வியாழன், 8 ஜூன், 2017

கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!


கவிஞர் சோலச்சியின்
“கருப்புச்சட்டையும்
கத்திக் கம்புகளும்”
சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை-[_ன்,8 புதுக்கோட்டை அருகிலுள்ள வயலோகம் துர்க்கா அரங்கில் நடைபெற்ற கவிஞர் சோலச்சியின் “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “படித்தவர்கள் வெறும் பார்வையாளராகவே இருந்துவிடாமல், நாட்டில் நடந்துவரும் நல்லனவற்றின் பங்கேற்பா ளராகவும் வரவேண்டும்”என்றார்.
நூல் வெளியீட்டுவிழாவிற்கு மருத்துவர் அழகேசன் தலைமை யேற்றார். கவிஞர் சோலச்சியின் மூன்றாவது நூல் மற்றும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலைக் கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட, முதல்பிரதியைக் கவிஞர் மு.கீதா பெற்றுக் கொண்டு வாழ்த்தினார். 
இரண்டாவது பிரதியை எழுத்தாளர் ராசி.பன்னீர் செல்வம் வெளியிட்டு வாழ்த்த, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்செயலர் கு.கணேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.
நூலைவெளியிட்ட கவிஞர் நா.முத்துநிலவன் பேசும்போது, “கருப்புச் சட்டையுடன் சிவப்புச்சட்டை, நீலச்சட்டைகளும் இணைந்துதான் இப்போது கத்திக்கம்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழின் முதல் சிறுகதை எனப்படும் வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரசமரம் ஏராளமான விழுதுகளை விட்டு வளர்ந்திருக்கிறது. ஆலமரம்தான் விழுதுவிடும் என்பது அறிவியல். அரசமரமும் விழுதுவிடும் என்பது தமிழ்ச்சிறுகதை சொல்லும் அபூர்வ வரலாறு! பின்னர் வந்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் கந்தர்வன், பிரபஞ்சனின் முழுத் தொகுப்புகள் வந்துள்ளன. இன்னும் எழுத வேண்டிய கதைக்களங்கள் நம்முன்னே விரிந்தவாறு உள்ளன. சிறுகதைகளில் சிகரத்தைத் தொட்ட ஜெயகாந்தன், பின்னர் குறுநாவல் மற்றும் நாவல்களில் அந்தச் சிகரத்தை விட்டுக் கீழிறங்கியதையும் 
தமிழ்ப் படைப்புலகம் பார்த்திருக்கிறது. 
கதைகளை அரசியல் மற்றும் சமூக ரீதியாகப் புரிந்துகொள்ளப் படித்துக்கொண்டே எழுதிவர வேண்டிய அவசியமுள்ளது. சோலச்சி மிகஅருமையான கதைக்கருக்களை எடுத்துக் கதைகளை எழுதியிருக்கிறார் இரண்டாவது தொகுப்பிலும் ஈரம் காய்ந்துவிடாமல் எழுதிவருகிறார். திரைக்கலைஞர் பாரதிராஜாவும் சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியும் படம்பிடித்த தமிழகக் கிராமங்களின் உண்மையான பிரச்சினைகளைத் தொட்டு எழுதிவரும் சோலச்சி எழுத்தில் வளர வாழ்த்துகிறேன்” என்று பேசியதோடு, நூலாசிரியர் மற்றும் அவரது தந்தையாருக்கு சால்வையணிவித்துச் சிறப்புச் செய்தார்.
விழாவில், ஊடகர் ம.மு.கண்ணன், எழுத்தாளர்கள்  அண்டனூர் சுரா, மிடறு முருகதாஸ், கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன், சச்சின் சிவா, மீரா.செல்வக்குமார், ஸ்ரீமலையப்பன், தென்றல்சாய் மற்றும் நூலை வெளியிட்டுத் தந்த பதிப்பாளர் நந்தவனம் சந்திரசேகரனுடன், ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் ஜோசப் பன்னீர்செல்வம் (தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி), நாகராஜன்(ஆசிரியர் மன்றம்), செல்லத்துரை (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ரவிச்சந்திரன் (ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள்.
கவிஞர் வெள்ளைச் சாமி தொகுத்துவழங்கினார். முன்னதாக கவிஞர் தீரா வரவேற்க, நன்றி மற்றும் ஏற்புரையைக் கவிஞர் சோலச்சி வழங்கினார். நிகழ்ச்சியை வீதி கலை-இலக்கிய நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
------------------------------------------------------------------------
செய்தி வெளியீட்டுக்கு நன்றி

புதுகை வரலாறு, தீக்கதிர், தினமணி 
  நாளிதழ்கள் 08-6-2017

வெள்ளி, 2 ஜூன், 2017

நவகவியின் பாட்டிசைப் பெருவெள்ளம்!
வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாமல், கேட்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும்  அல்லது அவஸ்தைப் படுத்தும் பாடல்கள் சில எல்லாருக்கும் இருக்கும்தானே? அப்படியானவை, கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் மட்டுமல்ல! நவகவியின் பாடல்களும்தான் என்பதைக் கம்பீரமாய்ச் சொல்ல வந்திருக்கும் பாடல் தொகுப்பு ”நவகவி1000”!இலைகள் அழுத ஒரு மழை இரவு,
     எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது
  கண்டேன் ஒரு காட்சி, கண்டெனது
    கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது
இந்த வரிகளை 25வருடமுன்பே முதன்முதலாகக் கரிசல் கிருஷ்ணசாமியின் காந்தக் குரலில் கேட்டபோது ஏற்பட்ட உணர்வு இப்போதும் மாறாதிருக்கிறது!

புதன், 17 மே, 2017

தமிழக பாஜக தலைவராகிறாரா ரஜினி?

அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்தெரிவித்தார். 

12
ஆண்டுகளுக்கு பின் தமது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். முதல் நாளான இன்று  திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பங்கேற்றார். திருமண மண்டபத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் முன்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த், எந்த திரைப்படமாக இருந்தாலும் நன்றாக இருந்தால்தான் வெற்றி பெறும் எனவும், ஆனால் அரசியல் அப்படி அல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும், 21 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தினால் அரசியல் கூட்டணி ஒன்றுக்கு ஆதரவளித்ததாகவும், இதனை பயன்படுத்தி தன் ரசிகர்களை ஒரு சிலர் அரசியலில் தவறாக பயன்படுத்தியதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்

தங்கள் குடும்பம், குழந்தைகளை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை ரசிகர்கள் அறவே தவிர்த்து விட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்                              


http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/5/2017/rajinis-opinion-and-idea-bjp-one-tamilisai 

ஆக...வண்டி கிளம்பிருச்சா?
இல்ல..
அடுத்த படம் ”2.0”க்கான விளம்பரமான்னு
ஓரிரு நாளில் தெரியும்.

“நா ஒரு தடவ சொன்னா..
நூறு தடவ சொன்ன மாதிரி” 
அது சரி, ஒரு தடவையிலயே
சரியாப் புரியிற மாதிரி சொன்னாத்தானே?

--------என்னவோ நடக்குது மர்மமா இருக்குது!-----------


திங்கள், 15 மே, 2017

இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? -– எமது போராட்ட விளக்கம்


இந்தியும் தமிழும்... 
தமிழின் வயது யாருக்கும் தெரியாது! ஏனெனில், “இவள் என்றுபிறந்தனள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!” 5,000ஆண்டுகளுக்கும் மேலானது என்பதை ஊரறியும், உலகறியும் மொகலாய அரசன் கோரிமுகமது இந்தியாவின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்றி, அங்குத் தமது ஆட்சியை நிலைநாட்ட தில்லியை மையமாகக் கொண்டு ஆளத் தொடங்கியபோது உருதுமொழியுடன் பிராகிருதம் கலந்துபேசிய மக்களிடம் உருவான கலப்பு மொழியே இந்தி மொழி. இதன் காலம் கி.பி.850!  

திங்கள், 8 மே, 2017

டவுசர் கிழியட்டும்!

தெளிவாகச் சொல்லுங்கள்-
“நீட்“டாகப் போன எங்கள் பிள்ளைகளின்
சட்டையைக் கிழித்த
மோடி அரசின்
“டவுசர்” கிழியும்வரை
போராட்டங்கள் தொடரட்டும்!
----நா.முத்துநிலவன்.
------------------------------------------------- 
செய்தி,படத்துக்கு நன்றி - 
தினமணி நாளிதழ்-08-5-2017

வியாழன், 4 மே, 2017

“நீட்”தேர்வு – சமத்துவத்துக்கு சாவுமணி!( NEET EXAM DISPUTE)


