தமிழக பாஜக தலைவராகிறாரா ரஜினி?

அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்தெரிவித்தார். 


12
ஆண்டுகளுக்கு பின் தமது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். முதல் நாளான இன்று  திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பங்கேற்றார். திருமண மண்டபத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் முன்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த், எந்த திரைப்படமாக இருந்தாலும் நன்றாக இருந்தால்தான் வெற்றி பெறும் எனவும், ஆனால் அரசியல் அப்படி அல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும், 21 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தினால் அரசியல் கூட்டணி ஒன்றுக்கு ஆதரவளித்ததாகவும், இதனை பயன்படுத்தி தன் ரசிகர்களை ஒரு சிலர் அரசியலில் தவறாக பயன்படுத்தியதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்

தங்கள் குடும்பம், குழந்தைகளை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை ரசிகர்கள் அறவே தவிர்த்து விட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்                              


http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/5/2017/rajinis-opinion-and-idea-bjp-one-tamilisai 

ஆக...வண்டி கிளம்பிருச்சா?
இல்ல..
அடுத்த படம் ”2.0”க்கான விளம்பரமான்னு
ஓரிரு நாளில் தெரியும்.

“நா ஒரு தடவ சொன்னா..
நூறு தடவ சொன்ன மாதிரி” 
அது சரி, ஒரு தடவையிலயே
சரியாப் புரியிற மாதிரி சொன்னாத்தானே?

--------என்னவோ நடக்குது மர்மமா இருக்குது!-----------


11 கருத்துகள்:

  1. ரஜினி நல்ல நடிகனோ... இல்லை நல்ல மனிதனோ... படங்கள் பார்த்தும் பழக்கம் இல்லை... நேரிலும் பழக்கம் இல்லை ஆனால் நான் புரிந்து கொண்டதுவரை மிகச் சிறந்த வியாபாரி.

    சாமியே சரணம் ஐயப்பா
    தமிழ் நாட்டின் தலைவிதியை
    நீயே சொல்லப்பா

    பதிலளிநீக்கு
  2. எனக்கென்னவோ ரஜினி என்பதே பெரும் மாயையாகத்தான் தோன்றுகிறது
    அவர் வருவேன் வருவேன் என்று சொல்லில் சொல்லி ஒரு நாள் அரசியலுக்கு வந்தாலும், வெற்றி பெறுவது என்பது அத்துனை எளிதல்ல

    பதிலளிநீக்கு
  3. தமிழன் காலம் முழுவதும் பிறமொழிக்காரனின் அடிமையாய் வாழவேண்டும் என்பது சாபக்கேடு இது இன்னும் மோசமாகும் மாற்றம் வருவதற்கான அறிகுறியே இல்லை.

    சினிமா நடிகனை கடவுளாகவே வழிபட்ட தெலு(ங்)கர்கள்கூட மாறிவிட்டார்கள் I.T.யில் சாதனை செய்து விட்டார்கள்.

    தமிழன் பிறமாநிலங்களில் லைட்பாயாககூட வேலை செய்ய முடியாது அப்படியே கிடைத்தாலும் தமிழன் என்பதை மறைத்தே வேலை வாங்க முடியும் ஆனால் தமிழ் நாட்டிலோ புகழின் உச்சிக்கு வருபவன் எல்லோருமே... மலையாளி, கன்னடன், தெலு(ங்)கன் இவர்களே...

    பதிலளிநீக்கு
  4. என்னனமோ நடக்குது....சுயநலத்திற்காக

    பதிலளிநீக்கு
  5. விளம்பர உத்தியை முறையாகப் பயன்படுத்துவதில் முதலிடம் பெற்றவர் ரஜினிகாந்த்.

    பதிலளிநீக்கு
  6. வரும்....ஆனா வராது. வந்தாலும் தேறாது.

    பதிலளிநீக்கு
  7. நடிகனை நடிகனாக பார்க்க தொடங்கி விட்டனர் மக்கள். ஒருமுறை தவறு செய்தது போதும் (1996) என புரிந்து கொண்டனர் மக்கள். இன்னமும் இவரை நம்பினால் , பாவம் இன் நாடும் இன் நாட்டு மாக்களும்..............

    பதிலளிநீக்கு
  8. வந்தாரை வாழ வைத்தால் மட்டும் போதும்...

    பதிலளிநீக்கு
  9. கடைசி வரி நெற்றியடி! ஆனால், எனக்கென்னவோ இரசினி அரசியலுக்கு வருவார் எனத் தோன்றவில்லை. அரசியலுக்கு வர நினைப்பவர்கள் பொதுவாக இருண்டு காரணங்களின் அடிப்படையில்தாம் வருவார்கள். ஒன்று அரசியல் மூலம் பணம் - புகழ் போன்றவற்றை ஈட்ட வேண்டும் எனும் தன்னல நோக்கத்துக்காக. இரண்டாவது, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், தன் மக்களின் மண்ணின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் போன்ற பொதுநல தோக்கங்களுக்காக. இந்த இரண்டுமே இரசினிக்கு இல்லை அல்லது இருக்க வாய்ப்பில்லை. பணம், புகழ் ஆகியவற்றை வேறு யாரையும் விட உச்சக்கட்டமாகத் தன் துறையிலேயே எட்டி விட்டவர் இரசினி. இனி புதிதாக அரசியலுக்கு வந்துதான் அவர் அவற்றை ஈட்ட வேண்டும் எனும் தேவை இல்லை. இரண்டாவதாக, மக்கள் பிரச்சினைகள் பற்றியெல்லாம் அவருக்குப் பெரிதாக அக்கறை ஏதும் இருப்பதாக எந்நாளும் தெரிந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்ட அந்த நாளில் அவர் தானாக முன்வந்து அறிக்கை விட்டிருக்க வேண்டும்! தெருவுக்கு வந்து போராடியிருக்க வேண்டும்! தன் நண்பரான கருணாநிதியோடு அது குறித்துச் சண்டை இட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் அவர் எதுவுமே செய்த்ததாகத் தெரியவில்லை. ஈழப் பிரச்சினை மட்டுமில்லை, தமிழ் மீனவர் படுகொலை, அணு உலைப் பிரச்சினை போன்றவை முதற்கொண்டு அண்மைய பிரச்சினைகளான சல்லிக்கட்டு, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வுத் திணிப்பு, இந்தித் திணிப்பு என எதிலுமே அவர் ஒருபொழுதும் தானாக முன்வந்து போராடியதோ கருத்துரைத்ததோ கிடையாது. காவிரிப் பிரச்சினைக்காக அவர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியது கூட அதற்கு முந்தைய நாள் காவிரி நீர் உரிமை பற்றிய திரைப்படக் கலைஞர்கள் போராட்டத்தில் அவர் கலந்து கொள்ள முடியாமல் போனதால்தான். ஈழத் தமிழர்களுக்காக அவர் குரல் கொடுத்தது கூட மற்ற கலைஞர்களோடு இணைந்து பத்தோடு பதினொன்றாகத்தான்.


    எல்லாவற்றுக்கும் மேலாக, இரசினி ஒரு தனிமை விரும்பி. இறையியலாளர். எதற்காகவும் தன்னுடைய மன அமைதியை விட்டுக் கொடுக்க விரும்பாதவர். இப்படிப்பட்ட குணங்களுக்கும் அரசியலுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. எனவே அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பது வீண்! தமிழ் மக்கள் உருப்படியாக வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லாதிங்கள், மே 22, 2017

    Ayya, when is padivar sandippu

    பதிலளிநீக்கு