


(விருதுபெற்றோர் விவரம் 
த்தளத்திலும் வெளியிடப்படும். 
விருபெற்றோர்க்கும் தனித்தனியே தெரிவிக்கப்படும்.
நூலாசிரியர்களும், பதிப்பகத்தாரும், வாசகர்களும்கூட 
நூல்கள், குறுந்தகடுகளை அனுப்பலாம்.
நல்ல கலை-இலக்கியம் விருதுபெற உதவலாம்)

4 கருத்துகள்:

  1. தமுஎகச 2017 போட்டியில் பங்குபெறுவோர் வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ரூ.50000/- என்பதை விட விருது வழங்குவது த.மு.எ.க.ச என்பதுதான் இந்த விருதின் மதிப்பை உயர்த்துகிறது. விருது விழா ஏதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமா? மக்கள், தமிழன் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களிடம் கேட்டுப் பார்க்கலாமே!

    மேலும், ஒரு வேண்டுகோள் ஐயா! மற்ற விருதுகளையெல்லாம் அந்தந்த எழுத்து வகையைச் சார்ந்த முன்னோடிகளின் பெயரில் வழங்குகிறீர்கள். ஆனால், குழந்தைகள் இலக்கிய நூல், மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் ஆகியவற்றுக்கான விருதுகளுக்கு யார் பெயரும் சூட்டப்படவில்லையே! வருத்தமாக இருக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் இலக்கியத்தைப் பொறுத்த வரை தமிழ்தானே உலகுக்கே முன்னோடி? மற்ற நாடுகளில் முறையான உலக்கியமோ இலக்கணமோ கூடப் பிறக்கும் முன்பே பெரியவர்களுக்கான இலக்கியத்தையும் கடந்து குழந்தைகள் இலக்கியம் வரை பாடி வைத்த மொழியன்றோ தமிழ்? அந்தக் காலத்திலேயே ‘ஆத்திசூடி’, ‘கொன்றை வேந்தன்’ போன்ற குழந்தைகளுக்கான நூல்கள் இருந்தனவே! எனவே ஔவையார் பெயரில் இந்த விருது வழங்கலாமே! அல்லது அண்மையில் மறைந்தவரும் சிறுவர் இலக்கியத்தில் வேறு யாரும் அடையாத அளவுக்குப் புகழ் பெற்றவருமான வாண்டுமாமா அவர்களின் பெயரிலோ டாக்டர் பூவண்ணன் அவர்கள் பெயரிலோ கூட வழங்கலாமே ஐயா!

    பதிலளிநீக்கு