மின்னூல்களாக என் நூல்கள் …

(வெளிநாடு வாழ் நண்பர்களுக்கான சிறப்புச் செய்தி) 
.நா.கலை-இலக்கியப் பெருமன்றத்தின் முதற்பரிசை வென்றதோடு,
மதுரைக் காமராசர் பல்கலைக்கழக எம்..தமிழ்வகுப்புக்குசுமார் 15ஆண்டுகள்
 பாடநூலாக  இருந்த என் கவிதைத் தொகுப்பு இது
ஐந்தமிழ் இன்று ஆறாம்தமிழாக வளர்ந்து வரும்போது, நாமும் வளர்ந்தாக வேண்டுமல்லவா? வளர் தமிழுக்கு நம்மையும்  தகவமைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியாக நமது நூல்களை மின்னூலாக்க உதவியது பெங்களுரு “புஸ்தகா” நிறுவனம்.
புதுக்கோட்டையில் அதற்கென்றே நம் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய மின்னூல் வழிகாட்டு முகாமில் சுமார் 40எழுத்தாளர்கள் தந்த நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வரிசையாக மின்னூலாகி வருகின்றன.. இப்போது அதில் சுமார் 20எழுத்தாளர்களின் நூல்கள் மின்னம்பலம் ஏறிவிட்ட மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுக்குத் தெரிவித்து மகிழ்கிறேன். ( புஸ்தகாவில் பார்க்கலாம் )
வெளிவந்த அடுத்த ஆண்டே இரண்டாம் பதிப்புக் கண்டு, 
நான்கு  விருதுகளைப் பெற்ற,  நல்ல கல்விக்கான சிந்தனைகளின்
கட்டுரைத் தொகுப்பு. கல்கி, செம்மலர், புதியதலைமுறை, அமுத சுரபி  உள்ளிட்ட பல்வேறு இதழ்களின் பாராட்டுப் பெற்றதோடு,
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின்
கலைஞர் தொலைக்காட்சி அறிமுகமும் பெற்ற நூல்
(இன்னும் நம் இருபது எழுத்தாளர்களின் 50க்கு மேற்பட்ட நூல்கள் வரவேண்டி யுள்ளது! … நம்ம வேகம் அவர்களிடம் இல்லல்ல..?)
சரி..மற்ற நண்பர்களிடம் - “விரைவில் வரும்” எனும் புஸ்தகாவின் உறுதி மொழியைத் தெரிவித்தும் - தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் எனது நூல்கள் மின்னூலான செய்தியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(சங்க இலக்கியம் முதலாக, 
புதுக்கவிதை வரலாறு, ஜெயகாந்தன்,.நா.சு. உள்ளிட்ட 
ஆழமான இலக்கியகட்டுரைகளின் தொகுப்பு)
திருப்பூர்த்தமிழ்ச் சங்க விருது பெற்ற நூல்
பேராசிரியர் அருணன் அவர்களால்
சன் தொ.கா.அறிமுகமும் பெற்றது
--------------------------------------------------------------------------
மின்னூல்கள் பெறுவதற்கான இணைப்புக்குச் செல்ல –

16 கருத்துகள்:

  1. மகிழ்வூட்டும் செய்தி
    ஆறாம் தமிழை முன்னெடுத்துச் செல்வதில்
    புஸ்தகா நிறுவனமும்
    தாங்களும் இணைந்து முன்னிற்பது
    மகிழ்வளிக்க்றது
    நல்ல துவக்கம் என்றும் சிற்ப்பாகவே தொடரும்
    என்பது நாமெல்லாம் அறிந்ததுதானே
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்காகவே புஸ்தகா தளத்தில் ஒருமாத சந்தா செலுத்தினேன். புத்தகங்கள் இறங்கிக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய mobileApp கொஞ்சம் slow என்று அவர்களே சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் அப்படித்தான் இருக்கும். சில மாதங்களில் நன்றாகவரும் என்று நம்புகிறேன். இந்தியா திரும்பியவுடன் எனது மூன்று நூல்களைக் கொடுக்கலாம் என்று தயாரித்துவைத்திருக்கிறேன்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    பதிலளிநீக்கு
  3. தங்களின் முயற்சியால்
    அயரா உழைப்பால்
    மின்னூல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது ஐயா
    புதுகையில் தாங்கள் மேற்கொண்டே முயற்சியால் இணைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எல்லாம் மின்னூலாய் மின்னும் காட்சி கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வழிகாட்டலால் எனது “திருப்புக தேரை“ சங்க இலக்கிய நாடக நூலும், “சிந்திசைப்பாடல்கள்“ இசைப்பாடல் தொகுப்பு நூலும், “முத்தான முதலுதவிகள்” என்னும் விழிப்புணர்வு நூலும் “புஸ்தகா” மூலம் மின்னூலாக உருப்பெற்றுள்ளன. தங்களின் வழிகாட்டலுக்கு நன்றிகளய்யா.

    பதிலளிநீக்கு
  5. எழுத்தாளர் சமூகத்துக்கு தாங்கள் வழிகாட்டியாய் இருப்பதில் மகிழ்ச்சி.நானுன் முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. அருமை அப்பா.தங்களின் கம்பன் தமிழும் கணினித் தமிழும் நூலை நீண்ட நாட்களாக கேட்டு வந்தேன் அதற்கான தீர்வாக இந்த மின்னூல்கள் கிடைக்க பெற்றுள்ளன.நன்றி அப்பா.

    பதிலளிநீக்கு
  7. தமிழார்வம் என்பது வெறும் சேவைக்கு மட்டுமே என்றும், தமிழ் சோறு போடாது என்றும் இருந்த நிலையை மாற்றக்கூடிய அயனான முயற்சி இது! வலைப்பதிவு எழுதுவது என்பது ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்களுக்கு வெறுமே அவர்களின் மொழித் திறமையை வெளிக்காட்டுவதாக மட்டுமன்றி வருவாய் ஈட்டும் வழியாகவும் இருக்கும் நிலையில் தமிழ்ப் பதிவர்களுக்கு அஃது எட்டாக்கனியாக இருந்த அவலத்தைப் போக்கும் சீரிய முன்னெடுப்பு இது! இதற்காகத் தாங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்! உளமார்ந்த நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களின் முயற்சி போற்றுதற்குரியது.

    பதிலளிநீக்கு
  9. ஆசிரியர் அய்யாவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வழிகாட்டுதலால் தான், இன்று பதிவர்கள் பலருடைய நூல்கள் மின்னூலாக்கம் பெற்று வருகின்றன. அதற்கு உங்களுக்குப் பதிவர்களாகிய நாங்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். புதிய மரபுகள் என்ற மின்னூலை அது வெளிவந்தவுடனே வாங்கிவிட்டேன். இன்னும் படிக்கத் துவங்கவில்லை. இன்னும் பல நூல்கள் நீங்கள் வெளியிட வேண்டும் என்ற வாழ்த்துடன் கூடிய பாராட்டுகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்.
    அறிவினைப் பொதுமை செய்தல்

    வாழ்த்துகள் ஐயா.

    தொடர்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள் அண்ணா. இன்னும் பல நூல்கள்
    மின்னூலாக்கப்படவேண்டும்

    பதிலளிநீக்கு