வெள்ளி, 14 ஜூலை, 2017

உங்க BIGG-BOSS உம் ஜல்லிக்கட்டும் ஒன்னாலே?

சிநேகன்  சக்தி, கணேசிடம் சொல்கிறார் 
"நா அவள்(ஜூலி)கிட்ட இப்ப வரைக்கும் 
ஜல்லிக்கட்டப் பத்திப் பேசல, ஏன் தெரியுமா
பேசுனா, அவ இங்கயே தூக்குப் போட்டு செத்துடுவா!?!?"

BIGG-BOSS படத்தில், நாள் நேரத்தப் பார்த்துக் கொள்ளுங்கள்
(அதாவது 14-7-2017 காலை 9.45 மணியாம்! நா இந்தக் கருமத்தத் தொடர்ந்து பாக்குறதில்ல.. Hot-Starஇல் நேரமிருக்கப்ப பார்க்குறது.. உலகத்துல என்னதான் நடக்குதுன்னு நமக்கும் தெரியணுமில்ல?)

அட என்னாங்கடா இது!
டிஆர்பி ரேட்ட ஒசத்த அடுத்த அம்ப வீசுறீங்களாடா
உங்க பிக்-பாஸூம் 
ஜல்லிக்கட்டுப் போராட்டமும் 
ஒன்னாடா
உங்கள வரலாறு மன்னிக்காதுலே!
 
"உங்கள் மேடை உங்கள் நாக்கு!
எதுவேண்டுமானாலும் பேசுங்கள்!
உங்கள் கவிதை உங்கள் பதிப்பகம் 
எதுவேண்டுமானாலும் போடுங்கள்!

ஆனால்,
காலத்தின் விமர்சனம்

உங்கள் பிணங்களைக் கூட
தோண்டி எடுத்து வந்து தூக்கில் போடும் 
என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்" -
-வைரமுத்து கவிதை
இப்போது நினைவில் வருவது ஏன் நண்பர்களே?

இதிலுள்ள உளவியல், “சேரி பிகேவியர்”என்னும் காயத்திரியின் கீழ்த்தரமான பிகேவியர், பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்..காசு பண்ணவும் பேர்வாங்கவும் எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஆண்-பெண் இளசுகள், அவர்களைப் பகடைக்காயாக வைத்தாடும் ஸ்டார் விஜய்யின் தந்திரம், அதற்கு இரையாகிவிட்ட “உலக நாயகன் கமல்” என்று சொல்லப்பட்ட கலைஞன் இதைப்பற்றியெல்லாம் பிறகு விரிவாக எழுதுவேன். 

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் 
புகழ் என்பதற்கு ஆங்கிலத்தில் Famous என்று சொல்வார்கள் அதாவது நல்லவிதமாகப் பெயர் பெற்றவர் என்று பொருள்! 
கிட்டத்தட்ட இதே போலும் மற்றொரு சொல்  Notorious           இதற்குக் கீழ்த்தரமாக அறியப்பட்டவர் என்று பொருள்

இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல், 
நம்ம மந்திரிகள், காவல்துறை வண்டியில் ஏற்றப்படும் போதும் கையாட்டுவார்களே அதுமாதிரி பிக்-பாஸ் பற்றி நினைக்கிற நினைப்புகள் எவ்வளவு தவறு என்பது போகப்போகப் புரியும்

மற்ற மொழிகளில் இது வெற்றிபெற்றிருக்கலாம் 
அது நொட்டோரியஸ்! ஆனா,
தமிழில் இது “வௌங்காத பயக வேலை” 
என்பது விரைவில் புரியும்!

வியாழன், 13 ஜூலை, 2017

சன் டிவி சம்பாதிக்க சமூகம் சீரழிய வேண்டுமா?

மனிதர் எதைக்கண்டு அஞ்சினரோ, அதையே வணங்கத் தொடங்கினர் என்பது வரலாறு. 
மரம், மழை, மலை, இருள், நெருப்பு என இந்தப்பட்டியல் நீளும்! அவ்வக்காலத்தில் தம்கையில் இருந்த கொலைக் கருவிகளை இவற்றின் கையில் தந்து, மேலும் பயமுறுத்துவதும் பயப்படுவதும், இப்போது வரை மாற வில்லை என்பதொரு சுவையான செய்தி! அதனால்தான் ஏகே-47 காலத்திலும் முருகன் இன்னும் வேலோடும், இராமன் இன்னும் வில்-அம்போடும், ஆங்காங்கே பாவப்பட்டு இறந்த பெண்களான அம்மன் சாமிகள் கொடும்ஆயுதங்களோடு, தொங்கிய நாக்கோடும் இன்றும் கோவில் கொண்டிருக்கிறார்கள் என்பது சொல்லாமலே புரியும்.

திங்கள், 10 ஜூலை, 2017

“கபாலி” பா.இரஞ்சித்தின் மேடை நாடகம் “மஞ்சள்”


“மஞ்சள்”

“மஞ்சள் உங்களுக்கு புனிதம், 
எங்களுக்கு அவமானம்!!!!!”

பொதுவாக, 
மானம்-அவமானமெல்லாம் நாம் வைத்துக்கொண்டது தானே?
வயல்சேறு சிலருக்கு நாறும்! அதுவே உழவருக்கு வாசமாகும்!

மஞ்சள் பொதுவாக புனிதத்தின் அடையாளம் என்கிறோமல்லவா, அதை உடைத்து, “மஞ்சள் எங்களுக்கு அவமானம்” என்கிற, முகத்தில் அறையும் வசனங்களுடனும் எழுச்சிமிகு பாடல்களுடனும் வந்திருக்கும் ஒரு புதிய நாடகம்தான் “மஞ்சள்”

வியாழன், 6 ஜூலை, 2017

பார்க்க வேண்டிய படம் இதுதான்!

புறநகர் ரயில் பயணங்கள் சுவாரஸ்ய மானவை. பலவிதமான குழுக்களை பார்க் கலாம். கஞ்சிரா இசைத்துப் பாடுவார்கள். கானா குழுக்களும் உண்டு. புரட்சிக் குழுக்களும் அனலைக் கக்கும். ரயிலே தடம் புரண்டாலும் கவலைப்படாமல் மும்முரமாக ரம்மி ஆடுவார்கள். விதவிதமான விற்பனையாளர்கள் வருவார்கள்; ராகம் போட்டு விற்பார்கள். இத்தனை விதமான மனிதர்களுக்கு மத்தியில் தனி ஒருவனாக தாய்மொழி வழி கல்விக்காக குரல் கொடுத்து கவனம் ஈர்க்கிறார் வினோத்குமார்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்

Google+ Followers

Related Posts Plugin for WordPress, Blogger...