2016 - பதிவர் சந்திப்பு எங்கே? எப்போது?


தமிழ்வலைப்பதிவர்களின் 4ஆவது சந்திப்பை 11-10-2015 அன்று புதுக்கோட்டையில் நடத்தினோம். இதுபற்றிய செய்திகளை அறியவென்றே ஒரு வலைப்பக்கத்தையும் உருவாக்கினோம். எனது பக்கத்திலும் தொடர்ந்தது.

விழாத்தொடர்பான அறிவிப்புகளைப் பார்க்க
அழைப்பிதழ் - 
http://valarumkavithai.blogspot.com/2015/10/2015.html


மேலும் வலைப்பதிவர் சந்திப்பு என கூகுள் இமேஜில் இட்டுப் பாருங்கள் அனைத்து அழைப்பிதழும் காணக்கிடைக்கும்.


இதற்கு முந்திய 3ஆவது சந்திப்பு மதுரையிலும்,                           
1,2ஆம் சந்திப்புகள் சென்னையிலும் நடந்தன.

இனி 5ஆவது சந்திப்பு எங்கே? எப்போது? என்று    
- 4ஆவது சந்திப்பை நடத்திய எங்களிடமே 
வலை நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்...
பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கிறோம்!

நண்பர்கள் தங்கள் யோசனைகளைச் சொன்னால் நல்லது. 
எனக்குத் தோன்றிய சில யோசனைகள்
வரும் ஆகஸ்டு-13,14 சனி-ஞாயிறு நாள்களில் புதுக்கோட்டையில் மூன்றாவதுஇணையத்தமிழ்ப் பயிற்சிமுகாம்-2016” நடத்திடத் திட்டமிட்டு வருகிறோம். அதற்குள் இதுபற்றிய யோசனைகளைத் தெரிவித்தால் விரைந்து திட்டமிட்டு நடத்துவோர்க்கு எளிதாகும்.. நாங்களும் உதவிகள் செய்யக் காத்திருக்கிறோம்.

எப்படிப் பார்த்தாலும் தமிழ் வலைப்பதிவர்களின் ஆண்டுச் சந்திப்பை மாநில அளவில் நடத்துவதற்கு, குறைந்தது ஆறுமாதம் முன்பே திட்டமிட்டால்தான் சிறப்பாக நடக்கும் என்பது எங்கள் அனுபவம் 

எமது யோசனை
(1)  திருமிகு விசு அவர்களின் உதவியுடன், வேலூர்இராமன் அவர்களும், சகோ.கீதா அவர்களும் முன்னெடுத்தால் வேலூரில் நடத்தலாம்.( இதை விசு அவர்களே என்னிடம் சொன்னார்கள்)
(2)  திருமிகு கரந்தை ஜெயக்குமார், முனைவர் ஜம்புலிங்கம்,  ஹரணி அய்யா முதலானோர் தஞ்சையில் நடத்தலாம்.
(3)  திருமிகு தனபாலன்  திண்டுக்கல்லில் நடத்தலாம்.
(4)  திருமிகு இளங்கோ முன்னெடுத்தால் திருச்சியில் நடத்தலாம்.
(5)  ஏற்கெனவே இருமுறை நடத்திய சென்னை நண்பர்களோ, ஒருமுறை நடத்திய மதுரை நண்பர்களோ மீண்டும் நடத்திட முன்வந்தால் அனுபவ முத்திரை அழகாக இருக்கும் தானே?
(6)  இவர்களில் யார்நடத்தினாலும் நாங்கள்புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள்உதவத் தயாராகவே இருக்கிறோம்
இதில் நமது சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, வேலூர் மற்றும் பிற மாவட்ட அனைத்து -உலகுதழுவிய- தமிழ்வலைப் பதிவர் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

எப்படியும் 2016 சந்திப்பை நடத்திட வேண்டுமல்லவா?
அதற்கு இப்போதே திட்டமிட்டால்தானே 5மாதமாவது எடுத்துக்கொண்டு, சிறப்பாக நடத்த முடியும்?

காலமோ சிறிது
கடக்க வேண்டிய

தூரமோ பெரிது

30 கருத்துகள்:

  1. என் நன்கொடை ரூபாய் ஒரு ஆயிரம் தயார்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் எமது கில்லர்ஜி
    த.ம.1

    பதிலளிநீக்கு
  3. நானும் ஆவலாக காத்திருக்கிறேன்! சென்னை என்றால் மிகவும் சந்தோஷம்! கலந்து கொள்ள எளிதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. ஈரோட்டில் நடத்துவோம் என்று மதுரையில் நடக்கும் முன்பே சொன்ன நண்பர்களும் இதைப் பற்றி தெரிவிக்கலாமே :)

    பதிலளிநீக்கு
  5. தோழர் உங்கள் ஆலோசனை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் ஜனவரி 2017 தென் மண்டலத்தில் அகில இந்திய மாநாடு. அதையொட்டி ஏராளமான இயக்கங்கள் திட்டமிடப் பட்டுள்ளது. அதனால் இந்த வருடம் என்னால் முன் கை எடுத்துச் செல்வது என்பது சிரமமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. ஆவலோடு காத்திருக்கிறோம் அய்யா! நானே இதை பற்றி ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன். என் மனம் அறிந்து தாங்கள் செய்து விட்டீர்கள். விரைவில் நல்ல முடிவு வரட்டும்..!

