திங்கள், 20 ஜூன், 2016

இன்றைய நம் உலகமே, வெற்றிபெற்றவர்களின் பின்னால் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது, அவர்கள் எத்தகைய கேவலமான பின்னணியில் அந்த வெற்றியைப் பெற்றிருந்தாலும்!

ஆனால், தோல்விகளில் இருந்துதான் பற்பல சாதனையாளர்கள் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை நுட்பமான பார்வையுள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும்!

குறிப்பாக நமது கல்விமுறை, தோல்வியாளர்களை உற்பத்தி செய்வதற்காகவே -அல்லது எப்படியாவது, என்ன அயோக்கியத் தனம் செய்தும் வெற்றிபெற வேண்டும் என்பதைக் கற்பிப்பதற்காகவே- பள்ளிகளை உற்பத்தி செய்கிறது!

இதிலும் குறிப்பாக, நம் கல்விமுறையில் தோற்றுப் போனவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள், ஆசிரியர்களைப் பழிவாங்கவே பயன்படுகின்றன.

எனவே வெற்றியில் மகிழ்வதும், தோல்வியில் துவள்வதுமே மாணவ உலகிற்கு அவர்கள்  தரும் கொடை!

வெற்றிபெற்றவர், தோல்வியடைந்தவர் இருவரைப்பற்றியும் கவலைப்பட யாராவது இருக்கிறார்கள்! ஆனால், பள்ளியில் படித்தும் தேர்வே எழுதாமல் காணாமல் போனவர்களைப் பற்றி, இதுவரை யாரும் கவலைப் பட்டதில்லை!
புதுக்கோட்டை பதிவர்  திருவிழாவில்
ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு  நினைவுப் பரிசு வழங்குகிறார் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்.
பின்னால்...திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
------------------------------------------------------ 
 நுட்பமான தமிழறிஞரும்,
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநரும்,   
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான ,
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்
தேர்வெழுதாமலே காணாமல் போகும் நம் குழந்தைகளைப் பற்றிய ஓர் ஆய்வைத் தமது வாழ்விலிருந்தே 
வரைந்திருக்கும் ஓவியம் அற்புதமானது!

படியுங்கள், நமது கல்விமுறை மேலும் புதிய வழித்தடத்தில் பயணிக்கட்டும்! அவர்கள் வாழ்க!


4 கருத்துகள்:

 1. படித்தேன் அய்யா ... எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு ... பகிர்ந்தமைக்கு நன்றி ... http://ethilumpudhumai.blogspot.in/

  பதிலளிநீக்கு
 2. இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன் ஐயா

  பதிலளிநீக்கு
 3. படிக்கிறேன் ஐயா.

  இணைப்பு தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அருமையான கருத்து. ஃபெயிலியர் இஸ் த ஸ்டெப்பிங்க் ஸ்டோன் ஃபார் சக்ஸஸ். இணைப்பிற்குச் சென்று வாசித்தும் விட்டோம். மிக நல்ல நல்ல கருத்துகள். பகிர்விற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...