தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

சனி, 13 ஆகஸ்ட், 2016

அறிவொளி வெள்ளிவிழாப் படங்கள்!


இந்தப் படங்களுக்கு வசனம் தேவையில்லை!


-- தினமணிச் செய்தி --
அறிவொளி இயக்கத்தின் வளர்ச்சிக்கு தன்னார்வலர்களே காரணம்
அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாக தொடர்கல்வி இயக்கம், வளர்கல்வி இயக்கம் என மாவட்டத்தில் அதன் செயல்பாடுகள் பரந்து விரிந்ததற்கு தன்னார்வத் தொண்டர்களின் தன்னலம் கருதாத உழைப்பே காரணம்  என்றார் அரசின் முன்னாள் முதன்மைச் செயலரும், புதுகை மாவட்ட முன்னாள் ஆட்சியருமான ஷீலாராணிசுங்கத்.
புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் . மணவாளன் தலைமையில் வெள்ளிவிழா மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது ராஜ்குமார் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அறிவொளி இயக்கம் குறித்து அமெரிக்க ஆய்வாளர் பிராங்க் () பிரான்சிஸ்கோடி எழுதிய லைட் ஆப் நாலெட்ஜ் எனும் ஆங்கில நூலை வெளியிட்டு ஷீலாராணிசுங்கத் மேலும் பேசியது:
 கடந்த  1991-ல் தொடங்கப்பட்ட அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாக தொடர்கல்வி இயக்கம், வளர்கல்வி இயக்கம், ஆரோக்கிய இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், சிட்டுக்கள் மையம், துளிர் இல்லம் என மாவட்டத்தில் அதன் செயல்பாடுகள் பரந்து விரிந்ததற்கு தன்னார்வத் தொண்டர்களின் தன்னலம் கருதாத உழைப்பே காரணம். அதில் ஆட்சியராக  ஒரு கருவியாக மட்டுமே நான் இருந்தேன். இன்று பாமர பெண்களெல்லாம் இம்மேடையில் துணிச்சலாக முழங்கியதைப்பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இதுமட்டும் போதாது. பெண்கள் மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அறிவொளி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா பேசுகையில், கல்வி முறையில் அரசுக்கும் நமக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளனதவறான கல்விக் கொள்கையால் நமது அரசுப் பள்ளிகள் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மேட்டுக்குடிகள் மட்டும் உயர்கல்வி பெற்றால் போதும். மற்றவர்கள் அவரவர் தொழில் கல்வியைக் கற்கலாம் என்ற குலக்கல்வி முறையை திணிப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது. எனவே, உடனடியாக நாம் களத்தில் இறங்க வேண்டும். அரசுப் பள்ளிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிரான்சிஸ்கோடி, அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா, பொதுச்செயலர் . அமலராஜன், கவிஞர் நா. முத்துநிலவன், வட்டாட்சியர் சி. ஸ்டாலின், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சி. கோவிந்தசாமி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம். முத்தையா உள்ளிட்டோர் பேசினர்முன்னதாக வெளியிடப்பட்ட நூலின் முதல் பிரதியை எஸ்..கருப்பையா பெற்றுக்கொண்டார்
--நன்றி - தினமணி நாளிதழ், 13-8-2016 திருச்சி பதிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக