தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

புதன், 24 ஆகஸ்ட், 2016

தொலைக்காட்சிப் பட்டிமன்ற ஒளிப்பதிவை நேரில் பார்க்க வருக!

  

   வரும்  05-9-2016 திங்களன்று காலை 9மணிக்கு       
     கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள                  
பட்டிமன்ற ஒளிப்பதிவுக்காக சென்னை வருகிறேன்.

27-8-2016 சனிக்கிழமை மாலை 6மணி,
தேனாம்பேட்டை கலைஞர் அறிவாலயத்தில் ஒளிப்பதிவு.

பார்க்க விருப்பமுள்ளோர் நேரில் வருக!

(உடனே, “இப்பல்லாம் லியோனி பட்டிமன்றத்துக்குக் 
கூட்டம் அதிகம் வர்ரதில்லையோ? முத்துநிலவன் கூட்டத்துக்கு ஆள்சேர்க்கிற மாதிரி தெரியுதே?” என்று நினைக்க வேண்டாம். தொலைக்காட்சிப் பதிவுக்கு வருகிற கூட்டம் என்றும் குறையாது. இன்றும் தமிழர்கள் வாழும் எந்த இடத்திலும் அவருக்கொன்றும் கூட்டம் குறைவதே இல்லை என்பதை உலகறியும்)

நான் அவருடன் எனக்கியைந்த தலைப்புகளில்தான் 
பேசுவேன் என்பதை அவரறிவார். 
இப்போது அழைத்திருக்கிறார், 
செல்கிறேன், அவ்வளவே!

அதிகம்பேர் பார்த்து மகிழ்ந்த,
எமது தொலைக்காட்சி உரைப்பதிவுகள் இரண்டை
பார்க்காத நண்பர்கள் பார்க்க, (அ)  மறுபடி பார்த்து மகிழ
இங்குத் தருகிறேன்-
2014-பொங்கல் பட்டிமன்றம் பார்க்க- http://valarumkavithai.blogspot.com/2014/01/blog-post_13.html

2016-மேதினப் பட்டிமன்றம் பார்க்க-http://valarumkavithai.blogspot.com/2016/04/blog-post_30.html

5 கருத்துகள்:

  1. 27-8-16 சனிக்கிழமை மாலை சென்னையில் ஒளிப்பதிவு!
    மறுநாள் காலை புதுக்கோட்டை வந்துவிடுவேன் மா! அதுவும் இந்த மாத வீதியில் சிறப்பான ஏற்பாடுகள் நான் வராமல் இருப்பேனா?

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... ஊரில் இருந்தால் வந்திரலாம்தான்....
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு