தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ளம் நடத்தும் பாடம்!


இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக இருப்பதால் இங்குப் பகிர்கிறேன்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

முகத்தில் அறையும் எதிர்க்கேள்விகள்!அவர்கள் கேள்வியும் 
அருணன் எதிர்க்கேள்வியும்

இந்து(த்துவ) நண்பர்கள் 
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு,                
மாடு வெட்டுவது யார் பண்பாடு?” என கேள்வி எழுப்பி 
விளம்பரம் செய்து வருகின்றனர். 


து பற்றி,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான 
பேராசிரியர் அருணன் அவர்களின்                              

முகநூல் பதிவு.........

"மாட்டுப் பொங்கல் தமிழர் பண்பாடு
மாடு வெட்டுதல் யார் பண்பாடு?"-
என்று சுவர் விளம்பரம் செய்திருப்போரே..!

ஆடுமாடு வளர்ப்பதும் தமிழர் பண்பாடே
ஆட்டுக்கறி மாட்டுக்கறி சாப்பிடுவதும்
தமிழர் பண்பாடே.
ஆனால்...ஆனால்

அனைவருக்கும் கல்வி என்றது
தமிழர் பண்பாடு
பூணூல் போட்டவருக்கே கல்வி
என்றது யார் பண்பாடு
?

விதவைக்கு மறுமண உரிமை தந்தது
தமிழர் பண்பாடு
மொட்டையடித்து மூலையில் உட்கார
வைத்தது யார் பண்பாடு
?

கோயிலைக் கட்டியது தமிழர் பண்பாடு
அங்கே பிராமணர்தாம் அர்ச்சகர்
என்பது யார் பண்பாடு
?

குலதெய்வத்திற்கு ஆடு கோழி படைப்பது
தமிழர் பண்பாடு
அங்கும் பொங்கல் புளியோதரை என்பது
யார் பண்பாடு
?

இந்து-முஸ்லிம் ஒற்றுமை தமிழர் பண்பாடு
விநாயகர் ஊர்வலம் என்று கலவரம்
செய்வது யார் பண்பாடு
?

கன்றுக்கு பால் தருவது தமிழர் பண்பாடு
யாகத்தில் நெய்யை வீணாக்குவது
யார் பண்பாடு
?

திருக்குறள் எழுதியது தமிழர் பண்பாடு
மனுஸ்மிருதி சொன்னது யார் பண்பாடு
?

பொங்கல் விழா தமிழர் பண்பாடு
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது
யார் பண்பாடு
?

பதில் சொல்லுவீரா கலவரவாதிகளே..?

-- அருணன்
 
நன்றி – அருணன் அவர்களின் முகநூல் பதிவு

புதன், 8 ஆகஸ்ட், 2018

இறந்தபிறகும் கலைஞர்...


இடஒதுக்கீட்டுப் போராட்டம்
தொடரவேண்டிய அவசியத்தை,
இறந்தபிறகும் உணர்த்திச் சென்ற
கலைஞர் அவர்களுக்கு
எனது இதயாஞ்சலி!
-நா.முத்துநிலவன்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

விமானம்தாங்கி ட்ரக்!!! நம்மை முட்டாளாக்கிய ஒரு விளம்பர ஏமாற்று!!!!அவசரமாகத் தரையிறங்கும் ஒரு விமானத்தை ட்ரக்கில் போய்க் காப்பாற்றும் (நமது முந்திய பதிவின்) வீரசாகச வீடியோ உண்மையில் நடந்ததல்ல! ட்ரிக் விளம்பரமாம்! 
அப்படின்னா இது - ட்ரிக் ட்ரக்!
இது 2011 ஆம் ஆண்டில்  நிசான் டிரக் கம்பெனியின் விளம்பரமாம்! 
பார்க்க -

இந்த வீடியோ 2011 ஆம் ஆண்டில் இருந்து நிசான் தொலைக்காட்சி விளம்பரமாக இருந்தது. முதலில் வீடியோவை பாருங்கள், இது YouTube இல் அக்டோபர் 5, 2011 இல் வெளியிடப்பட்டது.
நிசான் ஃபிரண்டியர்_ லேண்டிங் கியர் நேர்காவல்ஸ் என்ற வீடியோவில், அதன் முன்னணி இறங்கும் கியர் இடத்திற்குப் பதிலாக பைக் டிரக்கை பின்பற்றி ஒரு ஜெட் பார்க்கிறோம், இது வெளிப்படையாகத் தோல்வியடைந்தது.
ஜெட் விரைவாக நகரும் டிரக்கை நெருங்குகிறது 
மற்றும் அதன் படுக்கையில் தொடுகிறது
விமானம் ஒரு பேரழிவு நிலைமையில் இருந்து காப்பாற்றுகிறது. 
வீடியோவின் தலைப்பு "நிசான் ஃபிரண்டியர் என்பது 
நடுத்தர அளவிலான டிரக் ஆகும், அது ஒரு முழு அளவைப் போல 
செயல்படுகிறது, இயக்கியவர்களுக்கு எந்த தடையுமின்றி
எதையும் அவர்கள் சமாளிக்க முடியுமென்று உணர்கின்றனர்."
திரையில் கிராஃபிக் "லேண்டிங் கியர் ஃபெயில்யூர் ... ப்ளேஜ் டிரக் மூலம்  காப்பாற்றப்பட்டது"  என்று கூறுகிறது. 
பல நேரடியான சாட்சி நேர்காணல்கள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன, இது ஒரு அசாதாரணமான கண்ணோட்டத்தை பயன்படுத்தி  வீடியோவை யதார்த்தமாக உணர வைக்கிறது.
 
ஜனவரி 2016 வரை, வீடியோ கிட்டத்தட்ட 100,000 காட்சிகள் கொண்டது.  அந்த விளம்பரம் 2011 இல் இயங்கியது மற்றும் அந்த ஆண்டு  அக்டோபரில் AdWeek இல் இடம்பெற்றது. 
லாஸ் ஏஞ்சல்ஸில் TBWA \ Chiat \ Day, இடத்திற்கு பொறுப்பான 
நிறுவனமாக இருந்தது. நிசான் எல்லைப்புற வாகனங்களை 
அசாதாரணமான சூழல்களில் கூட எளிதாகச் செய்வதாகச் 
சித்தரிக்கும் சக்தி வாய்ந்த விளம்பரமாக இந்த பிரச்சாரம் 
வடிவமைக்கப்பட்டது.
(மொழிபெயர்ப்பு உதவிக்கு நன்றி -  கூகுள்)
இணைப்புகளைப் பாருங்கள் அசந்து போவீர்கள் -

நான் தெரிந்து கொண்டே உங்களை ஏமாற்றவில்லை!
நானும் ஏமாந்துதான் வலையில் எழுதிவிட்டேன்.
அனானிமஸ்நண்பர் ஒருவர் இந்தத் தகவலைச் சொல்லி மேற்கண்ட காணொலி இணைப்புகளையும் அனுப்பியிருந்தார்.  வந்தது அனானிமஸ்கடிதம் என்பதால் நான் அலட்சியப்படுத்திவிட்டேன்.

பின்னர் மீண்டும் இணைப்புகளோடு அவரே அனுப்பியதால் இணைப்பில் பார்த்தபோதுதான் சாயம் வெளுத்திருந்தது!
(வெளுத்தது அவர்களின் விளம்பரச் சாயம் மட்டுமல்ல, நமது மரமண்டை மசாலாச் சாயமும்தான்!! அவ்வளவு பெரிய விமானத்தின் முன்பகுதி எடையை அந்த ட்ரக்கில் இறக்கினால் ட்ரக் என்ன ஆகும் என்று நம்ம மரமண்டைக்கு உறைக்கலயே!!) 

விளம்பரம் என்றாலே, மிகைப்படுத்துவது அல்லது பொய்சொல்வது என்றாகிவிட்ட இந்தக் காலத்தில் நாம்தான் எச்சரிக்கையாக எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்கவனமாக இருக்கணும்! 
இதுதான் அவர்களின் பலம்!
நமது நம்பிக்கைகளைக் குலைப்பது,
புதிய அவநம்பிக்கைகளை விதைப்பது!
நமது பண்பாட்டு வேர்களை அறுப்பது,
அவற்றை நாமே அவமானமாக உணர வைப்பது,

இளநீர் குடிப்பது அநாகரிகம்,
கோக் பெப்ஸி குடிப்பது நாகரிகம்!
பால் குடிப்பது சுகரை அதிகரிக்கும்
பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆப் எனர்ஜி!
சோறு என்பதே பழம்பஞ்சாங்கம்
ஃப்ரைட் ரைஸ்தான் பெஸ்ட்!
தைத்த சட்டை பெரிசுகளுக்கு
ரெடிமேடுதான் யூத் ட்ரெஸ்!
மஞ்சள்பூசி, ஜடைபின்னவது பாட்டிகள் காலம்
தலைவிரிகோலமா அலைவது இளசு ஸ்டைல்?
அட திருமணப் பத்திரிகையைக் கூட
ஆங்கிலத்தில் அடித்தால்தான் நாம 
டாட்டா பிர்லா பரம்பரைன்னு 
காமிக்க முடியும்!

மீண்டும் சொல்கிறேன்
இதுதான் அவர்களின் பலம்!
நமது நம்பிக்கைகளைக் குலைப்பது,
புதிய அவநம்பிக்கைகளை விதைப்பது!
நமது பண்பாட்டு வேர்களை அறுப்பது,
அவற்றை நாமே அவமானமாக உணர வைப்பது,

எப்படி நம்மை நாமே முட்டாளாக உணர வைப்பதில் வெற்றிபெறுகிறார்கள் பாருங்கள்

முழிச்சிக்கிட்டு இருக்கும்போதே முழியத் தோண்டுறாய்ங்களே!
கவனமா இருக்கணும் மக்கா! உஸ்!... அப்பா...

(படங்கள் - மீண்டும் நன்றி கூகுளார்தான்! )