புதிய தலைமுறையில் வந்த எனது தேர்தல் பாடல்

புதுக்கோட்டை அறிவொளி இயக்கத்தில் நான் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களில் ஒருவனாகப்  பணியாற்றிய போது(1989-91) எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி ஷீலா ராணி சுங்கத் அவர்களின் வழிகாட்டுதலில் நான் எழுதிய சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி எனும் பாடல் மாவட்ட ஆட்சியரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் வழி இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழி-இசை பெயர்க்கப்பட்டு வலம் வந்தது. 

அந்த நினைவுகளோடு 2011இல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி சுகந்தி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தேர்தல் ஆணையத்தின் வாக்களிப்பது நம் கடமை அது இந்தியர் ஒவ்வொருவரின் உரிமை எனும் கருத்தமைய நான் எழுதிக்கொடுத்த பாடல் இது. 

ஈசன்திரைப்படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாடலைப் பாடிப் புகழ்பெற்றிருக்கும் உண்மையில் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சையில் திருமணமாகிப் போயிருக்கும்- தஞ்சை செல்வி பாட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கம்பிவட (கேபிள்) தொலைக்காட்சிகளில் ஒளி-ஒலிக் காட்சியாகத் தற்போது வலம் வந்த எனது பாடல்கள்..

 -------------------------------------------------------------------------------  
தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா?
தேர்தல் பாடல் : நா.முத்து நிலவன்

தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா? -ஏ மாமா
ஓட்டுப்போட நீங்க மறக்கலாமா?

நாம ஓட்டுப் போட்டுத் தானா
நாடு திருந்தப் போகுது?ன்னு
அலட்சியமா நீங்க இருக்கக் கூடாது மாமா!  ஆட்சி
அமைவதிலே உரிமையத்தான் விட்டுக் குடுக்க லாமா?
                                        (தும்பை விட்டு)
யாரோ வந்து செய்வாங்கன்னு
யாரோ வந்து தருவாங்கன்னு
எதுலயுமே கலந்துக்காம இருந்தாஎன்ன ஆகும்?அப்புறம்
குத்துது’‘குடையுதுனு கத்தும் நிலைமை ஆகும்!
                                        (தும்பை விட்டு)
மக்களாட்சி நம்ம நாடு
ஜனநாயகத் தாய் வீடு
இந்தப் பெருமை உன்னால கெட்டுப்போகணுமா?-உனது
ஓட்டாலே நாட்டுக்கே பெருமைஆகணுமா?
                                        (தும்பை விட்டு)
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
சரியாக ஓட்டுப் போடுங்க!
– பாடல்;: -நா.முத்து நிலவன்

சத்தியமா ஓட்டுப் போடுங்க – அண்ணே
சரியாக ஓட்டுப் போடுங்க
நிச்சியமா ஓட்டுப் போடுங்க – அக்கா
நேர்மையாக ஓட்டுப் போடுங்க ஆ…ஆ…ஆ…

‘ஓட்டுப் போட மாட்டேன் – அது

உதவாத வேலை’ யின்னு
உக்காந்து கதைபேசும் உருப்படாத மனுசரால
ஒருத்தருக்கும் பயனில்லீங்க… ஆமாங்க…
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க

ஓட்டுப் போட காசு வாங்கி

நாட்ட அடகு வைக்காதீங்க
உரிமைகள விட்டுத்தந்து கடமைகளை மறக்காதீங்க
உங்கஓட்டு உங்கஉரிமை.. ஆமாங்க… 
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க

நம்மை ஆளும் தலைவர்களை

நாமதான தேர்ந்தெடுக்கணும?; - இந்த 
ஜனநாயக வரலாற்றின் நாயகரே நீங்கதானே?
உங்கள் கடமை உங்கள் வாழ்க்கை --அட ஆமாங்க
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க 
--------------------------------------------------------------------------------------------------------------------------- 
வெளியிட்டமைக்கு நன்றி:
புதிய தலைமுறைவாரஇதழ் ஏப்-14, 2011.

9 கருத்துகள்:

  1. இருபாடல்களும் அருமை அண்ணா. நீங்க பாடி வெளியிட்டால் கேட்க நன்றாக இருக்குமே :)

    பதிலளிநீக்கு
  2. தேர்தல் கவிதைகள் இரண்டுமே அருமை.
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல்கள் சிந்தனையைய் தூண்டும்

    பதிலளிநீக்கு
  4. தலைவர் சகலகலா வல்லவர் போல பல துறைகளில் அசத்துகிறார்.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. எளிமையாக அருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. காலத்தேவை கருதிய கருத்தான பாடல். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா நண்பரே
    அருமையான பாடல் ....
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமை ஐயா.. "சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி" பாடலை நான் சிறு வயதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த பொழுது கேட்டுள்ளேன். அதை இயற்றியது தாங்கள் தான் என்று இன்று தான் அறிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. இந்த பாடலை பற்றிய எனது பழைய பதிவு => http://wp.me/pOsug-3O

    பதிலளிநீக்கு
  9. அருமை ஐயா விழிப்புணர்வு ஊட்டும் பாடல்கள். திரைப்பட பாடல் மெட்டில் அமையும்போது பலரையும் சென்றடையும். ஆழ்ந்த இலக்கியமாய் இருந்தாலும் எளிமையான நாட்டுபுறப் பாடலாய் இருந்தாலும் எதிலும் முத்திரை பதிக்கும் தங்கள் ஆற்றல் வியக்கத் தக்கது .

    பதிலளிநீக்கு