    பதிலளிநீக்கு
  7. Kelambitabgaiya kelambitanga...

    பதிலளிநீக்கு
  8. தஞ்சை வலைப்பதிவர் முனைந்தால் தஞ்சையிலேயே நடத்தலாமே அய்யா.

    பதிலளிநீக்கு
  9. யார் அவர்கள் ? விடை சில நாட்களில் தெரிந்து விடுமா அய்யா ?

    பதிலளிநீக்கு
  10. தலைமைப் பொருப்பில் உள்ளோர்கள் முடிவு எடுக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. சீக்கிரம் சொல்லவும்....என்னால் முடிந்த உதவிகள் செய்யக் காத்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மாநிலம் தழுவிய வலைப் பதிவர் மகாநாடு நடத்தத் தேவையான வழி முறைகளை புதுக்கோட்டையில் உங்கள் தலைமையில் நடந்த மகாநாட்டில் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். உங்களுக்கு இருந்த ஒரு பலம், உங்களின் கீழ் பணியாற்ற ஒரு பெரும் படையே இருந்தது. காலநேரம் பாராது அவர்கள் பாடு பட்டார்கள். மகாநாடு பெரும் வெற்றியடைந்தது.

    அந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து அங்கு கலந்து கொண்ட பதிவர்கள் அனைவரும் மலைத்து விட்டது உண்மை. அந்த மலைப்பு விளைவித்த கருத்து "இனி யாரால் இப்படிப்பட்ட விழாவை எடுத்து நடத்த முடியும்" என்பதே.

    ஏனெனில் எங்கு யாரால் இந்த விழா நடத்தப்பட்டாலும் அதை புதுக்கோட்டை விழாவுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியாது. அந்த அளவிற்கு விழா நடத்த ஒரு நல்ல தலைமையும் அவருக்கு உதவியாக ஒரு சேவைப் படையும் வேண்டும்.

    பல மாவட்டங்களில் இதற்கான வசதிகள் இருக்கின்றன. ஆனால் மனம் வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இதற்கு முன் மூன்று முறை பதிவர்கள் மகாநாடு நடந்திருக்கிறது. ஆனால் அவை பதிவுலக சரித்திரத்தில் இடம் பெறவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி. அதே போல் நெல்லையிலும் ஒரு சிறிய அளவில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது.

    நமது மூத்த பதிவர் கவிஞர் ராமானுஜம் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார். மாவட்டங்கள்தோறும் பதிவர் அமைப்புகள் முறையாக ஏற்படுத்தப்படவேண்டும் என்று. ஆனால் அத்தகைய அமைப்பு இல்லாததால் அடுத்த மாநில பதிவர் மகாநாடு நடத்த யாரும் முன் வரத் தயங்குகிறார்கள்.

    தலைமை தாங்க மன உறுதி கொண்ட ஒருவர் வேண்டும். உழைக்க ஒரு படை வேண்டும். செலவு செய்ய பொருள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அய்யா! வணக்கம்
    தங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. விரைவில் நல்ல அறிவிப்புவரும் என்ற. நம்பிக்கையில் நானும் காத்து இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. தஞ்சையில் தான்... முயற்சி செய்வோம் அய்யா...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஐயா...
    நல்லதொரு ஆரம்பம்..
    ஈரோடு அல்லது தஞ்சையில் நடத்த முன் வந்தால் விழா சிறக்கும் என்பதில் ஐயமில்லை...
    நல்லதொரு முடிவு எனும் எதிர்பார்ப்பில்...
    ஐயாவின் முயற்சி இவ்வாண்டு பதிவர் சந்திப்பில் முடிய வேண்டும்..

    பதிலளிநீக்கு
  17. தஞ்சையில் செய்தால் நன்றாக இருக்கும்.. ஜெயக்குமார் ஐயா நட்புக்களுடன் கலந்து பேசி முடிவெடுத்தால் நல்லது... விரைவில் முடிவு செய்யுங்கள் ஐயா... நாங்கள் கை கொடுப்போம்.

    பதிலளிநீக்கு
  18. என் கருத்தை என் பக்கத்தில்
    பதிவு செய்துள்ளேன்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  19. பதிவர்கள் மா நாடு எங்கு நடந்தாலும் பதிவர்கள் சிறக்க நடைபெறும். நல்ல உள்ளங்கள் ஒன்று சேரட்டும். என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா கந்தசாமி சொல்வது போலச் சிறந்த தலைமையும், பூரண மனதோடு உழைக்கும் நண்பர்களும் சேர்ந்தால் தமிழ் மணக்கக் கேட்பானேன்.

    பதிலளிநீக்கு
  20. தமிழ்நாட்டில் எல்லோரும் எளிதாக வரும் இடமாக தேர்ந்து எடுக்கலாம். உதரணாமாக, சேலம், பாண்டி, மாயவரம் இப்படி!

    இல்லை இல்லை! மாயவரம் வேண்டாம், சரி வராது, அதுக்கு பதில் மயிலாடுதுறையில் வைத்துக் கொள்ளலாம்!

    BTW, Why not Tindivanam?

    பதிலளிநீக்கு
  21. எங்கிருந்தாலும் இந்த அணில் இளநீரோடு வரும் என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. கந்தசாமி ஐயா சொன்னது போல தங்களின்சீரிய தலைமையில் கட்டுக் கோப்பாக நடந்த புதுக் கோட்டை வலைப்பதிவர் திருவிழா என்றும் மறக்க இயலாது. நல்ல நேரத்தில் நினைவு படுத்தி உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  23. நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லாபுதன், ஜூலை 20, 2016

    யாருங்க முன் எடுத்து செய்வது?

    பதிலளிநீக்கு
  25. நம்பள்கி ஐயா, மாயவரம், மயிலாடுதுறை இரண்டும் ஒன்றுதான்...
    எந்த இடத்தில் நடத்தினாலும் சீக்கிரம் தொடங்குங்கள்..
    காலம் மிக மிக்க குறைவாக உள்ளது...
    அனைவரையும் நேரில் சந்திக்க வாய்ப்பு தாருங்கள்..

    பதிலளிநீக்கு
  26. மூத்த வலைப்பதிவர் கவிஞர் எஸ்.ரமணி (தீதும் நன்றும் பிறர்தர வாரா) அவர்கள் அடிக்கடி சொல்வது போல, முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும், வலைப்பதிவர் சந்திப்பினை தொடர்ந்து நடத்திட வேண்டும். ஆனால் நடைமுறையில் அவரவர் ஃபேஸ்புக் நண்பர்கள் குழுவுக்குள் மட்டுமே சந்திப்புகள் வைத்துக் கொள்கிறார்கள். வலைத்தளம் ஒரு பெரிய வட்டம்; ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவை குழுக்களாக ஒரு சிறிய வட்டத்தில் இயங்குவன. முன்புபோல் வலைப்பதிவுகளில் செய்தி பரிமாற்றங்கள் இல்லை. உதாரணத்திற்கு ‘வீதி’ கூட்டங்கள் பற்றிய செய்திகள், அழைப்பிதழ்கள் வாட்ஸ்அப்பில் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

    கீழே நான் சுட்டியுள்ள முனைவர் ப.கந்தசாமி அய்யா அவர்கள் சொன்ன கருத்துக்களை அப்படியே வழி மொழிகின்றேன்.

    // மாநிலம் தழுவிய வலைப் பதிவர் மகாநாடு நடத்தத் தேவையான வழி முறைகளை புதுக்கோட்டையில் உங்கள் தலைமையில் நடந்த மகாநாட்டில் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். உங்களுக்கு இருந்த ஒரு பலம், உங்களின் கீழ் பணியாற்ற ஒரு பெரும் படையே இருந்தது. காலநேரம் பாராது அவர்கள் பாடு பட்டார்கள். மகாநாடு பெரும் வெற்றியடைந்தது.//

    // தலைமை தாங்க மன உறுதி கொண்ட ஒருவர் வேண்டும். உழைக்க ஒரு படை வேண்டும். செலவு செய்ய பொருள் வேண்டும்//

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் ஐயா.இந்த சந்திப்பு தான் எனக்கு முதல் அனுபவம் ஐயா.எனக்கு மட்டும் அல்ல எனது சகோதரிகளுக்கும் முதல் அனுபவம் ஐயா.இந்த சந்திப்பு ஈரோடு,கோவை,திருப்பூர் மற்றும் நாமக்கல் போன்ற பகுதிகளில் நடத்தினால் நாங்களும் கலந்துக் கொள்வோம் ஐயா.

    நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  28. இந்த முறை பதிவர் சந்திப்பு நடப்பது சந்தேகத்குரியது தான்.....

    பதிலளிநீக்கு
  29. ஐயா பதிவர் சந்திப்பு குறித்த அறிவிப்பு ஏதேனம் உண்டா?

    பதிலளிநீக்கு