பாகுபலி - சத்தியராஜ் பேசியது என்ன?


பிரச்சினைக்குக் காரணமான
-கொஞ்சம் கூடுதலான-
சத்தியராஜ் அவர்களின்
பேச்சும்
பாகுபலி-2 படத்திற்குக்
கர்நாடக இனவெறித்தலைவர்
வாட்டாள் நாகராஜ்
எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்
சத்தியராஜ் அவர்களின்
இன்றைய விளக்கமும்
“நடிகனாக இருப்பதை விட.. 
தமிழனாக இறப்பதே பெருமை” 
Sathyaraj Speech against Vatal Nagaraj | Bahubali Release Problem

காணொலி இணைப்பு-

நன்றி - youtube.com, 
தொடர்புடைய இணையத் தொலைக்காட்சி


தமிழருக்காகத் தொடர்ந்து குரல்கொடுப்பேன்,
பயந்தவர் யாரும் என்னை வைத்துப் 
படமெடுக்க வேண்டாம்” 
என்று
 -திரைத்துறையில் இருந்துகொண்டு-
சொல்லும் சத்தியராஜ் அவர்களை
 பாராட்டத்தான் வேண்டும்!
என்றாலும்
முன்னர்ப் பேசிய பேச்சில்
சில வார்த்ததைகளை அவர்
சிந்தித்துத் தவிர்த்திருக்கலாம்!
என்றாலும், இப்போதைய
பொறுப்பான,
தன்மானத்துடன் கூடிய பேச்சைப்
பாராட்டுவோம்!


11 கருத்துகள்:

  1. பெயரில்லாசனி, ஏப்ரல் 22, 2017

    இதில் தன்மானம் எங்கு உள்ளது? ஒருபோதும் மன்னிப்பு கேட்க முடியாது, படம் வெளியாகவில்லை என்றால் என் முழு சம்பளத்தையும் விட்டு கொடுக்கிறேன் என்று கூறியருந்தால், அது உத்தம்ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்மானத்துடன் தான் 9 வருடத்தின் முன் பேசிய பேச்சு இன்று யாரையும் பாதித்துவிடகுடாது என கவனமாக தன்மானத்துடன் [உங்கள் சத்தியராஐ்]என்பதை நிறுபித்துவிட்டார்

      நீக்கு
    2. பெயரில்லாசனி, ஏப்ரல் 22, 2017

      அந்த பேச்சை கேட்டீர்களா? பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்ற இங்கிதம் தெரியாத இந்த நடிகர், தன் மகனுக்கு மந்திரம் ஓதி தாலி கட்ட வைத்தவர்கள், தன்னை மூடநம்பிக்கை இல்லாத தமிழர் என்று மார் தட்டி கொள்கிறார்.

      நீக்கு
  2. SIR..i don't know why cine field persons are involved in every linguistic problems..these are all stunts increasing their publicity..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான ஒரு கணிப்பீடு.
      இது மக்களை கவரும் அவர்களது ஸ்டண்ட் நடவடிக்கைகளே.
      அதே போலவே ரஜினிகாந்த் இலங்கை செல்கிறார் என்றால் அதை தடுக்கும் திருமாளவன் செயலும்.திருமாளவன் தனது சுய விளம்பரத்துக்காக செய்து கொண்டது.

      நீக்கு
  3. பாராட்டுவோம் என்றாலும் கர்நாடகா எல்லாவற்றுக்கும் பிரச்சினை செய்யும் போது நாம் வாளாதிருப்பதும் அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிவதும் கேவலம்.

    பதிலளிநீக்கு
  4. கர்நாடக இன வெறி தலைவர் வாட்டாள் நாகராஜ்.
    அவர் மாதிரியே இனவெறி பேசுபவர் தமிழர் நடிகர் சத்யராஜ்.

    பதிலளிநீக்கு
  5. சினிமா நடிகர்களுக்கு காசு தான் முக்கியம் என்பதை சத்தியராஜ் உணர்த்திவிட்டார்

    பதிலளிநீக்கு
  6. தமிழன் சத்தியராஜ் பேச்சு அருமை, நானும் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. மிகவும் நடுநிலையாக எழுதியிருக்கிறீர்கள் ஐயா! டுவிட்டரில் முதல் நாள் 'சத்யராஜ் மன்னிப்புக் கேட்கக்கூடாது, கேட்க மாட்டார்' என எழுதிக் கொண்டிருந்தார்கள். வருத்தம் தெரிவித்த பிறகு 'கட்டப்பா தமிழர்களை முதுகில் குத்தி விட்டார்' என்கிற ரீதியில் அடுத்த நாள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது சத்யராஜ் கொடுத்த விளக்கத்துக்கே கெத்தாக வேறு வகையிலெல்லாம் விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு