மை வச்சதுக்குப் பதிலா மருதாணி வச்சிருக்கலாம்! (வாசகர் மீம்ஸ்)

மை வைக்கிறதுக்கு பதிலா 
மருதாணி வெச்சாலாவது 
வரிசைல நின்னு காய வைச்சிடலாம்... 
மோடி ஜி 
உங்களுக்கு Creativity பத்தல....
-ஆர்த்தி ரவிசங்கர்


ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் -
ரிசர்வ் வங்கி # அது ஏடிஎம்- பணத்தை வச்சுட்டு சொல்லணும்....
எப்ப பாரு எதாது பேசிட்டு
- கமல் காம்




சாயம் போனால் 
அது நல்ல நோட்டு 
சாயம் போகா விட்டால் 
அது கள்ள நோட்டு  
என்னடா நடக்குது இங்க....  
மட்டமான மையில 
அவசர அவசரமா அடிச்சிட்டு இப்போ அத எப்படி மேச் பன்றானுங்க!! 
--சூரியாகுமார்



ஜானி ஜானி yes பாப்பா.. 
பேங்குல பணம் .. No பாப்பா .. ஏடிஎம்ளையும் No பாப்பா.. 
நாளைக்கு சோத்துக்கு... 
ஹா... ஹா .... ஹா.... 
-ஷேக் பரீத்



கையில 
மை வைத்திருந்தால் 
விஜய் மல்லையா 
நாட்டை விட்டு ஓடாமல் தடுத்திருக்கலாம்.
அட போங்கப்பா... 
- விஜயசங்கர் ராமச்சந்திரன்




சாயம் போனாதான் 
நல்ல நோட்டுன்னு சொல்றீங்க...நாளபின்னே...
சாயம் போயி வெளுத்துடுச்சி...
வாங்க மாட்டோம்ன்னு 
எவனாச்சும் சொன்னா..
கொமட்டுலயே குத்துவோம் பார்த்துக்க..
-கருப்பு கருணா




நரேந்திரமோடி 
பின் தாமோதர்தாஸ் 
பின் துக்ளக்...!
- சதன் தக்கலை



அனைத்து சங்கீஸும் ஒரே டயலாக் சொல்றாங்க.“ இராணுவ வீரர்கள் பனி மழை வெயிலில் வாழ்கிறார்களாம். நீங்க ஏன் வங்கியில் நிற்க கூடாது ?” என கேட்கிறார்கள்.சரி இப்படி செய்யலாம்,இராணுவ வீரர்களுக்கு ஒரு மாதம் லீவு விட்டுடலாம். சங்கீஸ் எல்லோரும் எல்லைக்கு போயிடுங்க. நாங்க எல்லோரும் வங்கி வரிசையில் நிற்கிறோம்!டீல் ஒகேவா?
- பிரதாபன் ஜெயராமன்

எவ்வளவு நாளா இங்க பிச்சை எடுக்கிறீங்க???
பிச்சையா நானா, நான் இந்த பேங்ல வேலைபாக்கறேன் சார். மூணு நாளா குளிக்க கூட நேரமில்லாம வேலை, அதான்... 
-பிடல் சேகுவேரா, இராசிபுரம்
------------------------------------------------------ 

 (சிரிச்சுத்தான் ஆத்தணும்... வேற வழி...?)

அரை வேக்காட்டுத் தனமான அறிவாளிகள்
என் உயிருக்கு ஆபத்துஎன்று மோடி அழுகிறார். இது முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறை இல்லை. மக்களின் கொந்தளிப்பினைப் பார்த்து பயந்து இருக்கிறீர்கள்

நமது செல்வாக்கு சரிந்து போய்விட்டது என்பதை உணர்ந்து அழ ஆரம்பித்து இருக்கிறீர்கள்.“தலித்துகள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள். என் மீது தாக்குதல் நடத்துங்கள்என்று சொன்னீர்கள்

இப்போது, “ஊழலை ஒழிக்க என் உயிரினையும் கொடுப்பேன்என்று சொல்லுகிறீர்கள். இது எல்லாம் உங்களின் இயலாமையை காட்டுகிறது.

ஆரம்பத்தில் உங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகள், சினிமா பிரபலங்கள் இப்போது உங்களை போன்றே பயந்து இருக்கிறார்கள்.அரசியல் ஸ்டண்டுக்காக கொண்டுவரும் எந்த நடவடிக்கையையும் மக்கள் புறம் தள்ளுவார்கள்

நீங்கள் கொண்டு வந்தது கறுப்புப் பணத்தை ஒழிக்காது. இது கண் துடைப்பு என்பதை சாமானியனும் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டான்.

புலிவாலை பிடிக்கப் போய், அது உங்களையே பழி தீர்க்க ஆரம்பித்துவிட்டது. முதலாளிகளும் கறுப்புப் பணமும் பிரிக்க முடியாதது. அந்த முதலாளிகளுக்காக எப்போது நீங்கள் உலகம் சுற்ற ஆரம்பித்தீர்களோ அப்போதே மக்கள் உங்களை நம்புவதாக இல்லை.

நாங்கள் உழைத்த காசினை பெறக் கூட முடியாமல் பரதேசியாக எங்களை வரிசையில் நிற்க வைத்து கொடுமை செய்யும் உங்கள் நிர்வாகம் தரை தட்டி நிற்கிறது. உங்களை வெற்றி பெறச் செய்ய ஒரு முறைதான் வரிசையில் நின்றோம்

எங்களுக்கு கூலியாக தினம்தோறும் வரிசையில் நிற்க வைத்து அழகு பார்க்கும் உங்களை என்னவென்று சொல்லுவது?

நீங்கள் ஏன் அழ வேண்டும்? உங்களால் நாங்கள் அழுதுகொண்டு இருக்கிறோமே, போதாதா?“இது நல்ல திட்டம்

ஆனால் முன் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்என்கிற அரைவேக்காட்டுத்தனமான அறிவாளிகள் இருக்கும் வரை உங்கள் காட்டில் மழைதான்.நடத்துங்கள். சர்ஜிக்கல் ஆபரேஷன் வெற்றி. ஆனால், நாங்கள் செத்துக் கிடக்கிறோம். வாய்கரிசிக்காகவாவது சில்லறை கிடைக்குமா?
- எவிடென்ஸ் கதிர்  (நன்றி – தீக்கதிர் நாளிதழ்(17-11-2016)
-----------------------------------------------------------

5 கருத்துகள்:

  1. இந்த வாரம் வங்கியில் பணம் வாங்குபவர்களுக்கு கையில் மை வைக்கப்படும் அடுத்த வாரம் வருபவர்களுக்கு நெற்றியில் நாமம் இடப்படும்

    பதிலளிநீக்கு
  2. இடுக்கண் வருங்கால் நகுவதில நம்மவர்களை அடிச்சுக்க முடியாது

    பதிலளிநீக்கு