தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

திங்கள், 13 பிப்ரவரி, 2017

ஐந்து லட்சம் தந்த நட்புக்கு நன்றி !

நேற்று முதல்நாள் பதிவிடும்போது பார்த்தேன் – ஐந்துலட்சம் பார்வையாளர்களை நெருங்கியிருந்தது!


நேற்று முன்தினம் காலையில் குற்றாலத்தில் பேசிவிட்டு,
மாலையில் புதுக்கோட்டையில் நூல்வெளியீடு!
நேற்றுக்காலை முதல் மாலைவரை-
நம் கணினித் தமிழ்ச்சங்கத்தின்  - பதிவர் திருவிழாவில்  உணவுப் பொறுப்பை ஏற்றிருந்தாரே தங்கை- ...ஜெயா
அவரது மகன் திருமணம் திருச்சியில்
தடபுடலாக அருமையாக நடந்தது!
நம் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
தம் துணைவியாருடன் வந்திருந்தார்கள்!
எனவே
 இரண்டு நாளாய்
வலைப்பக்கம் வரமுடியவில்லை

இன்று பார்த்தால் ஐந்துலட்சம் கடந்து மேலும்
ஓராயிரத்தை நெருங்குவதாகக் காட்டுகிறது!  
நன்றி நன்றி நன்றி 
நண்பர்களே!


                                                           ஆறாண்டுகளில் 
எழுநூறு பதிவுகள் 
எழுதியிருக்கிறேன்!
5,00,000 பக்கப்பார்வையாளரைப் பெற்றிருப்பது ஒன்றும் பெரிய அதிசயமில்லைதான். ஆனாலும் சமீப காலமாக, கணினித் தமிழ்ச் சங்கப் பயிற்சிமுகாம், மின்னூல் முகாம், மற்றும் எனது இலக்கிய உரை நிகழ்வுகள் பங்கேற்பு என, செயல் பாடுகள் அதிகரிக்க, அதிகரிக்க, எனது சுய எழுத்தும் படிப்பும் குறைந்துவிட்டது!
ஆயினும் ஒவ்வொரு நாளும் சுமார் ஆயிரம் பக்கங்கள் பார்வையிடப்படும் வலைப்பக்கமாக
நமது வளரும் கவிதை வளர்கிறது!

எனது பணிஓய்வின்போது நான் எழுதிய
“நன்றி வணக்கம்” 
பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்.

அனேமாக 
இயன்றவரை
இதன்படியே 
நடந்துவருகிறேன் 
என்றாலும் -
நான் இன்னும் இன்னும் இன்னும்
படிக்கவேண்டிய நூல்கள் 
எழுத வேண்டிய படைப்புகள்
இயங்க வேண்டிய களங்கள் 
ஏராளம் உள்ளன.


உங்கள் அன்போடும் 
ஆதரவோடும் 
தொடர்வேன், 
நன்றி, வணக்கம்!


38 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி அய்யா. காரைக்குடி புத்தகத் திருவிழா நிறைவுவிழா 19-02-2017 அன்று - மாலை சிறப்புரையாற்ற என்னை அழைத்திருக்கிறார்கள். சந்திக்கலாமா? உங்களுக்குப் பக்கம் தானே? வாருங்கள்! (தங்கள் தனிமின்னஞ்சல் என்னிடம் இல்லையே?)

   நீக்கு
 2. பதில்கள்
  1. அய்யா, இந்த ஐந்துலட்சத்தில் பாதி உங்களால் இயன்றது..அவ்வளவு சொல்லிக் கொடுத்திருக்கும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. (நீங்கள் சொல்லித்தந்ததையெல்லாம் அப்படியே கற்றுக் கொண்டிருந்தால் இன்னும் சிலலட்சம் உயர்ந்து நின்றிருக்கும் நம்ம லெவல் அவ்வளவுதான்!)

   நீக்கு
 3. ஐந்து லட்சம் ஐம்பது லட்சமாக மாறி கோடியை சீக்கிரம் தொட வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா! இமயமலை ஒரு சிறு பொதிகை மலையை வாழ்த்துகிறது! உங்களின் நையாண்டி எழுத்து எனக்கு வரவில்லையே என்னும் பொறாமையில் நான் வெந்துகொண்டிருக்க, நீங்கள் உங்கள் அன்பென்னும் குளிர்நீரைத் தெளித்து அணைத்து விடுகிறீர்கள்...ம்!...?
   சோ அவர்களின் நையாண்டி எனக்கும் பிடிக்கும் ஆனால் அவரது அரசியல் குழப்படி பிடிக்காது (கம்யூனிஸ்டுகளைப் பிடிக்கும் கம்யூனிசம் பிடிக்காது எனும் தெளிவான குழப்பவாதி அவர்) ஆனால் நீங்கள் நடையிலும், நோக்கிலும் தெளிவாகவே இருக்கிறீர்கள்! வணங்குகிறேன்.

   நீக்கு
 4. ஐயா என்னை மாதிரி நீங்களும் கணக்கில் வீக்கா? மேலே 5 லட்சம் என்று போட்டுவிட்டு பதிவின் உள்ளே ஐம்பாதியிரம் என்று டைப்போ மிஸ்டேக் பண்ணிட்டேங்களாய்யா கவனிக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இப்பத்தான் பார்த்தேன், திருத்திவிட்டேன்! நாம பாரதி மாதிரியில்ல..?? (கணக்கு பிணக்கு சுணக்கு ஆமணக்கு!) நன்றி நண்பரே!

   நீக்கு
 5. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா/அண்ணா. மேலும் பல கோடிகள் தொட்டு வெற்றி வாகை சூடிட வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 6. மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 7. நூற்றுக்கணக்கானவர்களுக்கு, தலா ஐந்து கோடி கொடுப்பதாகச் சொல்லியும், அது போதாது என்று சொல்லி விட்டார்கள் என்பது இன்றைய சூடான செய்தியாக உள்ளது.

  இந்த நிலையில் ......

  தாங்கள் பல நாட்கள் கஷ்டப்பட்டு, பலராலும் மனமுவந்து கொடுக்கப்பட்டுள்ள, ஐந்து லட்சம் கிடைத்துள்ளதிலேயே, மிகப்பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளீர்கள்.

  எங்களுக்கும் இதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துகள் சார். தங்களின் வலைப்பக்கம் வந்து செல்லும் போதெல்லாம் ஏதோ ஒன்றை பெற்றுச் செல்வோம். அந்த வகையில் இந்த எண்ணிக்கை இன்னும் உயரும்.

  பதிலளிநீக்கு
 9. வியப்பளிக்கிறது வாழ்த்துக்கள் அய்யா

  பதிலளிநீக்கு
 10. வியப்பளிக்கிறது வாழ்த்துக்கள் அய்யா

  பதிலளிநீக்கு
 11. மேலும் பல லட்சங்கள் தொட வாழ்த்துக்கள் அய்யா!

  பதிலளிநீக்கு
 12. ஓ ஐந்து லட்சமா!! மிக்க மகிழ்ச்சி ஐயா! சிறுவனின் பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. படித்த ஐந்து லட்சம் பெரும் தலா ஒரு ரூபாய் கொடுத்திருந்தால்...எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! அதற்கொரு வழி காணவேண்டும் ஐயா!
  அன்புடன்: இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 14. உணவுப் பொறுப்பை ஏற்று இருந்தாரே என்று ஞாபகப் படுத்தியவுடன் ஜெயா மேடம் நினைவுக்கு வந்துவிட்டார் !பதிவர் சந்திப்பிலேயே சாப்பாட்டு விஷயத்தில் கலக்கியவர் ,மகன் கல்யாணம் என்றால் அசத்தியிருப்பாரே !மணமக்களுக்கு வாழ்த்துகள் !
  வளரும் கவிதை குறுகிய காலத்தில் இவ்வளவு வளர்ச்சி அடைந்து வளர்வதற்கு வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 15. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் அப்பா தொடருங்கள் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. அண்ணா, மனமார்ந்த வாழ்த்துகள். எத்துனைப் பணிகள், அதற்கிடையே வலைத்தளத்தில் சாதனை! பிரமாதம் அண்ணா.

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துகள் ஐயா!ஐந்து லட்சம் என்பது மிக நல்ல எண்ணிக்கை பொழுது போக்காக அல்லாது சமுதாய சிந்தனையும் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களின் பார்வையிட்ட வர்களின் எண்ணிக்கையாகும் . பார்வைகளின் எண்ணிக்கயை இன்னும் பல்கிப் பெருகும் என்பதில் ஐயமில்லை

  பதிலளிநீக்கு
 18. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள் ஐயா !

  பதிலளிநீக்கு
 19. எண்ணிக்கையில் அய்ந்து இலட்சம் . எண்ணங்களால் கோடிப்பேர் நெஞ்சங்களில்... பெருகிடப் பெருகிட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துகள் அய்யா. உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும்.(அன்றே இந்த கட்டுரையைப் படித்து விட்டேன். அரசியல் பரபரப்பில் வாழ்த்து சொல்ல தாமதமாகி விட்டது)

  பதிலளிநீக்கு
 21. எங்களுக்கும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது அய்யா. மேலும் மேலும் வளர மனசார வாழ்த்துகிறேன்
  நட்பின் வழியில்
  சோலச்சி புதுக்கோட்டை

  பதிலளிநீக்கு
 22. அன்புள்ள ஐயா..

  வணக்கம். உண்மையில் இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. 5 இலட்சம் பார்வையாளர்கள் என்பது சாதாரணம் அல்ல. மேலும் உங்களுடைய பதிவைப் படிப்பவர்கள் நிச்சயம் அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். எனவே 5 இலட்சம் என்பது இன்னும் கூடுதலானது. இரண்டுமுறையிலான தாங்கள் அழைத்த நிகழ்வுகளுக்கு என்னால் கலந்துகொள்ளமுடியாமல் போனதற்கு மன்னிக்கவும். காரணம் என்னுடைய பணிகள்.ஏற்னெவே திட்டமிடப்பட்டு நான் நாள் குறித்து சொன்ன நிகழ்வுகள். உங்களுடைய வலைப்பக்கம் வருவதும் உங்களின் பதிவுகளை வாசிப்பதும் தமிழுக்கான தொண்டாகவே நான் கருதுகிறேன். மீண்டும் என் மனம்நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 23. ஆட்சியின் அவலங்களுக்கு பராட்டு பட்டம் வழங்காத நேர்மை. வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 24. ஐந்து இலட்சம் பத்து இலட்சமாகி
  நூறு இலட்சம் தொட வாழ்த்துகிறேன் ...!

  பதிலளிநீக்கு
 25. தங்கள் பதிவுகள் பல்கிப்பெருக இனிய நல்வாழ்த்துக்கள்!
  தோழமையுடன்,
  செ. நடேசன்

  பதிலளிநீக்கு