அய்யா காமராசர் முதல்வராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரியில் சேரவிரும்பிய சுமார் 100 மாணவர்களின் விண்ணப்பங்கள், முதல்வரின் தனிச் சிபாரிசுக்கு வந்ததாம். 10சீட்டுகள், முதல்வரால் தேர்வு செய்யப்படும் சிறப்பு அனுமதி இடமாகக் கருதி ஏழை மாணவர்க்கு வழங்கப்படுவது வழக்கம்.
பல்வேறு வேலைகளுக்கிடையில் பத்தே நிமிடத்தில் அந்த 10சீட்டுக்குரிய விண்ணப்பங்களைத் தேர்வுசெய்தாராம் காமராசர். இதுகண்ட ஊழியர்கள் “எப்படி இவ்வளவு வேகமாத் தேர்வு செய்தீர்கள்?” என வியந்தார்களாம்.
 “விண்ணப்பத்துல, அப்பா கையெழுத்துப் போடுற இடத்துல கைநாட்டு வச்சிருந்த விண்ணப்பங்களாத் தேடி எடுக்கப் பத்துநிமிசம் போதும்ல ன்னேன்?!” என்று காமராசர் பதில் சொன்னதாகச் சொல்வார்கள்!
அதாவது, “படிக்காத பெற்றோர்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கே முன்னுரிமை தரவேண்டும்” என்று காமராசர் நினைத்திருக்கிறார்!
இது அப்போ!!!!
ஆனால் இப்போ...?

தானடித்த மூப்பாக மத்திய அரசில் நடப்பதென்ன?
“யாருடைய தந்தை, லட்சம்-கோடிகளைக் கொட்டிக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டும் விண்ணப்பித்தால் போதும்” என அறிவிக்கவில்லையே தவிர, மாநிலங்களின் கருத்தையும் இதுபற்றிக் கேட்காமல், அப்படித்தான் சட்டம் பேசுகிறது மத்திய மோடி அரசு !
“நீட்” தேர்வு என்றால் என்ன? 

திங்கள், 1 மே, 2017

மே-தை மாதமே!

(மே தின வாழ்த்துக் கவிதை)


எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு,
         
எட்டுமணி நேர உறக்கம் - இதை
கெட்டமன மூலதன வர்க்கமே! தருகஎனக்
         
கேட்டெழுந்த போரின் தொடக்கம்             (1)

திங்கள், 24 ஏப்ரல், 2017

இன்று ஜெயகாந்தன் பிறந்தநாள் - அஞ்சலிக் கட்டுரை


மறக்க 
முடியாத
எழுத்தாளனின்
பிறந்த நாளில்

அவரை
வணங்கி,
ஒரு
மறு 
விமர்சனம்!


---------------------------------------         

ஒரு ஜெயகாந்தனும்
சில  ஜெயகாந்தன்களும் - 
-- நா.முத்து நிலவன் --
----------------------------------------------------------------------------
 மணிவிழாக் கருத்தரங்கம் முடிந்தது.
கார்களின் நெரிசலுக்கிடையே நடந்து போய்க்கொண்டிருந்த முனியம்மாஇரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பிய கங்காவை கவனித்துவிட்டாள்.
 “இன்னாம்மே ! கண்டுக்காத போய்க்கினேகீறியே!” ஹக்காங்
 “அட ! நம்ம முனிம்மா!” வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டாள் கங்கா.
 “சேச்சே ! என்ன முனியம்மா நா பாக்கல.. ஹவ் ஆர்யூசெமினார்க்கு வந்திருந்தியா?
 “வந்திருந்தியாவாமீட்டங்கி நடக்கச்சொல்ல அம்மாநேரமும் ஒரு மூலையில குந்திக்கினு அல்லாத்தியும் பாத்துகினுதான் இர்ந்தோம்…”
 “அட்ட! உன்னோட வேற யாரெல்லாம் வந்திருந்தாங்க” கங்கா கேட்டு முடியவில்லை நொடித்துக்காட்டினாள் முனியம்மா.
 அடடே! அல்லாரும் வரமாட்டமாங்காட்டியும்இந்த மினிம்மா மட்டுமா வந்திருந்தான்னு நென்ச்சிக்கினே அக்கட சூடு! நம்ப சித்தாளுகம்சல, ‘ஒருபுடி சோத்துக்க நாயா அலைஞ்சி லோல்படுற ராசாத்திமாரியம்மாஅந்தா ஓவர் டைமு’ ஏலுமல, ‘ டிரெடிலு வினாயகம்இந்தா பாசஞ்சர் வண்டியில’ வந்து பெரளயத்துல மாட்டிக்கின அம்மாசிக் கெயவன்நம்ம பாடகரு பொணத்தக் கட்டிகினு அயுதானரிக்சாக்கார கவாலிஅம்மாந் தூரம் ஏன்நேத்தக்கி வந்தவ… அந்த ரிசிபத்தினி’ பொன்னம்மா அல்லாந்தா வந்துர்ந்தோம்…”
 கொஞ்சம் தள்ளித்தள்ளிமரத்தடிகளில் நின்று பேசிக் கொண்டிருந்த எல்லோரையும் சுட்டிக் காட்டினாள் முனியம்மா. அவர்களோடுமுனியம்மா சொல்லாவிட்டாலும் - நூறு பேர்களில் இருவராக நின்றிருந்த பரந்தாமன்ஆனந்தனையும் பார்த்தாள் கங்கா. ஆச்சரியமாகவும் இருந்தது.
அந்த தெருவோர தேசியவாதிளைப் பார்க்க சங்கடமாகவு மிருந்தது.
 ‘தே ஆர் ஆல் செய்லிங் இன்த சேம் போட்..ஈவன் டுடே…’ என்று நினைத்துக்கொண்டவள் ‘ சே ! திங்க் பண்ணுவது கூட இங்கிலீஷில்தானா வரவேண்டும்’, என்று தனக்குள் விவாதித்துக்கொண்டே முனியம்மாவி;டம் கேட்டாள்..
ரியலிஎல்லாருமா வந்திருந்தீங்கநா பாக்கலியே. லாஸ்ட் ரோல ஐ வாஸ் சிட்டிங் வித் பிரபுகௌதம் அன் மாலா ரெண்டு மூணு சீட் தள்ளி கல்யாணியும்ரெங்காவும் கூட இருந்தாங்க. அப்பாலமகுடேசம்பிள்ளைமுத்துவேலர்கணபதி சாஸ்திரிகள்சீதாசங்கர சர்மாசாரதா மாமிதங்கம்ஆதி யெல்லாம் கூட வந்திருந்தாளே ! டோன்ட் யூ நோ தெம்?...”
 “ந்தா இந்த டஸ்ஸபுஸ்ஸிஇங்கிலீசெல்லாம் நம்ம கைல வாணாம் தாயீ! நீங்கள்ளாம் வெள்ளையும் சொள்ளையுமா சோபால குந்திகினு இர்ந்தீங்கநாங்க எப்பவும்போல அப்டி ஓரஞ்சாரத்துல ஒண்டிக்கினு எட்டி எட்டி பாத்துகிணு இர்ந்தோம்இன்னா பண்றதுபாயாப்போன மன்சு கேக்லியே?
 அது செரீஅல்லாரும் பேசவுட்டு கடசீல அவுரு வந்துஅது இன்னாதது ஏற்புரையாஆங்அதான்சிங்க மாட்டமா சொம்மா வெளாசித் தள்ளிகினாரேஆமாஅது இன்னாத்துக்கும்மே இப்பப்போயி அல்லாரும் தெகிரியமா இந்தி பட்ச்சிக்கணும்ன்றாரு? ..என்னிய மாரி மினியம்மால்லாம் இன்னிமேல இந்திபட்சி இன்னா ஆவப்போவுது ன்றாரூ…!
 “ஸீ!முனிம்மாஅட்லீஸ்ட் நெக்ஸ்ட்செஞ்சுரியிலாவதுஸீவாட் ஐம் கோயிங் டு சே ஈஸ்…” முனியம்மாவிடமும்  தன் இயல்பில் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டதை உணர்ந்துதனது நாகரிகமற்ற செயலுக்கு உண்மையிலேயே வருந்திநாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திவிட்டாள் கங்கா.
-----------------------------------------------------------------
 போதும்,
 கங்காவும்மற்ற உயிருள்ள பாத்திரங்கள் யாவும்சற்றுநேரம் அப்படியே உறைந்து நிற்கட்டும். நாம்அவர்களைப் படைத்தளித்த நமது அற்புதப் படைப்பாளியோடு சிறிது நேரம்-உரிமையோடு-பேசிவருவோம்.

Google+ Followers

Related Posts Plugin for WordPress, Blogger...